[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 317 |
| பதிகக் குறிப்பு :- "நீர் மகிழ் கோயிலுளிரே!" என்று கேட்டதற்கு இறைவர் ஊன்றுகோல் அருளி "உளோம் போகீர்" என்றியம்பின வரலாற்றினைப் பற்றிப் பாடியது (3434). | | பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) பிழையுளன....பிழைத்தக்கால் - என் செயலிற் பிழைகளிருந்தால் அவற்றைப் பொறுத்து அருளும் செய்வர் என்ற துணிவினால் பிழை செய்தால்; இது நம்பிகள் மனங்கொண்ட துணிவு; பழி - அடியானுடைய கண்களை ஒளியிழக்கச் செய்தது; படலம் - கண்ணினுள் பார்வைக்குதவும் பகுதி; மறைக்கும் பகுதி என்றலுமாம். இப்பொருளில் படலம் உண்டாக்கிக் கண்ணை மறைத்தாய் என்க; படலம் - படலத்தால்; குழை - காதணி; வடி(காது) - தொங்கிய; தொங்கிய காதுடைமை பழங்கால வழக்கு கோயிலுளாயே நம்பிகள் இறைவரைக் கேட்டது; உளோம் போகீர் - இறைவர் அருளிய விடை; இவையும் இப்பதிகத்துள் வரும் ஏனையவும் சரித ஆதரவுகளாகிய அகச்சான்றுகள்!. "ஊன்றுவதோர் கோலருளி" (10) "ஒன்னலரைக் கண்டாற்போல்" (9) என்பன முதலியவை பார்க்க;- (2) இடை - தலை - பின்வருவன முன் இருந்தன; நடை - ஒழுக்கம்; சிவவாழ்வு;- (3) ஒன்று - வேறொன்றும்;- (4) சேயிழையோ டுடனாகியும் என்று உம்மை விரிக்க. இதனைப் "பெண்பாகம் விழைவடிவிற் பெருமானை" (3434) என்று சிறப்பாக வேறு எடுத்துக் காட்டினார்; சேயிழை - அருட்குறிப்பு - (5) (8) பார்க்க;- (5) பொன் இலங்கு - பொன்னின் நிறம்போல நிறம் விளங்கும்; இலங்கு - உவமவுருபு; இருபாலடியார் - இருபுறமும் ஒழுங்கின் நின்று என்க. நம்பிகளுடன் வந்தாரும் பதியி லிருந்தாரும் என்றலுமாம்; உன்னதம் - பெருமிதமாகிய மகிழ்ச்சி;- (6) மலர் விரிகின்ற; மலர்ந்த - விளங்கும்;- (7) இருந்தீரே - ஏகாரம் வினா;- (8) வார் இடங்கொள் - கச்சு அணிந்த; பாரிடம் பூதம்;- (9) நவிலும் - போன்ற; உவம உருபு; "போய் மகிழ்க்கீழ் இரு" என்று சொன்ன இது நம்பிகள் சபதத்திற்கு முன் இறைவரை வேண்டிக்கொண்டது (3402); சொன்ன எனைக் காணாமே - அவ்வாறு வேண்டிய நான் அறியாதபடி; சூளுறவு மகிழ்க்கீழே என்ன - இது இறைவர் சங்கிலியாருக்கு உணர்த்தியருளியது (3405); இது நம்பிகள் கருதலளவையால் அறிந்த நிலை. தாமும் இறைவருமே அறிந்ததன்றிப் பிறர் அறியாத இதனைச் சங்கிலியார் சேடியர் அறிய வந்தமையின் இறைவர் உணர்த்தினாலன்றி இது விளைந்திராது என்றறிதல். வெதிரேகச் சொல் என்ப; ஒன்னலரைக் கண்டாற்போல் - உளோம் போகீர் என்றுரைத்தல் அன்பிற்கு மறுதலைப்பட்டார்பால் நிகழும் சொல்லாதல் குறிப்பு; நம்பிகள் தோழமை முறையால் இறைவர் செயலை இவ்வாறு பகைமைத் திறம்படப் பொருள் கொண்டு பாடி அருளினும், ஆசிரியர், எல்லாவுயிர்களிடத்திலும் எஞ்ஞான்றும் கருணையே யன்றிப் பிறிது நிகழாத இறைவரது செயலை இவ்வாறு சொல்ல மாட்டாராய் அன்பின் றோற்றம்பட "இணநகிலா மொழியால் ஏதிலார் போல" (3433) என்று இதற்கு உரைவிரித்த நயம் கண்டுகொள்க; இப்பாட்டுச் சரிதத்தின் மிக உயர்ந்த அகச்சான்று; மேல்வரும் பாட்டும் பார்க்க;- (10) மான் திகழும் - மானின் மருண்ட பார்வைபோன்ற பார்வை விளங்கும்; மான் - மான்கண்; ஆகுபெயர்; திகழ் - உவம உருபு; வருபயன்கள் - இவ்வுலகில் வந்தவதரித்ததன் பயனாகிய கன்மானுபவம்; தோன்ற - பொருந்த; உலகமீன்ற - என்றது நிமித்த காரணராந் தன்மை குறித்தது. வெண்கோயில் - திருவெணபாக்கக் கோயிலின் பெயர்;- (11) வெண்பாக்கம் - தலப்பெயர்; இவ்வொருபாட்டில் தெரியவைத்தார்; காதலித்திட் டன்பினொடும் - நம்பிகளின் கண்ணிழந்த கடுந்துன்பத்தினும் பிறழாத அன்பின் உறைப்பு; சீராரும் |
|
|
|
|