318திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  ...ஆரூரன் - நம்பிகளுக்கு ஆரூரன் எனப் பெயர்போந்த காரணம் விளங்கிற்று; திருவாரூர்ப் பெருமானது அடிக்குடியாகிய பரம்பரையாதலின் பெற்றோர்களால் இப்பெயர் சூட்டப்பட்டதென்பது. முன்னர், "ஆதிசைவ னாரூரன்" (205) என்றதனால் நம்பிகளது பேரனாரும் (பாட்டனார்) இப்பெயர் பூண்டவர் என்பது விளங்கும். ஆண்டும், 150ன் கீழும் உரைத்தவை பார்க்க.
  தலவிசேடம் :- திருவெண்பாக்கம் - தொண்டை நாட்டில் 17வது பதி. நம்பியாரூரது சரிதநிகழ்ச்சிபற்றித் திருவுளம் பூதூர் - உளோம் போகிர்புரம் எனவும் அணிமைபற்றி வழங்கப்பட்டதொரு பதியுமுண்டு. வெண்பாக்கம் வேறு. இவையிரண்டும் இப்போது சென்னைக் குடிதண்ணீர்த் தேக்கமாக்கப் பட்ட பரந்த ஏரியாகிய பூண்டி நீர்த்தேக்கத்தினுள் அகப்பட்டுள்ளன. இங்கிருந்த சிவ மூர்த்திகளை எடுத்து வேறிடத்துத் தாபித்துள்ளனர். திருவுளோம் போகிபுரம் என்றது பழங் கல்வெட்டுக்களிற் கண்ட பெயர்; இக்கல்வெட்டுக்கள் அந்தப் பெயர்க் கோயிலினுட் பல இருந்தன. திருவொற்றியூரினின்றும் கண்ணிழந்த நிலையில் போந்த ஆளுடைய நம்பிகளுக்கு இறைவர் இங்கு ஊன்று கோலருளி "உளோம் போகீர்" என்று அருளி விடுத்த நிகழ்ச்சி புராணத்துட் காண்க. பதிகமும் பார்க்க. சுவாமி - வெண்பாக்க நாதர்; அம்மை - மின்னலொளியம்மை; கனிவாய் மொழி யம்மை; தலமரம் - இலந்தை; பதிகம் 1. ஊன்று கோலுடன் நம்பிகள் திருவுருவம் உண்டு. நம்பிகளுக்கு மின்போல விட்டுவிட்டு அம்மை வழி காட்டியருளினர் என்பர். இத்தலம் திருவள்ளூர் நிலையத்தினின்றும் வடமேற்காய்த் திருப்பாசூர் போகும் கற்சாலை வழி 3 ? நாழிகையளவில் வடக்கில் ஊற்றுக் கோட்டைக்குப் போகிற பாதையில் மட்சாலையில் 5 நாழிகை யளவில் அடையப்பட்டு வந்தது. இப்போது நீர்த்தேக்கத்தினுள் மூழ்கி விட்டபடியால் சென்றடையாத திருவுடனாகி விளங்குகின்றது.
3435
முன்னின்று முறைப்பாடு போன்மொழிந்த மொழிமாலைப்
பன்னுமிசைத் திருப்பதிகம் பாடியபின் "பற்றாய
என்னுடைய பிரானருளிங் கித்தனைகொ லா"மென்று
மன்னுபெருந் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார்,
 

281

3436
அங்கணர்தம் பதியதனை யகன்றுபோ யன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ் பழையனூ ருழையெய்தித்
தங்குவா ரம்மைதிருத் தலையாலே வலங்கொள்ளுந்
திங்கண்முடி யாராடுந் திருவாலங் காட்டினயல்,
 

282

3437
முன்னின்று தொழுதேத்தி "முத்தா"வென் றெடுத்தருளிப்
பன்னுமிசைத் திருப்பதிகம் பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த் திருவூற லமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதின் மணிமாடக் காஞ்சிமா நகரணைந்தார்.
 

283

  3435. (இ-ள்.) முன் நின்று....பாடியபின் - திருமுன்பு நின்று முறைப்பாடு உரைப்பார் போன்று மொழிந்த சொன்மாலையாகிய பன்னும் இசையுடன் கூடிய திருப்பதிகத்தினைப்பாடிய பின்பு; பற்றாய என்னுடைய...என்று -"ஆதரவாகிய என்னுடைய பெருமானாரது திருவருள் இங்கு இத்தனை அளவே யிருந்தது போலும்" என்று உட்கொண்டு; மன்னு....வழிக்கொள்வார் - நிலைபெற்ற பெரிய தொண்டர்களுடன் இறைவரை வணங்கி மேலே வழிச் செல்வாராகி,
 

281