| 3436. (இ-ள்.) அங்கணர்....போய் - அங்கண்மை யுடையாராம் இறைவரது அத்திருப்பதியினை நீங்கிச் சென்று; அன்பருடன்...எய்தி - அன்பர்களுடனே கூடி மேற்சென்று தாமரைகள் மலர்தற்கிடமாகிய தடங்களும் பணைகளும்சூழ்ந்த பழையனூரின்கண்ணே சேர்ந்து; அம்மை திருத்தலையாலே....அயல் - காரைக்காலம்மையார் திருத்தலையினாலே வந்து வலங்கொண்டருளும், சந்திரனை முடியிற்சூடிய இறைவர் திருக்கூத்தாடும் திருவாலங்காட்டின் பக்கத்து; தங்குவார் - தங்குவாராகி, |
| 282 |
| 3437. (இ-ள்.) முன்நின்று....ஏத்துவார் - திரு முன்பு நின்று வணங்கித்துதித்து "முத்தா" என்று தொடங்கியருளிப் பன்னும் இசையினையுடைய திருப்பதிகத்தினைப்பாடி மகிழ்ச்சியுடனே துதிப்பாராகி; அந்நின்று...போய் - அந்நிலைக் கண் நின்று வணங்கி மேலே சென்று; திருஊறல் அமர்ந்திறைஞ்சி - திருஊறல் என்னும் பதியினை விரும்பிச்சென்று வணங்கி; கன்னி....அணைந்தார் - பகைவரால் அழிக்கப்படாத திருமதிலினையும் அழகிய மாடங்களையுமுடைய காஞ்சிமா நகரத்தினை வந்து அணைந்தருளினர். |
| 283 |
| இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. |
| 3435. (வி-ரை.) முறைப்பாடு போல் மொழிந்த தமிழ்மாலை - இப்பதிகத்தினை நம்பிகள் இறைவர்பால் தமது குறைகளை எடுத்தியம்பி முறையிட்டதுபோல அருளினாரன்றி, உண்மையில் அது மகிழ்ச்சியுடன் அன்பு ததும்ப இறைவரது அருளைப் போற்றிப் புகழ்ந்தபடியேயாம் என்று குறிக்கப் போல் மொழிந்த என்றார். "காதலித்திட் டன்பினொடும்" (11) என்றது காண்க; அன்றியும் இப்பதிகம் "கோயிலுளீரே" என்று நம்பிகள் கேட்க, அதற்கு ஊன்று கோலருளி "உளோம் போகீர்" என்று இறைவர் விடையும் அருளிய பின்னர், அவ்வருளிப் பாட்டினைத் தோழமை முறையினாற் பாராட்டிப் போற்றிய திறமும் கண்டு கொள்க. |
| பன்னுமிசை - பன்னுதல் - பலவாறும் எடுத்து இயம்புதல்; இசை - பதிகப் பண்ணாகிய சீகாமரம்; இசை - புகழ் என்றலுமாம். |
| பற்றாய...என்று ஊன்றுகோலருளி "உளோம் போகீர்" என்ற இந்தஅளவே ஈண்டு இறைவரது அருள் போலும் என்று துணிந்து; "அங்கு நாதர்செயருளதுவாக" (3431) என்றவிடத் துரைத்தவை பார்க்க. பற்று - பற்றுக்கோடு; ஆதரவு. ஊன்றுகோல்தானும் ஓர் ஆதரவாக ஏற்றமை குறிப்பு. |
| பெருந்தொண்டர் பெருமை நம்பிகளுடன் பணி செய்துடனிருக்கும் பெரும் பேறு. |
| வழிக்கொள்வார் - மேலே திருவாரூரை நோக்கி வழியிற் செல்வாராகி; முற்றெச்சம்; வழிக்கொள்வார் - போய் - எய்தித் - தங்குவார் (3436) - ஏத்துவார் - போய் - அணைந்தார் (3437) என்று மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க. |
| 281 |
| 3436. (வி-ரை) பழயனூருழை - பழயனூரின்கண்; உழை - ஏழனுருபு எய்தி - சேர்ந்து; பழயனூரும் திருவாலங்காடும் ஒரு பகுதியாகிய ஒன்று சேர்த்துப் பாடப்பெறுவன; 1606 - 2909 பாட்டுக்களும் ழுபழனையுடையார்தாமேழு (அரசு-தாண்) ழுபழயனூராலங்காட்டெம்மடிகளேழு (பிள்) என்ற தேவாரங்களும் பார்க்க.நம்பிகளும் ழுபழயனூர் மேய ஆலங்காடாழு கன்பதும் காண்க. |
| தங்குவார்....திருவாலங்காட்டின் அயல் - பழயனூரினை எய்திய நம்பிகள்அங்குத் தங்காது, மேற்சென்று அணிமையில் உள்ள திருவாலங்காட்டினை நோக்கிச் |