320திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  சென்று அதனுள்ளும் சென்று சேராது, அதன் அயலில் - (அருகாக) ஓரிடத்தில் தங்குவாராகி என்றபடி; திருவாலங்காட்டிற் சேராமைக்குக் காரணம் அம்மை திருத்தலையாலே வலங்கொள்ளும் பெருமை பற்றி என்பார் உடம்பொடு புணர்த்தி ஓதியருளினார். இத்தன்மையினை முன்னர், ஆளுடைய பிள்ளையார் இப்பதியினுட் சேராது புறத்துத்தங்கிய சரிதநிகழ்ச்சிபற்றி அங்கு விரித்து விளக்கினாராதலின், ஈண்டுச் சுருக்கிச் சுட்டினமட்டி லமைந்தார். 2905 - 2909 பாட்டுக்களும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. அம்மை - காரைக்காலம்மையார்; இவ்வாறு அம்மை என்ற மட்டில் கூறியமைவது சைவமரபு; அவரது அளக்கலாகாப் பெருமைபற்றி அவர் பெயரைத் தானும் சொல்லாது அம்மை - எனப் போற்றும் மரபு காட்டப்பட்டது காண்க; முன்னர் "இம்மையிலே புவியிலுள்ளோர் யாருங்காண வேழுலகும் போற்றிசைப்ப வெம்மை யாளு மம்மைதிருத் தலையாலே நடந்து போற்று மம்மையப்பர் திருவாலங்காடாம்" (2907) என்று அருளிக் காட்டிவிட்ட படியால் ஆசிரியர் ஈண்டு அம்மை என்ற மட்டில் அமைத்துக் கூறியமைந்த மரபும் திறமும் கவிநலமும் காண்க. அம்மை மூத்ததிருப்பதிகம் என்ற பெயர்வழக்கும் காண்க. இம்மரபினை ஒட்டியே "‘அறிவானுந் தானே யறிவிப்பான் றானே' என்றோதிய அம்மை ‘அறிவா யறிகின்றான்றானே' எனவு மோதியதூஉ மென்க" என்று எமது மாதவச் சிவஞான முனிவர் சிற்றுரையில் கூறிப்போந்தனர் (போதம் - சூத் 11.)
  திருத்தலையாலே வலங் கொண்ட வரலாறு அம்மையார் புராணத்துட் காண்க. (1778); வலங்கொண்ட என்னாது வலங்கொள்ளும் - என்றது இன்றும் அங்கு அம்மை இறைவர் திருவடிக்கீழ்ப் பாடிக்கொண்டு ஆனந்தஞ் சேர்ந்தெழுந்தருளி யிருக்கின்ற நிலை குறித்தற்கு.
  திங்கள் முடியார் ஆடும் - ஊர்த்துவ தாண்டவம் என்னும் திருவடியை மேலே உயரத்தூக்கி அண்டமுற நிமிர்ந்தாடும் திருக்கூத்தை இயற்றியருளி; ஆடுதல் நித்தியமாய் நிகழ்தலின் ஆடும் என்றார். இத்தலம் இரத்தின சபை எனப்படும்; இறைவரது ஐம்பெருமன்றுகளில் ஒன்று. தலவிசேடம் III - பக். 579 பார்க்க.
 

282

  3437. (வி-ரை.) முன்நின்று தொழுது - பதியின் புறத்து அயலில் திருக்கோயிலை நோக்கியவாறே திருமுன்பு நின்று வணங்கி; முன்னரும் "முன்னின்று - மொழிந்த" என்றார்; கண்ணொளி யிழந்த நிலையாதலின் முன்னிற்றல் மாத்திரையால் அமைந்து அகக்கண்ணாற் கண்டு வணங்கி என்பது குறிப்பு.
  "முத்தா" என்று எடுத்தருளி - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
  பன்னுமிசை - பன்னும் - 3435 பார்க்க. இசை - பதிகப்பண்ணாகிய பழம் பஞ்சுரம்.
  அந்நின்று - அங்கு நின்றும்; அந்நிலையினின்றவாறே; என்றலுமாம்.
  அந்நிலையே என்ற பாடமுமுண்டு.
  திருவூறல் அமர்ந்து இறைஞ்சி - அமர்ந்து - விரும்பி.
  கன்னிமதில் - பகைவரால் அழிக்கப்படாத மதில்; மதில் எடுத்த ஞான்று உள்ளவாறே உள்ளது.
  காஞ்சிமாநகர் முத்தித்தலங்கள் ஏழனுள் ஒன்றாகிய பெருநகர்; தொண்டை நாட்டின் தலைநகர்; என்பன முதலிய பெருமைகள் குறிக்க மாநகர் என்றார்.
  குறிப்பு :- திருவொற்றியூர் எல்லையினைத் தாண்டியவுடன் கண்மறைந்தநிலையில் வழிகொண்ட நம்பிகளது அந்தத் துன்ப நிலையில் வழிச் செலவை இடையில் தங்கவைத்தல் முதலாகிய இடையீடின்றி துன்பம் நீடிக்காது வரலாறு கூறிப்போகும்