[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்321

  கவிநயம் கண்டுகொள்க; நம்பிகள் திருவொற்றியூரினின்றும் புறப்பட்டுத் திருக்காஞ்சி மாநகரம் அணையும் வரையில், ஊன்றுகோ லருளப்பெற்ற திருவெண்பாக்கத்தில் அவ் வருளிப்பாட்டின் பொருட்டு ஒருவினை முடிபுகாட்டி, இயம்பினர் (3433) பாடினார் (3434) என்று வினைமுற்றுத் தந்து முடித்ததன்றி, ஏனைய பதிகளில் எல்லாம் வினையெச்சங்களால் கூறிக்கொண்டு செலுத்திக், காஞ்சியில் ஒரு கண் பெறும் அளிப்பாடு குறிக்க அணைந்தார் என வினைமுற்றுந் தந்து முடித்தல் காண்க.
 

283

  திருவாலங்காடு
  திருச்சிற்றம்பலம்

பண் - பழம்பஞ்சுரம்

 
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழய னூர்மேய
அத்தா வாலங் காடாவுன் னடியார்க் கடியே னாவேனே.
 

(1)

 
பத்தர் சித்தர் பலரேத்தும் பரமன் பழய னூர்மேய
அத்த னாலங் காடன்றன் னடிமைத் திறமே யன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் சிறுவ னூர னொண்டமிழ்கள்
பத்தும் பாடி யாடுவார் பரம னடியே பணிவாரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- பண்டை வினைக ளவைதீர்க்கும் குறிப்புப் பற்றிப் பரமன் அடிமைத் திறமே யன்பாகிப் பாடியருளியது; பதிகம் 3-4-7-8 பாட்டுக்களும், திருக்கடைக் காப்பும் (10) பார்க்க.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முத்தா - இயல்பாகவே பாசங்களினீங்கியரே; முத்தி - சிவானந்த பரபோகப் பெருவாழ்வு; சிங்கமே - தலைமைபற்றிய உருவகம்; சித்தித்திறம் - முத்திநெறி; பத்தர் பலர் - அம்மையார் - ஆளுடைய அரசுகள் - ஆளுடைய பிள்ளையார் முதலாயின பெரியோர்; அடியார்க் கடியேனாவேனே - அடிமைத் திறமே யன்பாகிப் போற்றும் நிலை; முத்தா - முத்தி, சித்தா - சித்தி, பத்தா - பத்தர் - சொற்பின் வரு நிலையாகிய சொல்லணி; தமிழ்நயம்;- (2) பொய்யே செய்து - பொய் வாழ்வு வாழ்ந்து; திருவொற்றியூர் வரலாற்றுக் குறிப்பு; மெய்யா மெய்யர் மெய்ப் பொருளே - சொற் பொருட் பின்வருநிலை;- (3) பாண்டாழ் வினைகள் - பண்டு என்பது எதுகை நோக்கி முதனீண்டு வந்தது; செய்யுள் விகாரம்; ஆழ் - ஆழ்த்தும்; பிறவினை; பாண் - தாழ்ச்சியுமாம். பண்டாழ் (7); பாழாம் வினைகள் (8) பாழாம் - பாழாக்கும் என்றதும் பார்க்க; நம்பிகளது சரிதம் பற்றிய திருவுள்ளக் குறிப்பு; "வேலங்காடு....மறந்தொழிந்தேன்" (5) என்றதும் காண்க; ஆண்டா - ஆண்கொண்டவரே;- (4) மறி மான்; மான் கண்ணைக் குறித்தது; ஆகுபெயர்; மறிநேர்...அழிந்தேன் - நம்பிகளது சரித விளைவும் நிகழ்ச்சிகளும் பற்றிய குறிப்பு; பறியா - பறிக்கலாகாத; வலிய; அறிவே - அறிவுத் திருமேனி; (சித்);- (5) வேல் அங்கு ஆடு - வேல் - வேலின் தன்மையாகிய கூர்மையும் கொலைத் தொழிலும் குறித்தது - ஆகுபெயர்; ஆடு - பொருந்தும்; போலும் என வுவமவுருபாகப் பொருள் கொள்ளலுமாம்; மறந்தொழிந்தேன் - முற்றவும் மறந்தேன்; நெறிமறந்து - மறந்து - "உன் சீலமுங்குணமும் சிந்தியாதே" (தக்கேசி - ஒற்றி - 6) என்ற கருத்து; இப்பகுதி சங்கிலியார் திறத்து நிகழ்ச்சியைச் சிறப்பாயு முணர்த்தி நின்றது;- (6) எண்ணார் - சிவனைச்