| |
| உள்ள திருக்கோயில்களையும் சென்று பணிந்து துதித்து; புற்றிடமாய்... உற்றிருந்தார் - புற்றிடங் கொண்டு நீங்காதெழுந்தருளிய பெருமானது திருவடிகளைப் பிரியாது இடையறாத இன்பம் பெற்று வீற்றிருந்தருளினார். |
| 45 |
| இந்நான்கு பாட்டுக்களும் ஒரு முடிபுகொண் டுரைக்கநின்றன. |
| 3196. (வி-ரை) சிறப்பித்தருளும் திருக்கடைக் காப்பு - முன் பாட்டிற் "சிறப்பித்தார்" (3195) என்றது பதிகத்துள் இன்ன திருப்பாட்டு என்று காட்டியருளியவாறு. |
| பிதாவாக - நினைந்த பெற்றி - மக்கள் "எனக்கொண்டு" (3193) என்று முன்கூறியபடி துணிந்த தன்மை; நினைதல் - துணிதல்; பெற்றி - தன்மை. |
| பெற்றியினால் தம்மை வைத்து - என்று கூட்டுக. வைத்தற்குக் காரணங் கூறியபடி; சிங்கடி யப்பன் என்ற தேவாரத்தின் கருத்தினையும் பொருளையும் விளக்கிக் காட்டியவாறுமாம். |
| தம்மை வைத்தலாவது - தம் பெயரை அவ்வாற்றாற் கூறிப் புலப்படப் பொறித்தல் (முத்திரீ கரித்தல்); என்றே - ஏகாரம் சிறப்பு. |
| நிறப் பொற்புடைய இசை - நிறம் - இசைப்பாடுகள். "நிறம்பயி லிசையுடன்" (2139) "தாளநிலையில் எய்தவைத்த நிறம்" (சிலப். அரங். 26-36 உரை.) இப்பதிகம் தாள நிறைவின் அமைதிபெற வருதல் காண்க. |
| இறைஞ்சுவார் - இறைஞ்சுவாராகி; இறைஞ்சுவார் - எழுந்தருளி என மேல் வரும் பாட்டுடன் கூட்டுக. |
| பிறப்பித்தெடுத்த பிதாவாக - ஈன்று வளர்த்த தந்தையாராகவே; அவ்வாற்றால்வரும் பிதாவல்லாதிருந்தும் அவ்வாறு ஆகத் தம்மை ஆக்கிக் கொண்டு என ஆக்கச் சொல்லின் பொருள் விரித்துக்கொள்க. "அன்பினான் மகன்மை", பாலூட்டலான் மகன்மை, எடுத்தலால் (சுவீகாரம்) மகன்மை என்று பலவாறு வரும் மகன்மை - தந்தை - முறைகள் போலக் கொள்க. ஈண்டுப் பிறப்பித்தெடுத்த பிதாவாகத் தம்மை எண்ணித் துணிந்து கொண்ட முறையால் அப்பன் என்றார் என்பது. |
| 42 |
| திருநாட்டியத்தான்குடி |
| திருச்சிற்றம்பலம் | பண் - தக்கராகம் | 7-ம் திருமுறை |
| பூணா ணாவதொ ரரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன் பேணீ ராகிலும் பெருமையை யுணர்வேன் பிறவே னாகிலு மறவேன் காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் கருதீ ராகிலுங் கருதி நானே லும்மடி பாடுத லொழியே னாட்டியத் தான்குடி நம்பீ. | |
| (1) |
| கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளு மறவாச் சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் திருவா ரூர னுரைத்த பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர் பாடநும் பாவம்பற் றறுமே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக்குறிப்பு : - அருளுரிமை "சிறப்பித்தார் கோட்புலியாரை" (3195) என்றும், "சிங்கடியாரை....தம்மை வைத்தருளி" (3196) என்றும் கூறியவாற்றால் ஆசிரியர் பதிகக் குறிப்புணர்த்தியமை கண்டு கொள்க. |