| சிந்தியாத பகைவர்; முப்புரவாணர்; கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா - கண்ணாய் - காட்டக்காணும் தன்மையுடைய கண் உருவத்தைக் காணும்படி அதனோ டொருங்கியைந்து நின்று காட்டி அவ்வுருவத்தைக் காண்கின்ற ஆன்மாப் போல, அறிவிக்க அறியு மியல்பையுடைய அவ்வான்மா, விடயத்தை யறியும்படி முதல்வன் அதனோடியைந்து நின்று அறிவித்து அறிந்து வருதலால் உலகத்தைக் காக்கின்றவன் (போதம் - 11-சூத்- பிண்டப் பொழிப்பு); "காட்டக்கண் டிடுந்தன்மையுடைய கண்ணுக் கேயுமுயிர் காட்டிக்கண் டிடுமா போல, வீசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவனித்தை, ஆயுமறி வுடையனா யன்பு செய்ய....மாயமெலா நீங்கியரன் மலரடிக் கீழிருப்பன் மாறாத சிவானுபவ மருவிக் கொண்டே" (சித்தி - 11- 1); கண்ணாய் - ஆய் - ஆக்கச் சொல் போல என்று உவமவுருபாய் வந்தது; கண் - காட்டப்படும் தன்மை; கருத்தா - கர்த்தரே - முதல்வரே; காத்தலே கருத்தாக - தொழிலாக - உடையவரே என்றலுமாம்; இமைகள் கண்ணைக்காத்தல் போல உலகத்தைக் காக்கும் இறைவரே என்றலுமாம்; "கண்ணு மாவியு மாம்பெருங் காவலான்" (99) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; திருத்தலாகாதாய் - எவ்வாற்றானுங் குறைபாடெதுவும் இல்லாதவரே!; "ஒன்றாலுங்குறை வில்லை" (தேவா -ஒற்றி - தாண்); பலரும் - "பலர் போற்றும்" (1); பண்ணா ரிசைகள் - அம்மை மூத்த பதிகங்கள் - அரசுகள் பிள்ளையார் இவர்களது தேவாரப்பதிகங்களாகியவற்றின் பண்கள் ; அண்ணா - எல்லாருக்கும் மூத்தவரே; அணுகப் படாதவரே என்றலுமாம்;- (7) வண்டார் குழலியுமை - தல அம்மைபெயர்; விண்டார் - அறத்தின் வழுவியவர்; (விள் - நீங்குதல்); பகைவர்; (விள்-மாறுபடுதல்);- (8) பேழ்வாய் அரவு திறந்த வாயினையுடைய பாம்பு;- (9) ஏழேழ்படி கால் - எழுகின்ற ஏழுவகைப் பிறப்பும்; ஈமப் புறங்காட்டில் ஆடல் புரிவான் - அம்மை மூத்த திருப்பதிகங்கள் பார்க்க;- (10) சித்தர் சித்தம் வைத்த - சித்தரை மனம்வைத்த; சித்தர் - இறைவர்; சித்தி தருபவர்; (1) பார்க்க; சிறுவன் - நம்பிகளது வயதின் இளைமை குறித்தது; பாடியாடுவார் - பாடி அவ்வானந்தத்தை நுகர்ந்தமையால் ஆனந்தக் கூத்தாடுபவர். |
| தலவிசேடம் :- திருவாலங்காடு III - பக். 579 - பார்க்க. திருக்குளம் பெரிது; குளத்திற்கு வடகிழக்கு, கோயிலுக்கு வடமேற்காக இறைவருடன் ஆடியகாளி கோயில் உள்ளது; "ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே" (அரசு - திருநேரிசை); "கொடிய வெஞ்சினக் காளி.....செருக்கழிவுற வழியாக், கடவுளாடலால் வென்றதோர் வடவனங் கண்டான்" (கந்தபு. வழிநடை - 8); இதன் கிழக்கில் ஒரு நாழிகை யளவில் மட்சாலை வழிப் பழயனூர் உள்ளது; இங்கும் சிவன் கோயில் உண்டு. நீலியின் வஞ்சனையால் உயிர்துறந்த வணிகனுக்குக் கூறிய சொற் பிழையாது 70 பேர் வேளாளர் தீப்பாய்ந்து உயிர் கொடுத்த தீக்குழி இப்போது நீலிகுளம் என்ற பெயருடன் ஒரு குளமாக உள்ளது. அதன் கரையில் 70 பேரின் உருவங்களும் நீலியின் உருவமும் உள்ளன. 1080-ம் ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
3438 | தேனிலவு பொழிற்கச்சித் திருக்காமக் கோட்டத்தில் ஊனில்வள ருயிர்க்கெல்லா மொழியாத கருணையினால் ஆனதிரு வறம்புரக்கு மம்மைதிருக் கோயிலின்முன் வானில்வளர் திருவாயில் வணங்கினார் வன்றொண்டர். | |
| 284 |
| (இ-ள்.) தேன்நிலவு....கோட்டத்தில் - தேன் வண்டுகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கச்சிக் காமகோட்டத்தில்; ஊனில்வளர்....திருக்கோயிலின் முன் - |