324திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  கண்ணாளரே!; கச்சி ஏகம்பனே! - திருக்கச்சித் திரு ஏகம்பத்தில் வீற்றிருக்கின்றவரே!; கடையானேன்...என - கடையவனாகிய நான் எண்ணாமற் செய்த பிழையினைப் பொறுத்தருளி இங்கு அடியேன் காணும்படி அழகிய பவளம் போன்ற வண்ண முடையவரே கண் அளித்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு; வீழ்ந்து வணங்கினார் - நிலம் பொருந்த விழுந்து வணங்கினார்.
 

286

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3439. (வி-ரை.) தொழுது...போய் - இது திருக்காமக் கோட்டத்திற் செய்த வழிபாடு.
  அருளால் துதித்து - இறைவரை வணங்குதற்கும் அவரருள் வேண்டும் என்பதாம்; "அவனருளாலே அவன்றாள் வணங்கி" (திருவாசகம்); இனி, ஏனைய பதிகளில் இறைவரை முன்னர் வணங்கிப் பின்னரேஅவ்வழிபாட்டின் றொடர்ச்சியாக இறைவியை வழிபடுதல் வழக்கும் விதி மரபுமாய் நிகழ்ந்தன; மேலும் சிவபெருமானைப் பற்றியன்றி வேறொருவரையும் வணங்காத நியமமுடையவர்கள் எந்தம் பெருமக்களாகிய பரமாசாரியர்கள்; ஈண்டு நம்பிகள் அம்மையாரைத் தனியாக முன்னர் வணங்கினர்; அது அவருக்குக் கண் கொடுத்தற் கேதுவாகத் திருவருளால், நிகழ்ந்த தென்பதுமாம்; "ஊனில்வள ருயிர்க்கெல்லா மொழியாத கருணையினால் ஆனதிரு வறம்புரக்கு மம்மை" என்ற குறிப்புமிது. "நீடு காமங்களவாவர்க் கருளி (1153) என்று இறைவரையும் அதன்முன் மனையறம் புரக்குங் கருணையினால், நண்ணு மன்னுயிர் யாவையும் பல்க" (1148) என்று அம்மையாரையும் கூறிய தன்மைகள் இங்கு நினைவு கூர்தற்பாலன. "மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த விடக்கண் கொடுத்தார்" (3441) என்று இக்குறிப்பினை மேல் வரும்பாட்டிற் காட்டுதலும் காண்க.
  தொல்லுலகம்...முதல்வர் - அளித்தல் - காத்தல் அளித்தலை முதலில் வைத்த குறிப்பு அம்மையாரது கருணையிடமாக இருந்து ஈண்டியற்றும் தொழிற் சிறப்பு. திரு ஏகம்பம் - இறைவர் கோயில். காமாட்சிஅம்மையார் எழுந்தருளிய திருக்காமக்கோட்டம் வேறாகத் தனிக் கோயிலாகவும், இறைவர் எழுந்தருளிய திருவேகம்பம் வேறு தனிக்கோயிலாகவும் உள்ளன; வரலாறுகள் முன்னர்த் திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணத்துட் கூறப்பட்டன. இரண்டிற்கு மிடையே ? நாழிகையளவு இடை உண்டு.
  பழுதில் அடியார் முன்பு புகப் புக்கு பழுதில்அடியார் என்றது இழுதையேன் என்று நம்பிகள் தம்மை உட்கொண்டு கூறியமையால் அவ்வாறு ஏதும் பழுதில்லாதவர்கள் என்று அவர்கொண்ட கருத்து; நம்பிகளை உடன் கொண்டு முன்செல்லும் பேறு பெற்றவர்கள் என்ற குறிப்புமாம். பழுதினை இல்லையாகச் செய்யும் என்றலுமாம்; முன்பு புகப்புக்கு - கண்காணாமையால் அடியார்கள் வழிகாட்டி முன்னே செல்லத் தாம் அவர்கள் பின் சென்று; அடியார்களைப் பின்பற்றிச் செல்லும் முறைப்படி என்ற குறிப்புமாம். திருத்தொண்டத்தொகை யருளியவராதலின் என்ற கருத்தும் காண்க. இக்கருத்தினையே தொடர்ந்து மேல், திருவாரூரிலும் "திருத்தொண்டர் விரவுவா ருடன்கூடி - இடை தெரிந்து....அணைந்தார்" (3458) என்பதும் கருதுக. சிவஞான போதம் 12ம் சூத்திரக் கருத்தும் காண்க.
  பணிகின்றார் - இறைஞ்சி - என - வீழ்ந்து வணங்கினார் எனமேற் பாட்டுடன் கூட்டி முடிக்க.
  பணிகின்றார் - முற்றெச்சம் - பணிகின்றாராகி.