| இழுதையேன் - இழுதை - பொய்; அறியாமை என்றலுமாம்; இழுதை - பேய் என்று கொண்டு பேயனேன் என்றுரைப்பாரு முண்டு. |
| இழுதையேன்...என்மொழிவேன் - பொய்யனாதலின் தேவரீரது திருமுன்பு நின்று ஏதும் சொல்லத் தகுதியுள்ளனல்லேன், என்று காரணக் குறிப்புப் படக்கூறியபடி; "தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின், றன்னெஞ்சே தன்னைச் சுடும்" (குறள்)- தாம்செய்த பொய்யினையும் தாம் வேண்டுவதனையும் உயிர்க்குயிராக உள்ளிருந்தே இறைவர் அறிவாராதலின், எடுத்து அவரறிய மொழிவதற்கு ஒன்றுமில்லை என்ற குறிப்புமாம். பிழையுடன்பட்டு அறிவித்தவாறு; என் - வினா ஒன்றுமில்லை என எதிர்மறை குறித்தது, |
| இறைஞ்சுதல் - அஞ்சலி கூப்பி வணங்குதல். |
| 285 |
| 3440. (வி-ரை.) விண்ஆள்வார்...கண்ணாளா! - விண்ஆள்வார் என்றது மேலாகிய விண்ணுலகத்தினை ஆள்வோராயினும் விடத்தினை மாற்றலாகாது வருந்தினர் என்பது குறிப்பு. மிக்கபெரும் - பெரிய கொடுமை குறித்தது. |
| மிக்கபெரு விடமாயினும் என்று சிறப்பும்மை தொக்கது. |
| கண்ணாளா - அருமைப்பாடு குறித்தது. அருணோக்கம் செய்பவர் என்ற குறிப்பு; "ஆலந் தானுகந் தமுதுசெய் தானை" என்ற பதிகம் பார்க்க. விடமுண்டு அமுதீந்தமை போலப் பிழைபொறுத் தேன்றுகொண்டு கண்ணளிப்பாய் என்பது குறிப்பு. |
| கச்சி ஏகம்பனே - என்பது அவர் வெளிப்பட்டருளும் இடமும், பவனவண்ணா என்பது அவரது வண்ணமும், விடமுண்ட என்பது அவரது தன்மையும் குறித்தன; "மன்ன மவனுடைய நாமங் கேட்டாள்" (தேவா) என்ற திருவாக்குக் கருதுக. பின்னர்த் திருவாரூரிலும் இவ்வாறே இம்மூன்று தன்மைகளாற் பரவியமையும் (3462) காண்க. |
| கடையானேன் எண்ணாத பிழை - பிழை செய்யும் நோக்கத்துடன் எண்ணிச் செய்த பிழையன்று என்பது; "புந்தி நண்ணாத வினை" (சிவப் - 30); "உன்சீலமுங் குணமும் சிந்தியாதே" (நம்பி - ஒற்றி - தக்கேசி - 6) என்றது காண்க. எண்ணிச் செய்த பிழையாயின் பொறுத்தலரிது; கன்மபலன் அனுபவிக்கச் செய்தே கழித்தல் வேண்டும்; இஃது எண்ணாத பிழையாதலின் அனுபவித்த அளவின்றி, இனிமேலு அனுபவம் வேண்டாது பொறுத்தல் கூடுமென்பது குறிப்பு. |
| இங்கு - இவ்விடத்து; முன் திருமுல்லைவாயில், திருவெண்பாக்கம் முதலிய இடங்களிற் போலன்றி, இங்கே என்பது. |
| காணப் பவளவண்ணா கண் அளிப்பாய் - மற் றொன்றன்பொருட்டுமன்றி உனது அழகிய பவள வண்ணத்தைக் காணும் பொருட்டுக் கண் அளிப்பாய் என்றது பவளவண்ணா என்றழைத்த விளியின் குறிப்பு; "எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்ற வாரே என்ற பதிகம் காண்க. "கண்காள் காண்மின்களோ?" (தேவா) |
| பிழை பொறுத்தின்றியான் - என்பதும் பாடம். |
| 286 |
3441 | பங்கயச்செங் கைத்தளிராற் பணிமலர்கொண் டர்ச்சித்துச் செங்கயற்கண் மலைவல்லி பணிந்தசே வடிநினைந்து பொங்கியவன் பொடுபரவிப் போற்றியவா ரூரருக்கு மங்கைதழு வக்குழைந்தார் மறைந்தவிடக் கண்கொடுத்தார். | |
| 287 |
| (இ-ள்.) பங்கயச் செங்கைத் தளிரால்...நினைந்து - தாமரைமலர் போன்ற செங்கைத்தளிர்களாலே குளிர்ச்சியுடைய மலர்களைத் தூவி அருச்சனை புரிந்து செங் |