328திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  துற்று வேண்டியவர்; சரிதக் குறிப்பு; : "பற்றினார்க்கென்றும் பற்றவன் - பாவிப்பார் மனம்பாவிக் கொண்டானை" என்பதும் குறிக்கொள்க; மகிழ்ச்சியாற் பலதிறமும் பரவியநிலை; மேலும் "அல்லறீர்த்தருள் செய்யவல்லானை"(5) "நண்ணினார்க்கென்று நல்லவன்றன்னை"(7) பந்தித்த வினைப்பற்றறுப்பானை(8) என்பனவும் காண்க; - (3) மால்விடை - திரிபுர மெரித்தபோது விட்டுணு விடையாகி இறைவரைத் தாங்கினார் என்பது வரலாறு; "தடமதில்க ளவை மூன்றுந் தழலெரித்த வந்நாளில், இடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ"(திருவா); கனலா - கனலால் எரிய; பெரியகம்பர் - அம்மையார்பூசித்த திருவேகம்ப நாதர்; மேலும் நல்லகம்பன், கள்ளக்கம்பன், வெள்ளக்கம்பன் என்ற மூன்று மூர்த்திகளும் உண்டு. பிரமனாற் பூசிக்கப்பட்டவர் வெள்ளக் கம்பர்; "மலர்ப்பொகுட்டணை மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை" (காஞ்சிப் புரா; திருவேகம்பப் படலம் - 86); விட்டுணுவாற் பூசிக்கப்பட்டவர் கள்ளக்கம்பர்; "மருள்புரி கருத்தினான் மாய னேத்தலிற், கருதுமப் பெயரிய கள்ளக்கம்பனை" (காஞ்சிப் புரா; திருவேகம்பப் படலம் - 87); உருத்திரனாற் பூசிக்கப்பட்டவர் நல்லகம்பர். "உருத்திர னலத்தகு மொருமை பூண்டுயர், கருத்தொடும் வழிபடு நல்லகம்பனை" (88); இம்மூவரொடும் திருவேகம்பரும் கூடி ஒருவரே நால்வகை உருவத்துடன் இங்குத் தனித் தனி வீற்றிருந்தருள்கின்றனர். "கருதரு நல்லனே கள்ளன் வெள்ளனேர், தரு திருவேகம்ப னென்று தன்னொடு, மருமலர்க் கவிழிணர் மாவி னீழல்வர, ழொருவனே நால்வகை யுருவ மேவினான்" (காஞ்சிப் புரா; திருவேகம்பப் படலம் - 89). மேல் "நல்ல கம்பனை"(5), "கள்ளக்கம்பனை"(10) என்று அருளுதல் இவ்வொற்றுமை கருதிய தென்க; - (4) குண்டலம் - மகரக்குழை யெனும் காதணி; வண்டு அலம்பு - அலம்புதல் - சத்தித்தல்; - (5) அங்கம் - ஆறு அங்கங்கள்; -(6) கடல் வளரும் சங்கம் - சங்குகள் உண்டாகும் பல விடங்களுள் கடலில் விளைவன சிறப்புடையன என்பது; கங்கையாளன் - கங்கையைத் தரித்தவன்; கம் - பிரம கபாலம்; அதனைக் கையிலேந்தியவன் என்றலுமாம்; -(7) நாம் - அடியவர்களுள்ளிட்ட நாம்; - (8) சிந்தித்து...திகழுஞ் சிவன் - கண்பெறும் முன் நம்பிகள் நினைந்து கண்ட நிலைக்குறிப்பு; கந்தவார் சடை - சடைக்குக் கந்தமாவது அதிற் கூடிய கொன்றை கூவிளம் முதலியவற்றாலாவது; கந்தம் - மணம்; -(9) வரங்கள் பெற்று உழல் - வரங்கள் பெற்றும் நல்வழிச் சேராது உழன்ற; பெற்றும் என்க - சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது; நிரந்தரம் - அழிவு; இல்லையாக; நிர்க்கண்டகன் - கடிய தண்டம் விதித்தவன். கரங்கள் எட்டு - "எண்டோள் வீடுநின் றாடும் பிரான்றனை"; -(10) வழிபாடு செய்வாள் போல் - நித்தியமாய் நிகழும் அருட் பூசனையிருக்க, அற்றைக்கு ஒரு நிமித்தம் பற்றி வழிபடுவாள் போல என்க; நின்றவாகண்டு....வெளிப்பட்ட - பூசித்துத் தழுவிய வரலாறு; -(11) காண....என்று - பதிகக்குறிப்பு.
  தலவிசேடம் : - கச்சித் திருவேகம்பம் - II - பக்கம் 1537 பார்க்க.
3443
பாடிமிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியவஞ் சலியினராய்த் தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன் கும்பிட்டங் கினிதமர்வார்.
 

289

3444
மாமலையாண் முலைச்சுவடும் வளைத்தழும்பு மணிந்தமதிப்
பூமலிவார் சடையாரைப் போற்றியரு ளதுவாகத்
தேமலர்வார் பொழிற்காஞ்சித் திருநகரங் கடந்தகல்வார்
பாமலர்மா லைப்பதிகந் திருவாரூர் மேற்பரவி,
 

290