| துக் காணக் காட்டியது முலைச்சுவட்டுக் கோலம்; அஃது ஒரு நிலையாகிய சிறப்புக் கோலம்; இஃது என்றும் எங்குமுள்ள பொதுக் கோலம்; "அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென்றறிக, வம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்பர்"(களிறு - 1). |
| அன்பு கூடிய - அன்பு பெருகிய; அன்பினால் வந்து கூடிய; அன்பினாற் பிணைக்கப்பட்ட என்ற குறிப்புமாம். |
| மெய்த் தொண்டருடன் கும்பிட்டு - "அன்பரொடு மரீஇ "(போதம் - 12); இறை வழிபாட்டில் அன்பரொடு கூடியிருத்தல் பெரும் பயனும் சிறப்பும் தருவது. |
| அமர்வார் - நம்பிகள்; வினைப்பெயர்; அமர்வார் - போற்றிப் - பரவி - அகல்வார்(ஆகி) - (3444) - எடுத்து - என்று பாடிப் - போய் - வழிக்கொள்கின்றார் - (3445) - சென்றிறைஞ்சிப் போந்து - அணைந்தார் (3446) என மேல் வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடித்துக்கொள்க. |
| 289 |
| 3444. (வி-ரை) மாமலையாள்...சடையாரைப்போற்றி - திரு ஏகம்பரைத் துதித்து; இப்பதிகங்கள் கிடைத்தில! |
| அருள் அதுவாக - இறைவர் அங்குச் செய்த அருள் அதுவே - அம்மட்டே. அமைய; அது - அதுவே; ஏகாரம் பிரிநிலை தொக்கது; அது - இடக் கண் கொடுத்த அந்நிலை என்று முன்னறிசுட்டு; "அருளதுவாக" (3431) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; "அருள் இத்தனைகொலாம்" (3435) என்றதும் காண்க. |
| திருவாரூர் - மேற்பதிகம் - பரவி அகல்வார் என்க. பரவி - பரவிக்கொண்டவாறே; அகல்வார் - பரவி - என்று வினையெச்சத்தினைப் பின்வைத்தார் அகல்வதாகிய செயலின் முன்னரே நினைதலும் பரவுதலுமாகிய செயல்கள் நிகழ்கின்ற விரைவினைப் புலப்படுத்தற்கு. |
| பாமலர் மாலைப்பதிகம் - மேல் வரும் பாட்டிற் கூறப்படும் பதிகம். "சொன் மலர்கொண் டிட்டன"(10) என்ற பதிகத்திற் கேற்பப் பரமலர்மாலை என்றார். |
| 290 |
| 3445. (வி-ரை) "அந்தியு நண்பகலும்" என எடுத்து - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. |
| எந்தை பிரான் றிருவாரூர் என்று கொலெய்துவது" என்று - இது பதிகக் கருத்தும் உட்குறிப்புமாம். "தென்றிருவாரூர் புக்கு எந்தை பிரானாரை என்று கொலெய்துவதே" என்று வரும் பதிக மகுடம் காண்க; எந்தை பிரானாரை - என்னுயிர்க்கின்னமுதை - இடுபலி கொள்ளியை - ஏழுலகாளியை - என் மணியை - எம்மிறையை - என்று பதிகத்துட் பலவாற்றானும் பன்னி ஆரூரில் இறைவரை எய்துவதென்று கொல்? என்றருளியிருப்பினும் பிரானது திருவாரூரினை எய்துவதென்பதே கருத்தாகக் காண்க என்று ஆசிரியர் காட்டியவாறு. என்னை? "தென் திருவாரூர் புக்கு" என்றும், "எல்லை மிதித்து" என்றும், "என்றன் மனங்குளிர", "எண்ணிய கண்குளிர" என்றும் வருவனவற்றாலும், இடப்பெயர்ச்சியால் ஆரூர் என்ற ஊரினை நீங்கி நின்ற அளவே யன்றி, ஆரூர்ப் பிரானாரை ஒரு போதும் மறந்து நீங்கினா ரல்லராகலானும், [மிக நினைந்து (3427) - ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்(3428) - "ஆரூரானை மறக்கலுமாமே" (பதிகம்).] தென் திருவாரூர் என்னும் ஊரினைச் சென்று எய்துவ தென்றுகொல் என்பதே பதிகக் கருத்தாம். இது பற்றியே "பதிகம் திருவாரூர் மேற் பரவி" (3444) என்றும், "திருவாரூர் என்று கொல் எய்துவது என்று" என்றும் அருளினார். நம்பிகளது இத்திருவுள்ளக் கருத்து |