334திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  திருஆமாத்தூர்
  திருச்சிற்றம்பலம்

பண் - கொல்லிக் கௌவாணம்

 
காண்டனன் காண்டனன் காரிகை யாடன் கருத்தனாய்
ஆண்டன னாண்டன னாமாத் தூரெம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே.
 

(1)

 
ஓர்ந்தன னோர்ந்தன னுள்ளத்துள் ளேநின்ற வொண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோ டடமுலை
ஆர்ந்தன னார்ந்தன னாமாத் தூரைய னருளதே.
 

(4)

 
தேடுவன் றேடுவன் செம்மலர்ப் பாதங்க ணாடொறும்
நாடுவ னாடுவ னாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவ னாடுவ னாமாத் தூரெம் மடிகட்கே.
 

(9)

 
ஐயனை யத்தனை யாளுடை யாமாத்தூ ரண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை
மையனை மையணி கண்டனை வன்றொண்ட னூரன்சொற்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.
 

(11)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு : - சிவயோக நிலையிற் பிரியாது இறைவருடன் கூடி நின்ற நிலை குறித்தது; திருவொற்றியூர்ச் சரித நிகழ்ச்சியுள்ளும் திருவருளே நிகழக் கண்டு நின்ற நிலையும் குறிப்பு. இப்பதிகம் மிக அருமையான சிவயோகம் பற்றிய பெரும் பொருள்களை உடையது. நம்பிகளது நிலையினை நன்கு விளக்குவது.
  பதிகப் பாட்டுக் குறிப்பு : -(1) காண்டனன் - கண்டான்; காண்டல் - செய்தல்; படைத்தல் என்றலுமாம். "முனைவன்கண்டது" காரிகை - அம்மை; கருத்தன் - தலைவன்; ஆண்டனனாதலாற் ஆட்பூண்டனன் என்க; மீண்டனன் - விலகினேன்; வேதவித்து - வேத வொழுக்க முடையோர்; வித்து - அறிஞர். -(2) கூடுவன் - சிவயோக நிலை; குறிப்பு - மனத்தினுள் தியான உறைப்புப் பற்றிய குறிக்கோள். "குறிப்பினாலே கூப்பினான் றாபரத்தை" (தேவா) "குறித்த பூசை" (1241); -(3) ஆய்ந்தவன் - என்னால் உள்ளே ஆராய்ந்த இடத்துத் தெளியப்பட்டவன்; செயப்பாட்டுவினை; - (4) ஓர்ந்தனன்...ஒண்பொருள் - சிவராஜயோகம்; சேர்ந்தனன்...அருளதே - நம்பிகளது சரித நிகழ்ச்சியும், அதனை அருள் நிகழ்ச்சியாகவே கண்ட நிலையும் குறிப்பு; அது அருளே என்க; ஏகாரம் பிரிநிலை; ஏகாரம் பிரித்துக் கூட்டுக; ஆர்தல் - நிறைவு பெற வினைப்போகம் நுகர்தல்; -(5) நீதி...செய்யருள் - நீதி நிறைந்த அன்றே அருள் செய்யும் என்றபடி; நீதி - நியதி; இறைவர் விதித்த ஒழுக்க நிலை; அன்றவன் - அன்றே - அநாதியே - உள்ளவன். -(6) ஆமாத்தூரையும்...பூண்டவன் - ஆமாத்தூரை விரும்பி வீற்றிருத்தல் போலவே என்னெஞ்சும் இடமாகக் கொண்டு என்னை ஆளாக ஏற்றவர்; "கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற், புண்ணி யன்புக லூருமென் னெஞ்சுமே"(அரசு); புரளவே - பூண்டவன் - என்க; தேடல் -