[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்337

 
நீரூ ருந்நெடு வயல்சூழ் புறவி னெல்வா யிலரத் துறைநின் மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மா டமலி தென்னா வலர்கோ னடித்தொண்டு பண்ணி
யரரூ ரனுரைத் தனநற் றமிழின் மிகுமாலை யோர்பத் திவைகற்று வல்லார்
காரூர் களிவண் டறையா னைமன் னவராகி விண்முழு தாள்பவரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- ஒரு கண்ணிலேன்; உன்னை யன்றி ஒரு பற்றிலேன்; அடியேனுய்யப் போவதோர் சூழல் சொல்லே என்றது; பதிக மகுடம் பார்க்க. குறிப்பு:- இப்பதிகம் தமிழ் இலக்கிய நயமும் நீதி ஞான மொழிகளின் நயமும், தத்துவ நிச்சயமாகிய உபதேச நயமும் செறிந்த அருமைப்பாடுடையது. திருக்குறட் கருத்துக்களும் காணப்படுவது.
  பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) கல்வாய் - கல் - மலை; மலைபடுபண்டமாகிய; இதனை மணியுடனும் கூட்டுக; நிவ - நிவா நதி; ஈற்றேகாரம் குறுகி வந்தது; நிலா - என்பது நில என வருவது போல; உந்திவருதல் நீர்ச்சிறப்பு மிகுதி; நீடு உறையும் - பழமையாக உறைகின்ற; நல்வாயில்...சொல்லாய்க் கழிகின்றது - யாக்கை நிலையாமை; சொல்லாய்க் கழிகின்றதாவது சொல் மாத்திரை அளவிற் போய் ஒழிவது; விரைவுக் குறிப்பு. நல்வாயில் செய்தல் - குழவி பிறந்த மகிழ்ச்சி நலம் பகர்ந்து சடங்கு செய்தல்; சூழல் - உபாயம்;-(2) நிலையாத இம்மண்ணுலகில் - நிலையாமையே நிரம்பிய உலகு; கணந்தோறும் அழிவு பெறுகின்ற நிலை. பொறிவாயில்....அவிய - "பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்கம்" (குறள்) என்ற திருக்குறட் சொல்லும் பொருளும் ஆட்சி; -(3) எற்றெ ஒரு கண்ணிலன் - நின்னையலால் மற்றொரு பற்று மிலேன் - நம்பிகளது சரிதங் குறித்த அகச்சான்று; -(4) கோடு - கொம்பு; கோங்கு - மரவகை; ஒடுபுனற் கரையா மிளமை - விரைந்தோடும் யாற்றின்கரை இடிவது போல இளமை விரைவிற் கரைந்து இடிந்து கழியும்; "இடிகரை"யொத்த திளமை; உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி - "உறங்குவது போலுஞ் சாக்கா; டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு"(குறள்) என்ற திருக்குறளாட்சி, யாக்கை நிலையாமையும் விரைந்து தொடரும் பிறவிச் சூழலும் குறித்தது; -(5) கல்பொழிய - மலைமேல் மழைபொழிய. கல் - மலை; மயிலார் - மயில் போன்ற சாயலினை உடைய பெண்கள்; அலம்வந்து - வருந்தி - துன்பப்பட்டு; - (6) கனகம் - பொற்சன்னம்; நெல் வால் - நெல்லின் சிறிய கூரிய நுனியும்; நுனிதானும் இழிவு சிறப்பும்மை தொக்கது. அலந்தேன் - வருந்தி யொழிந்தேன்; -(7) சிகரம் - மலையுச்சி; மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவி - மணமென மகிழ்வர் பின்னே பிணமெனச் சுடுவர் - என்ற ஞானம்; "மணமகனே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய், அணியிழையார் வாழ்த் தொலிபோ யழுகையொலி யாய்க்கழியக், கணமதனிற் பிறந்திறுமிக் காயத்தின் வரும்பயனை, உணர்வுடையார் பெறுவருணர் வொன்றுமிலார்க் கொன்றுமிலை" (பழியஞ்சின படலம் - 40) என்ற திருவிளையாடற் புராணம் ஈண்டு நினைவு கூர்தற்பாலது; அகரம் முதலி னெழுத்தாகி நின்றாய் - எழுத்துக்களுள் அகரம் விரவி நின்று முதலு மாதல் போல இறைவர் உயிர்களினறிவினுள்ளே அறிவாகி விரவி நின்று முதல்வனுமாவன்; "அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு" (குறள்) என்ற திருக்குறட் கருத்து ஆளப்பட்டது; இதனைப் பின் வந்த ஞானாசாரியர் உமாபதி சிவனார் "அகர வுயிர்போ லறிவாகி யெங்கு, நிகரிலிறை நிற்கு நிறைந்து" (திருவருட் பயன் - 1) என்று ஞான சாத்திரத்தினுள் விரித்தல் காண்க. எழுத்து முதலின் அகரமாகி