| நின்றாய் என்க; ஆகி - உவமப் பொருள் தந்து நின்றது; அகரம் போல; -(8) பண்டே...பெற்றேன் - இறைவரது திருநாமத்தைப் பயில்வதற்கு மிக்க முன்னைத்தவம் வேண்டப்படும் என்பதாம்; செய்த பாக்கியம் - தவஞ்செய்து தேடிய பயன்; நாமம் - திரு வைந்தெழுத்து; இந்நாளில் இறைவன் றிருநாமத்தைப் பயிலுதற்குக் கூசுவோரும், பயிலாது நிற்பதோடன்றி, அதனைப் பழிப்போரும் பலராயினர். பயிலுவோர் சிலராக் காண்டும். இதன் காரணம் முன்னைத் தவப்பய னில்லாதாரே பலராதல் என்க. "இலர்பல ராகின்ற காரண நோற்பார், சிலர்; பலர் நோலா தவர்"(குறள்) என்பது பொய்யா மொழி; "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பா ராகிற் றீவண்ணர் றிறமொருகாற் பேசாராகில்...அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற், பெருநோய்கண் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே" (தாண்) என்ற திருவாக்கு ஈண்டு நினைவு கூர்தற்பாலதாம்; -(9) மாணா உருவாகி - மாணி(வாமனன்) உருவாகி வந்து மண் கொண்ட பின் மாணா(மாணல்லாத - பெரிய) உருவு எடுத்து மண் அளந்தான்; நீள் நீள் - அடுக்கு மிகுதி குறித்தது; மிக நீண்ட; வாணார் - வாளார் என்பது எதுகை நோக்கி வாணார் என நின்றது; "நீணுதல் செய்தொழிய"(பிள். பிரமபுரம் - 9). "மாணி பால்கறந்தாட்டி வழிபட, நீணுல கெலா மாளக் கொடுத்தவன்" (குறுந். கோயில் - 4); பலவின்கனி ஈயது போல் - பலாப் பழத்தின் ஆசையாற் சென்று அதன் பிசின் ஒட்டி இறந்தொழியும் ஈப்போல; (பழமொழி) "உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப் பழத் தீயினொப்பாய், விழைதருவேனை" (திருவா. நீத்-விண்-46); போல்வதன் முன் - பலாப் பழத்தில் ஒட்டி அகப்பட்ட ஈ இறப்பது போல இறந்து வீழ்வதன் முன்; கனி ஈ(ர்)ந்தது என்று பாடங்கொண்டு பெண்ணோயுற்ற வடிவுவமமாக உரைப்பாருமுண்டு. -(10) அடித் தொண்டு - சிவபூசை; தவநெறி; யானை - அயிராவதம். |
| தலவிசேடம் : - திருநெல்வாயிலரத்துறை - 2113-ன் கீழ்ப் பார்க்க. இத்தலத்து அருணகிரியார் திருப்புகழினுள் ஆளுடைய பிள்ளையார் இங்கு முத்துச் சிவிகை பெற்ற வரலாறு குறிக்கப்பட்டுளது. "கொச்சையிற் சதுர்வேதச் சிறுவ நிற்கருட்கவிகை நித்திலச் சிவிகை யைக்கொடுத் தருளீசன்." |
3449 | பரமர்திரு வரத்துறையைப் பணிந்துபோய்ப் பலபதிகள் விரவிமழ விடையுயர்த்தார் விரைமலர்த்தா டொழுதேத்தி உரவுநீர்த் தடம்பொன்னி யடைந்தன்ப ருடனாடி அரவணிந்தா ரமர்ந்ததிரு வாவடுதண் டுறையணைந்தார். | |
| 295 |
| (இ-ள்) பரமர்....போய் - இறைவரது திருவரத்துறையினைப் பணிந்து மேற்சென்று; பலபதிகள்...தெழுதேத்தி - பதிகள் பலவற்றிலும் சேர்ந்து இளைய இடபக் கொடியினை உயர்த்திய இறைவரது மணமுடைய மலர் போன்ற திருவடிகளைப் பணிந்து துதித்து; உரவு...ஆடி - பரந்த நீரையுடைய பெரிய காவிரியினைச் சேர்ந்து அன்பர்களுடனே நீராடி; அரவணிந்தார்....அணைந்தார் - பாம்பினை அணிந்த இறைவர் விரும்பி எழுந்தருளிய தண்ணிய திருவாவடுதுறையினை அணைந்தனர். |
| (வி-ரை) பலபதிகள் விரவி....ஏத்தி - திருநெல்வாயிலரத் துறையினின்றும் நம்பிகள்திருஎருக்கத்தம்புலியூரின் அணிமையில் நிவாநதியைக் கடந்து அங்கு நின்றும் நேர் தெற்கே செயங்கொண்ட சோழபுரம் வழியாகச் செல்லும் பாதை வழியே சென்று, திருஆப்பாடியின் அணிமையில் கொள்ளிடத்தைக் கடந்து காவிரியை அடைந்தனர் என்பது கருதப்படும்; இவ்வாறன்றித் திருநெல்வாயிலரத்துறையி |