340திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  அருளப்பட்டது; இம்முறை அருளியது "கங்கை வாழ் சடையாய்" என்ற இத்திருப்பதிகம்: மிகவும் மனமுருக்கும் தன்மை வாய்ந்தது.
 

296

  திருவாவடுதுறை
  திருச்சிற்றம்பலம்

பண் - தக்கேசி

 
கங்கை வாழ்சடை யாய்கண நாதா கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாவெனை யஞ்சலென் றருளா யாரெ னக்குற வமரர்க ளேறே.
 

(1)

 
மண்ணின் மேன்மயங் கிக்கிடப் பேனை வலிய வந்தெனை யாண்டுகொண்
டானே
கண்ணி லேனுடம் பில்லடு நோயாற் கருத்த ழிந்துனக் கேபொறை
யானேன்
தெண்ணி லாவெறிக் குஞ்சடை யானே தேவ னேதிரு வாவடு துறையுள்
அண்ண லேயெனை யஞ்சலென் றருளா யாரெ னக்குற வமரர்க ளேறே.
 

(2)

 
வெண்ட லைப்பிறை கொன்றையு மரவும் வேரி மத்தமும் விரவிமுண் டித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை யீச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்ப னணுக்க வன்றொண்ட னார்வத்தா லுரைத்த
தண்டமிழ்மலர் பத்தும்வல் லார்கள் சாத லும்பிறப் பும்மறுப் பாரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு : - ஆசிரியர் (3450) காட்டியருளியவாறு; குறிப்பு - இப்பதிகத்துள் தலச்சுவாமி பெயர்(4), அம்மை பெயர் (3), தியாகேசர் பெயர்(6) போற்றப் பட்டமை சிறப்பு.
  பதிகப் பாட்டுக் குறிப்பு : -(1) எனையஞ்சலென்றருளாய்;...யாரெனக் குறவு ஏறே இது பதிகக் குறிப்பாகிய மகுடம்; -(2) மண்ணின்மேல்.... ஆண்டுகொண்டானே நம்பிகளைத் தடுத்தாட்கொண்ட சரிதக் குறிப்பாகிய அகச்சான்று; கண்ணிலேன்...பொறையானேன் - சரித ஆதரவாகிய குறிப்பு. அடுநோய் - திருவொற்றியூரிற் கண்ணிழந்த நிலையில் மேற் சென்ற நீண்ட யாத்திரையில் நம்பிகளது திருமேனியிற் புதிதாய்ப் பற்றியதொரு வெப்பு நோய்; "புதியபிணி"(3453); இது திருத்துருத்தியில் நீங்கப் பெற்றனர். உனக்கே பொறையானேன் - கண்ணிருந்ததாற் றாமாகத் தேடிச் செய்து கொள்ள வருவனவற்றையும் கண் இழந்தமையாற் றேடமாட்டாமையானபடியால் எல்லாவற்றையும் தருதல் இறைவர்பாற் சுமையாதல் குறிப்பு; பொறை - பாரம்; "தன் கடன் அடியேனையுந் தாங்குதல்"; உனக்கே - ஏகாரம் பிரிநிலை. "உறவி லேனுனை யன்றிமற் றடியேன்; யாரெனக்குறவு?" என்பன காண்க; -(3) ஒப்பிலா முலையாள் - தல அம்மை பெயர்; முப்புரங்களை...வல்லானே - "மூவெயில் செற்ற...காவ லாளரென் றேவிய பின்னை" (நம்பி-புன்கூர்); - (4) கொதி - கோபம்; மனக் கொதிப்பு; அடுநோய் - (2) பாட்டுப் பார்க்க; -(5) அரக்கன் - இராவணன்; இந்து சேகரன் - பிறையைச் சூடியவர்; -(6) ஒரு பிழை - சபதம் பொய்த்தமை; திருவாரூர்ச் செம்பொனே - இத்தலத்துத் தியாகேசர் பெயர் செம்பொற்றியாகர்; அறவன் - தருமசொரூபி; "அறவாழி அந்தணன்" (குறள்) என்புழிப்போல அறத்தின்வழி உலகை ஆள்பவன்; "அமரர்நா டாளாதே ஆரூராண்ட, அபிரா வணமே" என்று தியாகேசரை அரசராகக் கருதலின் இங்கு அற