| வன் என்றார்; -(7) விதிமுதலே - விதிக்கின்ற முதல்வன்; விதித்தல் - படைத்தல்; விதிமுகத்தால் மறைகளுள் கூறும் விதிவாக்கியங்களாகிய தர்மத்தைச்செய் - உண்மையைச் சொல் என்பன வாதியாக வருவனவற்றால் உலகத்தைச் செலுத்தும் முதல்வன் என்றலுமாம்; மெய்யன் - சத்துப் பொருள்; -(8) பரமேட்டி - அப்பாற்பட்டவன் - மேலானவன்; தீதிலா மலை - மலை, வெள்ள நீர் - யானை - சிங்கம் - பாம்பு முதலியவை உள்ள இடமாயிருந்தும் அவற்றை உடைய ஏனை மலைகள் தீமைக்கிடமாதல் போலத் தீமையில்லாத மலை; சேவகம் - வீரம்; "தந்திமேல் விடைமேலழகர் சேவகம் செய்தது" (திருவிளை. புரா); -(9) வழித்துணை - பிறவிப் பயணத்திற் றனித் துணையாய் உடன் வருபவர்; மருந்து - உடன் வந்து பிறவி நோய் தீர்ப்பவர்; மாசிலாமணி - தலச் சுவாமி பெயர்; ஈடு - இடப்பெறுதல்; தொழிற்பெயர்; ஆனை - பெருமை குறித்தது; -(10) சிங்கடியப்பன் - நம்பிகள் சரிதப் பகுதிக் குறிப்பு; அணுக்கன் - அகம்படித் தொண்டு செய்பவர்; தோழர் என்ற குறிப்புமாம்; சாதலும் பிறப்பும் - சாதலை முன் கூறினார், இப்போது பிறப்பு நேர்ந்து விட்டமையின் அடுத்து வருவது அதுவே யாதலின்; மேலே பிறப்பு என்றது இனிவரும் பிறவி. |
| தலவிசேடம் : -திருவாவடுதுறை - III - பக்கம் 297 பார்க்க. |
3451 | திருப்பதிகங் கொடுபரவிப் பணிந்துதிரு வருளாற்போய் விருப்பினொடுந் திருத்துருத்தி தனைமேவி விமலர்கழல் அருத்தியினாற் புக்கிறைஞ்சி "யடியென்மே லுற்றபிணி வருத்தமெனை யொழித்தருள வேண்டு"மென வணங்குவார், | |
| 297 |
3452 | பரவியே பணிந்தவர்க்குப் பரமர்திரு வருள்புரிவார் "விரவியவிப் பிணியடையத் தவிர்ப்பதற்கு வேறாக வரமலர்வண் டறைதீர்த்த வடகுளத்துக் குளி"யென்னக் கரவிறிருத் தொண்டர்தாங் கைதொழுது புறப்பட்டார். | |
| 298 |
| 3451. (இ-ள்) திருப்பதிகம்...போய் - திருப்பதிகம் பாடியருளித் துதித்து வணங்கித் திருவருள் விடை பெற்று மேற்சென்று; விருப்பினொடும்...இறைஞ்சி - விருப்பத்துடனே திருத்துருத்திப் பதியினை அடைந்து இறைவரது திருவடிகளை ஆசையுடன் திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி; அடியேன் மேல்...வணங்குவார் - அடியேன் உடம்பின் மேல் வந்த நோயின் துன்பத்தினை என்பால் நில்லாது தீர்த்தருள வேண்டும் என்று வணங்குவாராகி, |
| 287 |
| 3452. (இ-ள்) பரவியே...புரிவார் - துதித்து வணங்கிய நம்பிகளுக்கு இறைவர் திருவருள் புரிவாராய்; விரவிய...என்ன - பொருந்திய இப்பிணி முழுதும் தீர்வதற்குத் தனியாக நன்மையுடைய மலர்களில் வண்டுகள் பாடும் தீர்த்தத்தினையுடைய வடகுளத்திற் குளிப்பாயாக என்று அருளிச் செய்ய; கரவில்...புறப்பட்டார் - கரவில்லாத திருத்தொண்டராகிய நம்பிகள் கைகூப்பி வணங்கி புறப்பட்டருளினர். |
| 298 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3451. (வி-ரை) அருத்தி - ஆர்வம் - ஆசை; புக்குக் கழல் இறைஞ்சி என்க. |