344திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  னுமா மேகம் என்று தொடங்கும் சொல் நிறைந்ததிருப்பதிகத்தினை; எண்திசையும்....எடுத்திசைத்தார் - எட்டுத் திக்குக்களில் உள்ளவர்களும் அறிந்து உய்யும்பொருட்டு ஏழிசைகளும் பொருந்த எடுத்துப் பாடியருளினார்.
  (வி-ரை) கண்டவர்கள் அதிசயிப்ப - மூழ்குமுன் இருந்த நம்பிகளது திருமேனியிற் சார்ந்த பிணிப்பட்ட நிலையினையும், மூழ்கி எழுந்தவுடனே அது நீங்கி மணியொளி சேர் திருமேனியாயின நிலையினையும் நேரிற் கண்ட மக்கள் அந்தோ ஈது ஓர் அதிசயம் கண்டேம் என்று அதிசயம் கொள்ள; "அதிசயங் கண்டாமே" (திருவா).
  உடைபுனைந்து - குளிக்கும் போது அணிந்திருந்த ஈர உடையினை நீக்கி வேறு உலர்ந்த உடையினை அணிந்து.
  கோயிலினை - திருமாளிகையினை; வந்து - வடகுளத் தீர்த்தக் கரையினின்றும் கோயிலுக்கு வந்து.
  தொண்டர் எதிர் - இப்பதிகம் கோயிலினுள் இறைவர் திருமுன்பன்றிக் கோயிலில் அங்குக் கூடியிருந்த திருத்தொண்டர்களெதிரே பாடியருளப்பட்டது; "என்னுடம் படும்பிணி யிடர்கெடுத் தானை....நான் மறக்குமாறு என்னை?" என்று பதிகத்துள் இறைவரைப் படர்க்கை யிடத்து வைத்துக் கூறும் வகையால் இப்பதிகம் தொண்டர்களின்முன் பாடியருளப் பட்ட தென்பது போதரும்; தொண்டர்களைத் தவிர ஏனை உலகர்களை முன்னிலைப் படுத்திப் பேசும் நிலை எந்தம் பெருமக்களிடம் நிகழா தென்பது; உலகரை வழிப்படுத்தி ஆணையிடும் நிலை வேறு.
  எண்டிசையும் அறிந்துய்ய - "நான் பெற்ற இன்பம் பெறுகவிவ் வையகம்" (திருமந்) என்றபடி இவ்வருட் பெருமையினை அறிந்து உலக முய்யச் செய்தல் பதிகக்குறிப்பாகும். தம்பால் இறைவர் செய்த பேரருளை வியந்து போற்றும் வகையும் ஒரு குறிப்பாம்.
  மின்னுமா மேகம் - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
 

300

  திருத்துருத்தியும் திருவேள்விக் குடியும்
  திருச்சிற்றம்பலம்

பண் - காந்தாரம்

 
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
   வெடில்படக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றுங்
அன்னமாங் காவிரி யகன்கரை யுறைவா
   ரடியிணை தொழுதெழு மன்பரா மடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
   குடியுளா ரடிகளைச் செடியனே னாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
   யென்னுடம் படும்பிணி யிடர்கெடுத் தானை.
 

(1)

 
மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
   மாறலார் திரிபுர நீறெழச் செற்ற
வங்கையான் கழலடி யன்றிமற் றறியா
   னடியவர்க் கடியவன் றொழுவனா ரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
   குடியுளா ரடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையாற் றொழுதுதந் நாவின்மேற் கொள்வார்
   தவநெறி சென்றம ருலகமாள் பவரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்