[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 345 |
| பதிகக் குறிப்பு : - இறைவர் தம்பாற் செய்த அருளிப் பாட்டினை வியந்து போற்றி அதனை உலகுய்யும்படி தொண்டர்களின் எதிரே பாடியது. (3454). | | பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) இழிந்தருவி இழிந்து வரும் அருவி; வெடில் பட - ஒலிக்குறிப்பு; வெடிபட - என்பது பாடமாயின் முழக்கம்; நறுமணமுமாம்; அன்னமாம் - அன்னங்கள் விளையாடும்; அடியார் சொன்னவாறு அறிவார் - அடியார்கள் முன்னின்று முறையிடுமவற்றை அறிந்து அருள்புரிபவர்; நம்பிகளது சரிதக் குறிப்பு; சொன்னவாறறிவார் - தலத்துச் சுவாமி பெயர்க் குறிப்பும் காண்க; துருத்தியார்...வேள்விக்குடியுளார் - எதிர் எதிராகக் காவிரியின் இருகரையிலும் உள்ளவை; தலவிசேடம் பார்க்க. (III - பக்கம் 288) மறக்குமாறு என்னை - என்க; அடிகளை எம்பெருமானை - இடர் கெடுத்தானை நாயேன் மறக்குமாறென்னை? என்று கூட்டுக; என்னை எவ்வாறு; எங்ஙனம்; மறக்குமாறில்லை என, வினா எதிர்மறை குறித்தது; "இவர் தன்மையறிவாரார்?" (தேவா) என்புழிப் போல; செயப்படுபொருள் பின்னர் வந்ததும், மறக்குமாறின்மை முன் வைத்ததும் உறுதிப் பொருட்டு. இப்பதிகம் இவ்வாறு முடிபு கொள வைத்த தனிச்சிறப்புடையது; பிணியிடர் - பிணியாகிய இடர் என்றும், பிணியால் வரும் இடர் என்றும் உரைக்க நின்றது; -(2) கூடுமாறுள்ளன - அங்கங்குங் வந்து கூடும் கிளைநதிகளும் கால்களும்; வெள்ளத்தால் வந்து சேரும் மற்றைப் பண்டங்களும் என்றலும் குறிப்பு; மேற்பாட்டுப் பார்க்க. மறித்தல் - அழித்தல்; ஏனல் - தினை; ஐவனம் - மலையரிசி (683); குறிஞ்சிக் கருப்பொருள்கள்; மாடு - பக்கம்; கோங்கம் - மருதம் - பெருமரங்கள்; பொருது - அலைத்துப் பறித்து; குலை - செய்கரை; செடியனேன் - தீயவன்; -(3) யானையின் கொம்பு - மலைபடு பண்டம்; குறிஞ்சிக்கரு; கூட்டெய்தி - கூடிச் சேர்ந்து; தவம்...மூழ்க - போகர் - காமியம் பற்றித் தவநிலை. நிற்போர்; யோகர் - சிவயோகியர்; புலரி - வைகறை; விடியல்; தொடர்ந்தடும் கடும்பிணி - இடையில் கூடித் தொடர்ந்து வருத்தும் நோய்; -(4) சந்தனத்துண்டம் - சந்தன மரக்கட்டைகள்; சந்தனம் - அகில் - மிளகு - குறிஞ்சிக் கரு; கறி - கார்ப்பு என்றலுமாம்; அருவிகள் - பலமுகமாகவும் மலையினின்றும் பெருகி வந்து கூடும் நிலை; புன்புலங்கவர - மலைச்சாரலில் உள்ள புன்புலக்கானங்களின் பொருள்களை வெள்ளத்தில் அலைத்துக்கொண்டு ஓட; கடலுற விளைப்பதே கருதி - கடலைச் சார ஓடும் முகமாய்; "கருங்கடல் காண்பதே கருத்தாய்" (7-8); கருத்து தற்குறிப்பேற்ற அணி; கைபோய் எறியும் - அலைகளை வீசும்; ஆசு - குற்றம்; -(5) வேங்கை - குறிஞ்சிக்கரு; வேங்கை மலர்கள் மிக உதிர்ந்து கிடத்தலின் அவற்றை அலைத்து வருதலை மலர் உந்தி என்றார். பொன்மலர் - பொன்போன்ற நிறமுடைய மலர்; வேங்கைமலர்கள் பொன்னிறமுடையன; இழிந்திழிந்தருவி - பலபடியும் பல அருவிகள் வந்து கூடுதல் குறிப்பு; சுழிந்திழி - வெள்ளத்தின் வேகத்தினால் நீர்ச் சுழிகளுடன் வழிகின்ற; "மாலினுந் திச்சுழி மலர்தன் மேல்வரும், சால்வினால்" (54); உற்றநோய் - இடையில் வந்து பொருந்திய பிணி; "புதிய பிணி" (3453); பிதற்றுதல் - பலவாறும் போற்றுதல்; இற்றையே - இன்றைக்கே - (குளத்தில் மூழ்கின) இப்பொழுதே; "அக்கணமே" (3453); உற - அந்தமுற; உறவு - பொருந்துதல் என்று கொடுரைத்தலுமாம்; - (6) பொன் - பொற் சன்னங்கள்; "செம்பொன் வார்கரை" (57); பொன்னி என்ற பெயரும் காண்க. இதுபற்றி முன் (57) உரைத்தவை பார்க்க; வரன்றி - மணலுடன் வாரிக்கொண்டு; உம் - அசை; நன்மலர் - கரையிருமருங்கும், மலை - காடு இவற்றில் வரும் வழியிலுமுள்ள மலர்ச் சோலைகளின் மலர்கள்; அகழுமா அருங்கரை - வெள்ள நீர் இருகரையினையும் கீண்டு ஓடுதல் குறிப்பு; வளம்படப் பெருகி - நீர்ப் |
|
|
|
|