| பெருக்கினாலும் எருச்சத்துக்களை அலைத்து வந்து பரவுதலாலும் நிலங்களை வளம்படச் செய்து; ஆடுவார் பாவம் தீர்த்து - காவிரியின் புண்ணிய நீரின் இயல்பு; இஃது இன்றும் கண்கூடாகக் காண்பது; அஞ்சனம் - கரிய அழுக்குக்கள்; அலம்பி - கழுவித் தூய்தாக்கி; -(7) மராமரம் - குறிஞ்சிக் கரு; காம்பீலி - கவரிமயிர்; மூங்கிலுமாம். உரையும் - உரைக்கும்; பிறவினை; உலகறி பழவினை - இந்நோய் வினைப்பயன் என்று உலகம் புறஅடையாளத்தாற் கண்டு கூறும்படி தோற்றமுடைய வினைவிளைவு; -(8) உகள - பாய; துள்ள; தேர்தல் - தெளிதல்; ஆருமாறு - நிறைய நுகரும் வகை; -(9) பொன்கள் - வளம்பட - 6ம் பாட்டுப் பார்க்க. பீழ்ந்து - வேருடன் பறித்து; விலங்குமாறு - நினையாது ஒழிதல்; -(10) மாறலார் - பகைவர்; அடியவர்க்கடியவன் - திருத்தொண்டத் தொகை அருளிய குறிப்பும், வரலாறும் காண்க. தொழுவன் - அடித்தொண்டன்; கங்கையார் காவிரி - கங்கையும் தன் தூய்மை கருதி வந்தாடும் காவிரி; "கங்கை யிற் புனிதமான காவிரி"; கங்கையின் பகுதியே காவிரியாகப் பெருகியது என்றலுமாம். |
| தலவிசேடம்: -திருத்துருத்தியும் வேள்விக்குடியும் - III - பக்கம் 288 பார்க்க. |
3455 | பண்ணிறைந்த தமிழ்பாடிப் பரமர்திரு வருண்மறவா தெண்ணிறைந்த தொண்டருடன் பணிந்தங்க ணுறைந்தேகி உண்ணிறைந்த பதிபிறவு முடையவர்தாள் வணங்கிப்போய்க் கண்ணிறைந்த திருவாரூர் முன்றோன்றக் காண்கின்றார்; | |
| 301 |
3456 | அன்றுதிரு நோக்கொன்றா லாரக்கண் டின்புறார் நின்றுநில மிசைவீழ்ந்து நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி வன்றொண்டர் திருவாரூர் மயங்குமா லையிற்புகுந்து துன்றுசடைத் தூவாயார் தமைமுன்னந் தொழுவணைந்தார். | |
| 302 |
| 3455. (இ-ள்) பண் நிறைந்த....மறவாது - பண்பொருந்திய தமிழாகிய அத்திருப்பதிகத்தினைப் பாடி இறைவர் செய்த பேரருளினை மறவாமல்; எண் நிறைந்த...உறைந்து - எண் நிறைந்த திருத் தொண்டர்களுடனே கூடி இறைவரை வணங்கி, அத்திருப்பதியில் தங்கி யிருந்து; ஏகி - புறப்பட்டு மேற் சென்று; உள் நிறைந்த...போய் - நினைவில் எப்போதும் நிறைவிற் கொண்ட இறைவரது பிறபதிகளிலும் இறைவரது திருவடிகளை வணங்கிப் போய்; கண்ணிறைந்த...காண்கின்றார் - கண்ணாரக்காணும் காட்சி நிறைந்த திருவாரூர் தம் எதிரே தோன்றக் காண்கின்றாராகி; |
| 301 |
| 3456. (இ-ள்) அன்று...இன்புறார் - அன்று தமது ஒரு திருக்கண்ணினால் நிறையக் கண்டும் இன்பம் முற்றப் பெறாதவராய்; வன்றொண்டர் - வன்றொண்டராகிய நம்பிகள்; நின்று...இறைஞ்சி - ஊரினைக் கண்ட அவ்விடத்தே நின்று நிலத்தின்மேல் விழுந்து எழுந்து பெருமூச் செறிந்து நேரே வணங்கி; திருவாரூர்...புகுந்து - பொழுது மயங்கும் மாலைப் போதினில் திருவாரூரினுள்ளே புகுந்து; துன்றுநடை...அணைந்தார் - நெருங்கிய சடையினையுடைய தூவாயாராகிய இறைவரை முன்னே தொழுவதற்கு அணைந்தருளினர். |
| 302 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |