[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்349

  பெருமையுடைய இசையோடும் கூடிய திருப்பதிகத்தினைத் "தூவாயா!" என்று தொடங்கி; இங்கு...என்று - இங்கே எம்முடைய துன்பத்தினைப் போக்கிக் கண்காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்ற கருத்துடன்; அங்கணர் தம்...புனைந்தார் - இறைவர் திருமுன்பு நின்று பாடி அரிய தமிழ்ப் பதிகமாகிய மாலையினைப் புனைந்தருளினர்.
  (வி-ரை) துங்க இசை - துங்கம் - உயர்ச்சி; பதிகப் பண்ணாகிய பண் பஞ்சமம்.
  "தூவாயா!" - பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு; உண்ணுகின்ற வாயினையுடையவரே!; தூ - உண்ணுதல். எமது துக்கங்களைப் போக்குபவர் என்பதும் குறிப்பு.
  "இங்கெமது...காட்டாய்" என்று - பதிகக் கருத்தாகிய குறிப்பு; எமது - பதிகத்துள் தொண்டு செய்வார் - நல்லன சொல்லுவார் - ஆகமசீலர் - என்றிவ்வாறு அடியார்களைக் குறித்து வேண்டுதலின் எமது என்று பன்மையிற் கூறினார்.
  அங்கணர் - அங்கண்மை - கண்ணோட்டம் - உடையவர்; அழகிய கண்ணுடையவர் என்றலுமாம். கண்பெறக் கேட்கின்றமையால் கண்ணுடையவரே கண் தரவல்லவர் என்ற குறிப்பும்பெற இத்தன்மை பற்றிக் கூறினார்.
  தமிழ் - தமிழ்ப் பதிகமாகிய மாலை.
 

303

  திருஆரூர்ப் பரவையுண் மண்டளி
  திருச்சிற்றம்பலம்

பண் - பஞ்சமம்

 
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டாரைவர் காக்கிலும்
நாவாயா லுன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.
 

(1)

 
கரந்தையும் வன்னியு மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை
நிரம்பிய வூர னுரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்.

  பதிகக் குறிப்பு : - "தூவாயா! இங்கெமது துயர்களைந்து கண் காணக் காட்டாய் என்று பாடியது. (3457) ஆசிரியர் காட்டியருளியவாறு.
  பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) தூவாயா - சுவாமி பெயர்; துக்கங்கள் காவாயே - துயர்கள் நலிவு செய்யாமற் காக்க வேண்டும்; காவாய் - காக்க; ஏகாரம் தேற்றம்; ஐவர்காக்கிலும் - மாறி நின்று மயக்கும் வஞ்சப் புலனைந்தும் என்னை உன்வழிச் செல்லாது சிறைப்படுத்திக் காவல் புரியினும்; 4வது பாட்டுப் பார்க்க; நாவாயால்...சொல்லுவேற்கு - நாவினால் உன்னை நன்மையே சொல்லித் துதிப்பவனாகிய எனக்கு; ஆவா! - இரக்கச் சொல்; என் - என்று அபயம் சொல்க; நல்லன சொல்லுவார் (3); ஐவர் காக்கிலும் (4); -(2) புலவர்க்கு - தம்மை உளப்படுத்திப் படர்க்கையிற் கூறிய நயம் காண்க; நினைவாரை - (5) ஆகமசீலர் (6); போற்றலாந் தன்னானே - தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி - போற்றலாகும் அளவும் புகழும் புகழ்களெல்லாம் உன்னையே வந்து சாரும் சுயஞ்சோதியே; புலவர் எவ்வாறும் எவ்வளவும் போற்றினும் அவை யாவும் உன்னையே வந்து சாரும் தன்மை