| வந்த கடலை உண்டு நிலைபெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது; தூவாய் நாயனார் என்பது துலாநாயனார் என உலக வழக்கில் மருவியது. தூவாயா என்ற பெயர் பதிகத் தொடக்கமாதல் காண்க; (தூ - உண்கின்ற; பரவை - கடல்; உண் - உண்கின்ற); மண்தளி - நிலவுலகத்தில் கடலுள் மூழ்கிவிடாது நிலைத்த கோயில் என்பது; துர்வாச முனிவர் பூசித்துப் பேறு பெற்ற பதி; இவர் திருவுருவம் விநாயகர் கோயிலில் தாபித்து வழிபடப் பெறுகின்றது. சுவாமி - மண்டலேசுவரர்; சுவாமியின் திருமேனி பளிங்கு போல விளங்குவது. அம்மை - பஞ்சினுமெல்லடியாயம்மை; பதிகம் 1. |
| இது திருவாரூர்க் கீழை வீதியில், பெரிய கோயில் மகாரத நிலைக்கு அணிமையில் தென் மேற்கில் உள்ளது. |
3458 | ஆறணியுஞ் சடையாரைத் தொழுதுபுறம் போந்தங்கண் வேறிருந்து திருத்தொண்டர் விரவுவா ருடன்கூடி ஏறுயர்த்தார் திருமூலட் டானத்து ளிடைதெரிந்து மாறிறிரு வத்தயா மத்திறைஞ்ச வந்தணைந்தார். | |
| 304 |
| (இ-ள்) ஆறணியும்....புறம்போந்து - கங்கையை முடித்த சடையினை உடைய இறைவரைத் தொழுது புறத்திற் போந்து; அங்கண் வேறிருந்து - அங்கு வேறு மோர் தனியிடத் தெழுந்தருளித் தங்கியிருந்து; திருத்தொண்டர்....கூடி - தம்முடன் பொருந்த வருவார்களாகிய திருத்தொண்டர்களுடனே கூடி; ஏறுயர்த்தார்....வந்தணைந்தார் - இடபக் கொடியினை உயர்த்திய இறைவரது திருமூலத்தானத்தின் கண் ஏற்ற சமயம் அறிந்து ஒப்பற்ற திரு அத்தயாமக் கால வழிபாட்டின்போது சார்ந்து வணங்க வந்து அணைந்தருளினர். |
| (வி-ரை) அங்கண் வேறிருந்து - அத்திருக் கோயிலின் பக்கத்தில் தனியிடத்தில் தங்கி. |
| விரவுவார் திருத்தொண்டருடன் கூடி - தம்முடன் வந்தாரும் திருவாரூரில் வந்தாரும் ஆகிய திருத்தொண்டர்களுடனே. |
| திருமூலட்டானத்துள் - பூங்கோயிலினுள் புற்றிடங் கொண்ட பெருமான் திருமுன்பு. |
| இடைதெரிந்து - செல்லத் தக்க காலமறிந்து; திரு வத்தயாம வழிபாட்டு நேரம் தெரிந்து சென்றனர் என்பது; வழிபாட்டுக் காலமல்லாக் காலத்தில் செல்லலாகாது என்பது குறிப்பு; முன் 3456ன் கீழ் உரைத்த குறிப்புக்களும் இங்குப் பார்க்கத்தக்கன. |
| மாறில் திருவத்தயாமம் - மாறின்மை - வேண்டிய வேண்டியாங்கு வரம் தரப்பெறும் தன்மையில் ஒப்புயர்வற்ற வழிபாட்டுக் காலம் திருவத்தயாம மாகும் என்னும் தன்மை. |
| வந்து அணைந்தார் - பூங்கோயிலின் பக்கம் வந்து சார்ந்தனர்; உள்ளணைந்தமை மேற்கூறுவார். (3460). |
| விரவ வவருடன் கூடி - என்பதும் பாடம். |
| 304 |
3459 | ஆதிதிரு வன்பரெதி ரணையவவர் முகநோக்கிக் கோதிலிசை யாற்"குருகு பாய"வெனக் கோத்தெடுத்தே ஏதிலார் போல்வினவி யேசறவாற் றிருப்பதிகங் காதல்புரி கைக்கிளையாற் பாடியே கலந்தணைவார், | |
| 305 |