| |
| சென்று உடைய பெருமானை வணங்கிய பின்னர்ச் செல்வது காண்க. இதுபற்றி முன் உரைத்தவையும் நினைவுகூர்க. |
| பூங்கோயில் - திருவாரூர்க் கோயிலின் பெயர்; முன் உரைத்தவை (135) பார்க்க. |
| 44 |
| 3199. (வி-ரை) பரவையார் திருமாளிகையில் - இறைவரால் ஆளாகக் கொள்ளப்பெற்றுத் தவநெறியும் பெற்றமையால், நம்பிகள் தமக்கென ஓரூரும் இடமும் இல்லாது இறைவரது இடங்களே தமதிடமாக்கொண் டொழுகினர்; ஆதலின் திருவாரூரில் பரவையார் திருமாளிகையையும் திருக்கோயிலினையுமே தமதிடமாக் கொண்டனர் என்பது குறிப்பு; இவ்வாறு முன்னுரைத்தவையும் பின்வருபவையும் பார்க்க. |
| நணிய கோயில்கள் - திருவாரூரினை அடுத்து அணிமையில் உள்ள பல கோயில்கள். இவை திருவிளமர், திருமாலுமங்கை, திருச்சாத்தமங்கை, திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின என்பது கருதப்படும். |
| பிரியாதே - புறம்பு நணிய கோயில்களுக்குச் சென்று தொழுது அவ்வந்நாளே திருவாரூருக்குத் திரும்பிவந்து சார்ந்தார் என்பது. |
| ஓவா இன்பம் - நீங்காத இன்பம். வெளியே கோயில்களைச் சென்று வணங்கினாலும் அவ்வந்நாளே திருவாரூருக்குத் திரும்பிவந்து புற்றிடங்கொண்டாரை ஒரு நாளும் இடைவிடாது வணங்கியபடியால் இடையறா இன்பம். ஓவுதல் - நீங்குதல். |
| புறம்பு நணிய - புறம்பாயினும் அணிமையில் உள்ள. |
| 45 |
| திருவலிவலம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - தக்கேசி |
| ஊனங் கத்துயிர்ப் பாயுயிர்க் கெல்லா மோங்கா ரத்துரு வாகிநின் றானை வானங் கத்தவர்க் கும்மளப் பரிய வள்ள லையடி யார்கடம் முள்ளத் தேனங் கத்தமு தாகியுள் ளூறுந் தேனினைத் திளைத் தற்கினி யானை மானங் கைத்தலத் தேந்தவல் லானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே. | |
| (1) |
| நல்லிசை ஞானசம் பந்தனு நாவுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி யேத்துகப் பானைத் தொண்ட னேனறி யாமை கல்லி யென்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டியென் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை வலிவ வலந்தனில் வந்துகண் டேனே. | |
| (5) |
| கலிவ லங்கெட வாரழ லோம்புங் கற்ற நான்மறை முற்றன லோம்பும் வலிவ லந்தனில் வந்துகண் டடியேன் மன்னு நாவலா ரூரன்வன் றொண்டன் ஒலிகொ ளின்னிசைச் செந்தமிழ் பத்து முள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய் மெலிவில் வானுல கத்துவ ரேத்த விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - நல்லிசை ஞானசம்பந்தனு நாவுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை உகந்த இறைவரை வலிவலந்தனில் வந்து கண்டேனே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :-(1) ஊன் அங்கத்து உயிர்ப்பாய் - ஊன் என்னும் உடம்பினுள்ளே தோயாதே உயிர்ப்பின் உருவாய் நின்று; "என்னுளே யுயிர்ப் பாய்ப் புறம்போந்துபுக் கென்னுளே நிற்கும்" (அரசுகள் - குறுந்.) உயிர்க்கெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றான் - பஞ்சாக்கர வடிவாகிய தன் உருவத்துள்ளே |