| முகமலர்ச்சி யடைந்து உள்ளம் தம் வசமிழந்து பரவசப்பட்டு இறைவரது திருவடி மலர்களின் மேல் பணிந்து வீழ்ந்தனர். |
| (வி-ரை) பூத முதல்வர் - சிவபூத கணங்களுக்கு நாயகர்; உயிர்களுக்கெல்லாம் ஒரு தனி நாதராகிய பசுபதி என்றலுமாம். |
| காதல்புரி வேதனை - காதல் காரணமாக வரும் துன்பம். வேதனைக்கு - வேதனையை நீக்க. |
| கருணைத் திருநோக்களித்தருளி - "அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்க மெய்த"(753); முன்னர் நம்பிகளைக் கண்ணிழப் பித்ததும் இறைவரது கருணையேயாம்; ஆனால் அது மறக்கருணை; இப்போது செய்தது அறக்கருணை நோக்கம். |
| கண் கொடுத்தருள் - கண்பார்வை கொடுக்க. |
| செவ்வே விழித்தலாவது குருடர் பார்க்கும் பார்வை போலன்றிப் பொருள்களை நேரே மலர்ந்து பார்க்கும் செவ்விய பார்வை. |
| 310 |
3465 | விழுந்து மெழுந்தும் பலமுறையான் மேவிப் பணிந்து மிகப்பரவி எழுந்த களிப்பி னாலாடிப் பாடி யின்ப வெள்ளத்தில் அழுந்தி யிரண்டு கண்ணாலு மம்பொற் புற்றி னிடையெழுந்த செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தினருளைப் பருகித் திளைக்கின்றார்; | |
| 311 |
3466 | கால நிரம்பத் தொழுதேத்திக் கனக மணிமா ளிகைக்கோயில் ஞால முய்ய வருநம்பி நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு மாலு மயனு முறையிருக்கும் வாயில் கழியப் புறம்போந்து சீல முடைய வன்பருடன் றேவா சிரியன் மருங்கணைந்தார். | |
| 312 |
| 3465. (இ-ள்) விழுந்து...பரவி - நிலம் பொருந்த விழுந்தும் பின் எழுந்தும் பல முறைகளாலும் பொருந்திப் பணிந்து மிகவும் துதித்து; எழுந்த...அழுந்தி - மேன்மேல் அதிகரித்து எழுந்த மகிழ்ச்சியினாலே ஆடியும் பாடியும் இன்பப் பெருக்கில் மூழ்கியும்; இரண்டு....திளைக்கின்றார் - இரண்டு கண்களாலும் அழகிய பொற்புற்றினிடமாக முளைத்தெழுந்த செழிய குளிர்ந்த பவளம்போன்ற சிவக்கொழுந்தாகிய இறைவரது திருவருளைப் பருகி அனுபவத்தில் மூழ்கினவராகி, |
| 311 |
| 3466. (இ-ள்) காலம்....ஏத்தி - அந்த வழிபாட்டுக் காலம் நிரம்பும் வரை தொழுது துதித்து; ஞாலம்....நம்பி - உலக முய்யும் பொருட்டுத் திருவவதரித்த நம்பிகள்; கனக மணி மாளிகைக் கோயில் - பொன்மயமாகிய அழகிய அப்பூங்கோயிலின் திருமாளிகையினை; விருப்பால்....புறம் போந்து - விருப்பத்தினால் வலமாகச் சுற்றிவந்து விட்டுணுவும் பிரமனும் முறைகிடந்து காத்திருக்கும் திருவாயிலினைக் கடந்து புறத்திற் போந்து; சீலமுடைய...அணைந்தார் - தவவொழுக்க முடைய அன்பர்களுடனே தேவாசிரியனின் பக்கத்தே அணைந்தனர். |
| 312 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. |
| 3465. (வி-ரை) விழுந்து...அழுந்தி - கண்பெற்ற பெருமகிழ்ச்சியினால் நிகழும் அளவுபடாத மெய்ப்பாடுகள். |
| பலமுறையான் - அட்டாங்க பஞ்சாங்க திரியாங்கமாகவும், அவையும் பலமுறையாகவும். |