| பரவி - பாடி - பரவுதல் - துதித்தல்; பாடுதல் - கீதம் பதிகம் முதலியவை பாடுதல்; |
| இன்பவெள்ளத்தில் அழுந்தி - இன்பத்தை நீர்ப்பெருக்காக உருவகித்தார்; அழுந்தி - என்றது நம்பிகளை அவ்வின்ப வெள்ளம் தன்னுள் அடக்கி மேலெழுந்தது என்ற குறிப்பாம். |
| இரண்டு கண்ணாலும் - பருகித் திளைக்கின்றார் - முன் ஒரு கண்ணாற்கண்டு களித்தார்; ஆயின் அதனால் மனம் நிறைவு பெறவில்லை; இப்பொழுது மற்றக்கண்ணும் பெற்றதனால் இரண்டு கண்ணாலும் பருகினார் என்பதாம்; உம்மை முற்றும்மை; கண்களால் பருகினார் - பருகுதல் - வாயின்றொழில்; அதனை இங்குக் கண்ணின் றொழிலாக உபசரித்தார்; "பருகாவின் னமுதத்தைக் கண்களாற் பருகுதற்கு"(3462); திளைக்கின்றார் - திளைத்தல் - ஆனந்தானுபவத்தில் மூழ்குதல்; திளைக்கின்றாராய்; முற்றெச்சம்; திளைக்கின்றார் - ஏத்தி என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. |
| எழுந்து களிப்பினால் - என்பதும் பாடம். |
| 311 |
| 3466. (வி-ரை) காலம்நிரம்ப - மாறி றிருவத்தயாமத் திறைஞ்ச வந்தாராதலின் (3458) அந்த அத்தயாமமாகிய வழிபாட்டுக் காலம் முடிய; அத்தயாம முடியும்வரை ஏத்தியிருந்தனர்; அதன்பின் கோயில் திருக்காப்பிடப் பெறுமாதலின் வலங்கொண்டு புறம் போந்தனர் என்பதாம்; "அங்கெய்தாக் காலத்தின்" "காலமெல்லாந் துதித்திறைஞ்சி" என்பவையும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
| முறையிருத்தல் - முறையீடுகளை விண்ணப்பிக்கக் காலம்பார்த்துக் காத்திருத்தல். |
| வாயில் - இது முதற்றிருவாயில்; நம்பிகளுக்கு இறைவர் வெளிப்பட்டுக் காட்சிதந்து திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துக் கொடுத்தருளிய இடம்; "கொடிநெடுங் கொற்றவாயில்"(336). இல்வாய் என்பது முன்பின்னாகத் தொக்கது. 6ம் வேற்றுமைத்தொகை; இலக்கணப் போலி. |
| சீலமுடைய அன்பர் - நம்பிகளுடன் தொடர்ந்து வந்தோரும் திருவாரூரிற் கலந்த அன்பர்களும்; சீலம் சிவத்தவ ஒழுக்கத்திற் பிறழாமை. |
| ஞாலமுய்யவரு நம்பி "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப் போதுவார்" என்றது ஈண்டு நினைவு கூர்தற்பாலது. |
| 312 |
3467 | நங்கை பரவை யார்தம்மை நம்பி பிரிந்து போனதற்பின் தங்கு மணிமா ளிகையின்கட் டனிமை கூரத் தளர்வார்க்குக் கங்குல் பகலாய்ப் பகல்கங்கு லாகிக் கழியா நாளெல்லாம் பொங்கு காதன் மீதூரப் புலர்வார் சிலநாள் போனதற்பின், | |
| 313 |
3468 | செம்மை நெறிசேர் திருநாவ லூர ரொற்றி யூர்சேர்ந்து கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம்புணர்ந்த மெய்ம்மை வார்த்தை தாமவர்பால் விட்டார் வந்து கட்டுரைப்பத் தம்மை யறியா வெகுளியினாற் றரியா நெஞ்சி னொடுந்தளர்வார். | |
| 314 |
3469 | மென்பூஞ் சயனத் திடைத்துயிலு மேவார் விழித்து மினிதமரார்; பொன்பூந்தவிசின்மிசையினிரார்; நில்லார்;செல்லார்; பறம்பொழியார்; மன்பூ வாளி மழைகழியார்; மறவார்; நினையா ரென்செய்வார் என்பு டுருக்கும் புலவியோ பிரிவோ விரண்டி னிடைப்பட்டார். | |
| 315 |