366திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  (இ-ள்) நின்ற....மொழிவார் - முன் கூறியவாறு புறத்தே நின்ற நிலைமையினை அப் பரிசனங்களுட் சிலர் நிலவும் நம்பியாரூரர்பால் சென்று அவர்க்கெதிரே சொல்வார்களாகி; "திருவொற்றியூரில்.....பெற்றலோம்" என்று - திருவொற்றியூரிலே நிகழ்ந்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றும் விடாது முழுமையும் அறிந்ததனாலே, அங்கு உள்ளவர்கள் புறம்பு தள்ளியமையால் இன்று திருமாளிகையின் புறத்திலேயும் சென்று சேரப் பெற்றோமில்லை" என்று கூறி; இறைஞ்சினார் - வணங்கினார்கள்.
  (வி-ரை) இது - பரவையார் திருமாளிகையினுட் புகுதப் பெறாது புறம்பு நின்ற பரிசனங்களுட் சிலர் அச்செய்தியினை நம்பிகளிடம் அறிவித்தமை கூறுகின்றது. முன்பாட்டில் புகுதப் பெறாது புறநின்றார் - என்றதனை விரித்துரைத்தபடி.
  நின்ற நிலைமை - மொழிவார் - என்று கூட்டுக. நிலைமை - நிலைமையினை; இரண்டனுருபு விரிக்க. நின்ற - திருமாளிகைப் புறத்தே நின்ற.
  அவர்கள் சிலர் - அப் பரிசனங்களுட் சிலர்; இவ்வாறன்றி, நிலைமையவர்கள் என்று கூட்டி நிலைமை அடைந்த பரிசனங்கள் என்று உரைத்தனர் முன்னுரைகாரர்கள்.
  நிலவு - அருள் வாழ்வின் நிலைபெற்ற என்க.
  மொழிவார் - என்று - என்று கூட்டுக; மொழிவார் - மொழிவார்களாகி; முற்றெச்சம்; என்று - என்று கூறி.
  செய்கை எலாம்....வகை - நிகழ்ச்சிகள் ஒன்றும் ஒழியாது எல்லாவற்றையும்.
  அறிந்து - தள்ள - என்று கூட்டுக. அறிந்த காரணத்தினால் தள்ள; அறிந்து - காரணப்பொருளில் வந்த வினையெச்சம். உள்ளார் - அங்குள்ள மாதர்கள்.
  தள்ள - பெற்றிலோம் - தள்ளியமையாலே; காரணங் குறித்தது. புறமும் - சிறப்பும்மை; இன்று மாளிகையின் புறமும் சென்றெய்த என்க; இன்று - முன்னெல்லாம் மாளிகையினுள் உரிமையாற் சென்ற நாங்கள் இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்பது, இன்று புறமும் - என்றவற்றின் குறிப்பு.
  இறைஞ்சினார் - இதற்கு மாற்று நிகழ்த்தினன்றி மேற்செயல் ஒன்றும் நிகழ்தல் இயலாமைபற்றிய முறையீடு குறித்த வணக்கம்.
 

317

3472
ற்ற மாற்றங் கேட்டழிந்த மனத்த ராகி வன்றொண்டர்
"உற்ற விதனுக் கினியென்னோ செயலென் றுணர்வா ருலகியல்பு
கற்ற மாந்தர் சிலர்தம்மைக் காதற் பரவை யார்கொண்ட
செற்ற நிலைமை யறிந்தவர்க்குத் தீர்வு சொல்லச் செலவிட்டார்.
 

318

  (இ-ள்) மற்ற...மனத்தராகி - மற்ற மாற்றத்தினை அப் பரிசனங்கள்பாற் கேட்டு அழிந்த மனத்தினை உடையவராகி; வன்றொண்டர்....உணர்வார் - நம்பிகள் வந்துற்ற இந்நிலையினுக்குத் தீர்வாக "இனி என்னோ செய்யக் கடவது?" என்று உணர்ச்சியிற் றேர்வாராகித் தெளிந்து; உலகியல்பு....செலவிட்டார் - உலகியல் பினை நன்கறிந்து தகவியற்றும் நிலை கைவந்த சில மாந்தர்களைக் காதலையுடைய பரவையார் மேற்கொண்ட கோப நிலைமையின் தன்மையினை அறிந்து அதற்கேற்றவாறு அவருக்கு அது தீரும் வகையினைச் சொல்லிச் சினந்தணிவிக்கும்படிச் செல்ல விடுத்தனர்.
  (வி-ரை) மற்ற மாற்றங் கேட்டு - மற்று - தாம் எதிர் பார்த்ததற்குமாறாகிய; மாற்றம் - சொல், மனம் மாறுபட்ட நிலை, என்று இரட்டுற மொழிந்து கொள்ள வைத்த கவிநயம் கண்டு கொள்க.