| அழிந்த மனம் மனமழிதலாவது - மனமுடைந்து வருந்துதல். |
| உற்ற - எதிர்பாராது வந்து பொருந்திய; இதனுக்குச் செயல் - இந்நிலையினை மாற்றுதற்கு; உரிய செய்கை - உபாயம்; நான்கனுருபு பகைப்பொருளில் வந்தது; "பிணிக்கு மருந்து" என்புழிப் போல. |
| உணர்வார் - செலவிட்டார் - என்று கூட்டி முடிக்க; உணர்வார் - உணர்வாராய்த் தெளிந்து. தெளிந்து என்பது குறிப்பெச்சம். |
| உலகியல்பு கற்ற - உலகியல் அறிவும், அனுபவமும், வினை செயல் வகை முதலிய ஆற்றல்களும் உடைய; உலகியலில் எவ்வெந் நிலையில் யார் யார்க்கு எவ்வெவ்வகையில் எடுத்துக்கூறினால் செயல் முடியுமோ அவ்வவ்வகை கூறிச் செயலினை முடிக்கும் ஆற்றல்வகை எல்லாம் அடங்க உலகியல்பு கற்ற எனப்பட்டது; இவ்வாறாகிய செயல்களில் அனுபவ முதிர்ந்த என்க. |
| செற்ற நிலைமை யறிந்து - பரிசனங்கள் கூறக் கேட்ட மட்டிலன்றி அவரது செற்றத்தின் அளவு முதலாகிய தன்மைகளை நேரே அறிந்து; செற்றம் - கோபம். "செற்றம்" (3526) (3474); தன் மட்டிலடங்குவதன்றி மேல் எழுந்து செலும் நிலையில் ஓங்கிய என்பது குறிப்பு. தணியாக் கோபமென்பர். |
| தீர்வு - அது தணியும் வகைக்கு உள்ள மொழிகள். தீர்வுசெய்யும் மொழிகளைத் தீர்வென்றார். |
| செலவிட்டார் - செல்லும்படி ஏவி விடுத்தனர். |
| கேட்டொழிந்த - என்பதும் பாடம். |
| 318 | 3473 | நம்பி யருளாற் சென்றவரு நங்கை பரவை யார்தமது பைம்பொன் மணிமா ளிகையணைந்து பண்பு புரியும் பாங்கினால் வெம்பு புலவிக் கடலழுந்து மின்னே ரிடையார் முன்னெய்தி "எம்பி ராட்டிக் கிதுதகுமோ?" வென்று பலவு மெடுத்துரைத்தார். | |
| 319 |
| (இ-ள்.) நம்பி....அணைந்து - நம்பிகளின் அருளாணையின் வழியே சென்ற அம்மாந்தர்களும் நங்கை பரவை யம்மையாருடைய பைம் பொன்னணிந்த அழகிய திருமாளிகையினைச் சென்றணைந்து; பண்பு...பாங்கினால் - செற்றந் தணிவிக்கும் பண்பினைச் செய்யும் தன்மையினுடன்; வெம்பு....எய்தி - மனத்தினை வெதும்பச் செய்தற் கேதுவாகிய புலவியாகிய கடலினுள்ளே அழுந்திக் கிடக்கும் மின்போன்ற இடையினையுடைய பரவையார் முன்பு சேர்ந்து; எம்பிராட்டிக்கு....எடுத்துரைத்தார் - எமது பெருமாட்டியின் பெருந்தன்மைக்கு இவ்வாறு ஊடியிருந்து நாயகரை வெறுத்தல் தகுதியாமோ? என்று இவ்வாறாகிய பலவற்றையும் எடுத்துச் சொன்னார்கள். |
| (வி-ரை) அருளால் - நம்பிகளின் பணிசெய்ய ஏவப்பெற்றது ஒரு அருளிப்பாடு - அருட் பேறு - என்பதாம். |
| பண்பு புரியும் பாங்கு - பண்பு - செற்றம் தணிவிக்கம் நல்ல நிலை; புரிதல் - கைவரச் செய்யும் நிலை; செய்தல்; பாங்கினால் - அதற்குத் தக்கவாறு தம்மை அமைத்துக் கொண்டு ஒழுகும் தன்மையுடனே; பாங்கினால் எய்தி உரைப்பார் - என்க; இதற்கு இவ்வாறன்றிப், பாங்கினால் - அழுந்தும் என்று கூட்டி, இச்செயலைப் பரவையார்பாற் சார்த்திக் கற்பை யவாவிய நிலைமையால் பிணக்கென்னும்பெருங் கடலுளழுந்திய என்றுரைப்பர் இராமலிங்க அடிகள்; இனிய மொழிகளைக் கூறும் |