370திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  3477. (இ-ள்) முன்னை...நினைந்தருளாய் - என்னை ஆளுடைய பெருமானே! முன்வினையின் பயனாக இவ்வினைக்குக் காரணமாகி நின்ற பரவையாரிடம் நான் சேர்வதற்கு நினைந்தருள் செய்யீர்!; இந்தயாமத்து...என்று - இந்த நடுயாமத்தில் தேவரீர் எழுந்தருளி அன்னம் போன்ற அவளது புலவியை நீக்கினால் உய்யலாமே யன்றி வேறு செயல் இல்லை என்று வேண்டி; பெருமான்...நினைந்தார் - இறைவரது திருப்பாதங்களை நினைந்தார்.
 

323

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3476. (வி-ரை) அருகு சூழ்ந்தார் - (3466) தேவாசிரியன் மருங்கே அணைந்திருந்த நம்பிகளைச் சுற்றிச் சூழ்ந்திருந்த பரிசனங்களும் அன்பர்களும்.
  திருஅத்தயாமம் பணிமடங்கி - திருஅத்தயாமம் என்னும் திருக்கோயில் வழிபாடும், அதற்கங்கமாக நிகழும் நாள் வழிபாட்டு முறைகளும் நிறைவாகிக் கோயில் திருக்காப்பிட்டு; மடங்குதல் - நிறைவேறி முடிவாதல்.
  பெருகு புவனம் சலிப்பின்றி - பெருகு என்றது உலக வியாபாரங்களுட்பட்டு உயிர்கள் ஓயாமல் அலைந்து திரியும் நிலை குறித்தது; புவனம் - சரம் அசரம் என்ற இருவகை யுயிர்கள்; சலிப்பு - (சலனம்) அலைதல் - திரிதல் - அசைதல்.
  பேயும் உறங்கும் பிறங்கு இருள் - பேய் - வாயு சரீரத்துடன் இருளிற் சஞ்சரித்துப் பிறவுயிர்களை அலைக்கும் உயிர்கள் அடையும் ஒருவகை நிலை; பேயும் - இரவில் இயங்கும் பேய்களும் இயங்காத நள்ளிரவு என உம்மை உயர்வு சிறப்பு.
  பிறங்கு இருள் - இருளுக்குப் பிறங்குதலாவது கூர்ந்த நிலையில் தன்னைக் காட்டி நிற்கும் நிலை. "ஒரு பொருளுங் காட்டா திருளுருவம் காட்டும்" (திருவருட்பயன் -23); "கருகு மையிரு ளின்கணம்" (454).
  முருகு...செருகும் - கொன்றைமுடி - உயர்வும், அரவுமிள மதியும் - தாழ்வும் குறித்தன; தாழ்வான பொருள்களை உயர்த்தும் கருணையினையும், அரவு மதியும் - பகைப் பொருள்களைப் பகைதீர்த்து உடன் வைக்கும் கருணையினையும் குறிப்பாலுணர்த்தின; "மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்குச் சோதியு மாயிருளாயி னார்க்கு" (திருவா) என்றும், "பாம்போடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்" (தேவா) என்றும் வரும் திருவாக்குக்கள் காண்க; ஈண்டு நம்பிகளது திருவுள்ளக் குறிப்பினை உட்கொண்டு கூறியவாறு.
  ஒருவர் - ஒப்பற்றவர்; "ஒன்றே பதி" என்றபடி ஒன்றாகிய பதி; "தானே தனிமன்றுட் டன்னந் தனி" (திருமந்).
  தனி வருந்தி யிருந்து - தனிமையாய் வருந்தி நின்று; ஒருவர் தோழர் தனி என்றது ஒருவரது தோழராந் தன்மைக் கேற்றபடி இருவரும் தனியாயினார் என்ற கவிநயமும் காண்க.
  சிந்திப்பார் - சிந்திப்பாராய்; முற்றெச்சம்; சிந்திப்பார் - நினைந்தார் என வரும் பாட்டுடன் முடியும்; சிந்தித்ததன் பயனாக நினைந்தார் என்க.
 

322

  3477. (வி-ரை) முன்னை வினையா லிவ்வினைக்கு மூலமானாள் - முன்னை வினை - பண்டு திருமலையின் நிகழ்ச்சி; இவ்வினை - இங்கு நேர்ந்த இத்துன்ப நிலை வரையில் உள்ள நிகழ்ச்சிகளின் தொகுதி; வினையால் வினைக்கு மூலம் - முன்னை வினையின் விளைவாக வந்த இவ்வினை வருதற்குக் கருவி. மூலம் - வினை வெளிப்படுதற்குப் பயன்படும் கருவி. மூலமானாள் - பரவையார். பழைய வினையால் இப்பிறவியின் விளைவுக்கு மூலமாயி னாளுடைய பக்கத்தை யடையுமாறு.