|
  |  | அணைய நினைந்தருளாய் - இறைவர் செயலெல்லாம் நினைப்பு மாத்திரை அளவானே நிகழ்வனவாதல்   குறிப்பு; "இச்சாமாத்திரம் பிரபோ சிருட்டி" "நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத் தேரானை"   (தேவா). | 
  |  | எழுந்தருளிப் புலவியினை அகற்றில் - எழுந்தருளி என்றது அருள் புரிந்து என்ற மட்டில்   பொருள் தந்து நின்றது; அகற்றுதல் - நீக்குதல். | 
  |  | அகற்றில் உய்யலாம் அன்றிப் பிறிது செயல் இல்லை - உய்வதற்கு வேறுவழி இல்லை என்று   உறுதிப்பொருள் தர உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் கூறினார். | 
  |  | என்னை உடையாய் - என்னை உடைமைப் பொருளாய் ஆளாகக் கொண்டமையால் என்று வேண்டுதலுக்குக்   காரணங் குறித்தவாறு; இக்கருத்தே பற்றி மேலும் உரைத்தல் காண்க; "நான் உமக்கு - அடியேனாகில்   நீர் எனக்கு தம்பிரானாரேயாகில்" (3482); "வலிய ஆட்கொண்ட பற்றென்" (3509); | 
  |  | பெருமானடிகள் தமை - பெருமானது திருவடிகளை; பெருமானாகிய அடிகளை என்று ஒரு சொல்லாகக்   கொண்டுரைத்தலுமாம்; "அவர் எம்பெருமா னடிகளே" (தேவா). | 
|  | என்னை யுடையா னினைந்தருளில் - என்பதும் பாடம். | 
  |  | 323 | 
  | 3478 |                       | அடியா ரிடுக்கண் டரியாதா ராண்டு கொண்ட         தோழர்குறை முடியா திருக்க வல்லரே? முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத்
 தொடியார் தழும்பு முலைச்சுவடு முடையார் தொண்டர் தாங்காணும்
 படியா லணைந்தார் நெடியோனுங் காணா வடிகள் படிதோய.
 |  | 
  |  | 324 | 
  |  | (இ-ள்) அடியார்...வல்லரே? - அடியவர்களது துன்பங்களைத் தரிக்கலாற்றாத இறைவர் தமது   அடியா ராதலோடு தம்மால் ஆளாகக் கொள்ளப்பட்ட தோழராகிய நம்பிகளது குறையினை முடிக்காமலிருக்க   வல்லராவரோ?; முற்றும்...உடையார் - உலக முழுதும் ஈன்ற காமாட்சி யம்மையாரின் அழகிய தளிர்போலுங்   கையிலணிந்த வளையின் தழும்பும் முலையின் சுவடும் உடைய இறைவர்; தொண்டர்....படிதோய் - விட்டுணுவும்   காணாத திருவடிகள் நிலம் பொருந்தத் தொண்டராகிய நம்பிகள் காணும்படியால் வந்தணைந்தனர். | 
  |  | (வி-ரை) அடியார்....வல்லரே - இது கவிக்கூற்று; ஏகாரம் வினா; வல்லரல்லர் என எதிர்மறை   குறித்தது. தொண்டர்காண அணைந்ததற்குக் காரணங் கூறியவாறு; அன்புடையாரை அறிவன் சிவன் என்பது   இறைவரியல்பாக ஞானசாத்திரங் கண்ட உண்மை; குறை - வேண்டும் காரியம். | 
  |  | முற்றும் அளித்தாள் - உலக முழுதும் ஈன்றளித்த உமையம்மையார். | 
  |  | கைத்தொடியார்...உடையார் - திருவேகம்பர் அம்மையாரது வளைத் தழும்பும் முலைச்சுவடும்   அணிந்த வரலாறு; திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் (1143) பார்க்க. விரிவு   காஞ்சிப் புராணம் தழுவக்குழைந்த படலமும், பிறவும் பார்க்க. | 
  |  | நெடியோனும் காணா அடிகள் படிதோயத் தொண்டர் தாங்காணும்படியால் அணைந்தார் என்க;   தொணடர்தம் பெருமை கூறியபடி; படிதோய - நிலம் பொருந்த. தொண்டர் - நம்பிகள்;   அவர் கண்டவாறு வரும் பாட்டிற் காண்க. | 
  |  | முற்றும்...உடையார் - இறைவரது கருணையின் எளிமை குறித்தது. | 
  |  | 324 | 
  | 3479 |                       | தம்பி ரானா ரெழுந்தருளத் தாங்கற் கரிய         மகிழ்ச்சியினாற் கம்பி யாநின் றவயவங்கள் கலந்த புளக மயிர்முகிழ்ப்ப
 |  |