| நம்பி யாரூ ரருமெதிரே நளின மலர்க்கை தலைக்குவிய அம்பி காவல் லவர்செய்ய வடித்தா மரையின் கீழவிழுந்தார். | |
| 325 |
| (இ-ள்) தம்பிரானார் எழுந்தருள - இறைவர் எழுந்தருளி வரக்கண்டு; தாங்கற்கரிய....முகிழ்ப்ப - தாங்குதற்கரிய பெருமகிழ்ச்சியினாலே உடலின் எல்லா அவயவங்களும் கம்பித்து, அதனோடு உடல் முழுதும் மயிர்ப்புளகம் முகிழ்ப்ப; நம்பியாரூரரும்....குவிய - நம்பியாரூரரும் இறைவர் திருமுன்பு தாமரை மலர் போன்ற கைகள் தலையின்மேல் ஏறிக்குவிய; அம்பிகா வல்லவர்...வீழ்ந்தார் - அம்மைபாகராகிய இறைவரது சிவந்த திருவடித் தாமரையின் கீழ்ப் பொருந்த நிலமுற விழுந்தனர். |
| (வி-ரை) தம்பிரானார் - தம்மை ஆளாகக் கொண்ட தம் பெருமானடிகள் என்ற நிலையை நினைந்து வேண்டினாராதலின் தம்பிரானார் என்ற தன்மையாற் கூறினார். |
| அவயவங்கள் கம்பியா நின்று - என்க; கம்பித்தல் - உடல் நடுக்கம் கொள்ளுதல்; "ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே, யாக வென்கை கண்கள் தாரை யாற தாக வையனே" (திருவா). |
| கலந்த மயிர்ப்புளகம் முகிழ்த்தல் - மயிர்க்கூச் செறிதல். |
| அம்பிகா வல்லவர் - அம்பிகையின் நாயகர்; சிவபெருமான்; வல்லவர் என்பது வலவர் என்பதன் விரித்தல் விகாரமாகக் கொண்டு, அம்பிகைக்கு வலப்பக்கத்தினர் என்றுரைத்தலுமாம். பரவையார்பாற் றூது செல்ல நின்றாராதலின் அம்மை தொடர்பு பற்றிக் கூறினார். |
| 325 |
3480 | விழுந்து பரவி மிக்கபெரு விருப்பி னோடு மெதிர்போற்றி எழுந்த நண்பர் தமைநோக்கி "யென்னீ யுற்ற" தென்றருளத் தொழுந்தங் குறையை விளம்புவார் "யானேதொடங்குந் துரிசிடைப்பட் டழுந்து மென்னை இன்னமெடுத் தாள வேண்டு முமக்" கென்று, | |
| 326 |
3481 | "அடியே னங்குத் திருவொற்றி யூரி னீரே யருள்செய்ய வடிவே லொண்கட் சங்கிலியை மணஞ்செய் தணைந்த திறமெல்லாங் கொடியே ரிடையாள் பரவைதா னறிந்து ‘தன்பா லியான்குறுகின் முடிவே’ னென்று துணிந்திருந்தா ளென்னான் செய்வ"தெனமொழிந்து, | |
| 327 |
3482 | "நாய னீரே! நானுமக்கிங் கடியே னாகி னீரெனக்குத் தாயி னல்ல தோழருமாந் தம்பி ரானா ரேயாகில் ஆய வறிவு மிழந்தழிவே னயர்வு நோக்கி யவ்வளவும் போயிவ் விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரு"மென; | |
| 328 |
3483 | அன்பு வேண்டுந் தம்பெருமா னடியார் வேண்டிற் றேவேண்டி முன்பு நின்று விண்ணப்பஞ் செய்த நம்பி முகநோக்கித் "துன்ப மொழிநீ யாமுனக்கோர் தூத னாகி யிப்பொழுதே பொன்செய் மணிப்பூண பரவைபாற் போகின றோ"மென்றருள்செய்தார். | |
| 329 |
| 3480. (இ-ள்) விழுந்து....என்றருள - திருவடியில் வீழ்ந்து துதித்து மிகுந்த பெரிய விருப்பத்தினோடும் எதிரில் போற்றி எழுந்த தோழனாரை நோக்கி |