374திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  3481. (வி-ரை) அங்கு - திருவாரூரில் விண்ணப்பிக்கின்றாராதலின் அங்கு என்று சேய்மைச் சுட்டினாற் கூறி அங்குத் திருவொற்றியூரில் என்றார்; அங்கு அசை என்பாருமுண்டு.
  நீரே அருள் செய்ய - இத்துன்பம் நீர் அருள் செய்ததன் காரணமாகத் தொடர்ந்து வந்ததாதலின் அதனைத் தீர்த்தல் உமது கடன் என்றது குறிப்பு.
  மணஞ் செய்தணைந்த - மணத்தாற் சேர்ந்த; மணஞ் செய்து பின் இங்கு வந்தணைந்த என்றலுமாம்.
  திறம் எல்லாம் - இடையிட்ட சரித நிகழ்ச்சிகள் எல்லாம்.
  தான் அறிந்து - பிறர் கேட்டு அறிந்ததனோ டமையாது தாமே தக்காரை ஏவி அறிந்து என்க; ஏகாரம் தொக்கது; "மெய்ம்மை வார்த்தை தாமவர்பால் விட்டார் வந்து கட்டுரைப்ப" (3468); "ஒன்று மொழியா வகையறிந்து" (3471); தான் அசை என்பாருமுண்டு.
  முடிவேன் - முடிதல் - உயிர் துறத்தல் (3474); "முடியே னினிப்பிறவேன்" (நம்பி. தேவா); கொடி - கொடிபோன்ற; ஏர் - அழகிய; உவமஉருபு தொக்கது; ஏர் - உவம உருபு என்றலுமாம்.
  துணிந்திருந்தாள் - இருக்கின்றாள் என்பது துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டது என்பர் இராமலிங்க அடிகளார்.
  கொடிநேரிடையாள் - என்னே செய்வது - என்பனவும் பாடங்கள்.
 

327

  3482. (வி-ரை) நாயனீரே! - தலைவரே!"; நாயன் - தலைவர். "அழகிது நாயனீரே" (774); "நாயனு மடிமையு நாட்டியதாகும்"; ஏகாரம் விளியுருபு.
  இங்கு - இந்நிலையில்; இவ்விண்ணப்பம் பற்றிய நிகழ்ச்சியில்; இங்கு அசையென்பாருமுண்டு.
  அடியேனாகில் - தம்பிரானாரேயாகில் - அடியேன் என்பதும் பிரானார் என்பதும் திண்ணமே யானால் - உண்மையேயானால்;
  தாயின் நல்ல - தாயினும் நல்ல; உயர்வு சிறப்பும்மை தொக்கது.
  தோழருமாம் தம்பிரானாரேயாகில் - தான் அடியேனாகில் என்பதனாலே அவர் பிரானாராவது உடன் பெறப்படும்; ஆதலின் தம்பிரானாரேயாகில் என்பது வேண்டாது கூறினார் என்னில், அற்றன்று; அடியேன் என்ற நிலையினை நீரே வலிய அமைவுபடுத்தி ஏற்றுக் கொண்டீர் என்ற குறிப்புப் பெறக்கூறினார் என்க; தோழருமாம் - தலைவராதல் மட்டிலன்றித் தோழருமாகிய என உம்மை இறந்தது தழுவியது. ஏகாரம் - தேற்றம்.
  அடியேன் - என்றும், தோழருமாம்பிரானார் - என்றும் இரண்டு காரணம் கூறியது அவர்பால் தாம் இவ்வாறு விண்ணப்பித்தற்கும் அவர் இணங்கி யியற்றுதற்கும் உள்ள உரிமையும் அமைதியும் குறிப்பதற்கு;
  தோழருமாம் - என்றது "பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால், ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே" (பாங்கற் கூட்டம் - பாங்கனை நினைதல் - 11 - திருக்கோவை) என்பதாதி அகப் பொருட்டுறைகளின் குறிப்புப்பட நின்றது.
  தாயினு நல்ல - "தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்" (பிள்-தேவா - திருக்கோணமலை - 51); "தாயவ னுலகுக்கு" (பிள்-தேவா - திருவல்லம்-2); "தாயுமா யெனக்கே" (அரசுகள் - திருச்சிராப்பள்ளி - 4) "தாயினு