| நல்ல சங்கரனுக் கன்பர்" (அரசுகள் - ஆதிபுராணக் குறுந் - 9) என்பன முதலியவை காண்க; இத்திருவாக்குக்களிற் காண்கின்றவாறு. |
| "தாயினு நல்ல" - என்ற அடைமொழியைத் "தம்பிரானா"ரோடு சேர்த்தாது "தோழர்" என்பதனோடு புணர்த்திய தென்னையோ? எனின், குழவிக்கு வேண்டிய எத்தொழிலும் செய்யும் தாயின் தன்மை தோழனாந் தகுதியோடே பொருந்துவதாகும் குறிப்புப்பட என்க. |
| ஆய அறிவும் இழந்து - உம்மை இறந்தது தழுவியதென்று கொண்டு, செயற்கை யறிவே யன்றி இயற்கை வறிவும் இழந்து என்பர் இராமலிங்க அடிகள்; |
| அவ்வளவும் - மாளிகையின் சிறு தூரத்தின் அளவும் என்றலின் உம்மை சிறப்பும்மை; அந்த மாளிகையின்கண்ணும் என்ற ஏழனுருபு விரித்துரைத்தலுமாம்; இப்பொருளில் உம்மை இழிவு சிறப்பு. |
| இவ்விரவே - ஏகாரம் பிரிநிலை; துன்ப மிகுதிக் குறிப்பு உணர்த்திற்று. |
| தீர்த்தாண்டருளும் - என்பதும் பாடம். |
| 328 |
| 3483. (வி-ரை) அன்பு வேண்டும் தம்பெருமான் - "வேண்டுதல் வேண்டாமை யிலா" னாகிய இறைவர் தமது அருள் சுரத்தற்கு அடியார்பால் வேண்டுவது அன்பு ஒன்றுமே யாம் என்பது; அன்பு - அன்பே; பிரிநிலை ஏகாரம் தொக்கது; |
| அடியார் வேண்டிற்றே வேண்டி - அடியார் வேண்டுமதனையே தாமும் திருவுள்ளங் கொண்டு; "வேண்டத் தக்க தறிவோய்"....."வேண்டி நீயா தருள் செய்தாயானு மதுவே வேண்டினல்லால்" (திருவா); அடியார் வேண்டுவன முற்றுப்பெறும் அளவாவன அவற்றையே இறைவன் திருவுள்ளத்துக் கொள்ளும் நிலையளவேயாம். இறைவரது திருவருள் வழியே அடியார் வேண்டுவதும் பொருந்தினால் அவ்வளவே அவ்வேண்டுகை நிறைவேறும் அளவென்பது திருவாசகம். ஆனால் இங்கு அந்த முறையும் நிலையும் மாறி, அடியார் வேண்டுகையினை நிறைவேற்றத் திருவுளங்கொண்டு இறைவர் அதனையே தாமும் வேண்டினார் என்றார்; அடியாரது அடிமைத்திறத்தின் உறைப்பும், இறைவர் அவர் எண்ண முடிப்பதிற் கொண்டருளிய ஆர்வமும் குறித்தற்கு. |
| உனக்கு ஓர் தூதனாகிப் போகின்றோம் - என்க. உனக்கு - உன் பொருட்டு; தூதன் - தூதுகாணும் அகப் பொருட்டுறைகளின் கருத்தினை இங்கு வைத்துக் காண்க. |
| இப்பொழுதே - முன் "இவ்விரவே" (3482) என்றதற்கிணங்க, அதனினும் விரைந்து இப்பொழுதே - என்றார்; அது போழ்து பின்னிரவாய்க் கழிந்து செல்லும் கால எல்லையும் குறிப்பு. |
| 329 |
3484 | எல்லை யில்லாக் களிப்பினரா யிறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து வல்ல பரிசெல் லாந்துதித்து வாழ்ந்து நின்ற வன்றொண்டர் "முல்லை முகைவெண் ணகைப்பரவை முகில்சேர்மாடத்திடைச்செல்ல நில்லா தீண்ட வெழுந்தருளி நீக்கும் புலவி" யெனத்தொழுதார். | |
| 330 |
| (இ-ள்) எல்லையில்லா...வன்றொண்டர் - அளவில்லாத மகிழ்ச்சியை உடையவராகி இறைவரது திருவடிகளில் விழுந்து எழுந்து இயன்ற தன்மைகள் எல்லாவற்றாலும் துதித்து வாழ்வடைந்து நின்றவராகிய வன்றொண்டர்; முல்லை.....எனத் தொழுதார் - முல்லை யரும்பு போன்ற வெள்ளிய பற்களை யுடைய பரவையினது மேகந் தவழ உயர்ந்த மாளிகையின் கண்ணே சென்றருளுவதற்காக இனி |