376திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  இங்கு நில்லாது விரைவில் எழுந்தருளிச் சென்று அவளது புலவியினை நீக்குவீராக என்று சொல்லித் தொழுதனர்.
  (வி-ரை) எல்லையில்லாக் களிப்பினராய் - இறையவரே தூது செல்ல ஒருப்பட்டருளினாராதலின் "முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ" (132) என்றபடி அச்செய்தி முற்றுப் பெற்றேவிடும் என்ற உறுதிப்பாட்டினால் தம் கருத்து முற்றியதாகவே கொண்டு அளவில்லா மகிழ்ச்சியினுட்பட்டனர்.
  தாளில்...நின்ற - அளவுகடந்தெழுந்த மகிழ்ச்சியின் மெய்ப்பாடுகள்; வல்ல பரிசெலாம் - தாம்வல்ல - தம்மாலியன்ற - ஆற்றாலெல்லாம்.
  நகை - நகைக்கு இருப்பிடமான பல்வரிசை குறித்தது.
  முகில்சேர் மாடம் - உயர்ச்சி குறித்தது.
  வெண்ணகைப் பரவை - என்றது இறைவர் தூதுவரக்காணும் பரவை புலவி நீங்கி மகிழ் கொள்ளுதல் ஒருதலை என்ற குறிப்பினாற் கூறியது. "அணிமுறுவல் அரும்பரவை" (294).
  ஈண்ட - விரைவாக; நீக்கும் புலவி - என மாறிக் கூறியதும் விரைவுக் குறிப்பு.
 

330

3485
அண்டர் வாழக் கருணையினா லால கால மமுதாக
உண்ட நீலக் கோலமிடற் றொருவ ரிருவர்க் கறிவரியார்
வண்டு வாழு மலர்க்கூந்தற் பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தந் துயர்நீக்கத் தூத னாரா யெழுந்தருள,
 

331

3486
தேவா சிரியன் முறையிருக்குந் தேவ ரெல்லாஞ் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார் போத வொழிந்தார் புறத்தொழிய
ஓவா வணுக்கச் சேவகத்தி லுள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகிகளின் முதலா னார்கள் முன்போத,
 

332

3487
ருகு பெரிய தேவருட னணைந்து வருமவ் விருடிகளும்
மருவு நண்பு நிதிக்கோனு முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்த
தெருவும் விசும்பு நிறைந்துவிரைச் செழும்பூ மாரி பொழிந்தலையப்
பொருவி லன்பர் விடுந்தூதர் புனித வீதி யினிற்போத,
 

333

3488
மாலு மயனுங் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சுங்
கால மிது"வென் றங்கவரை யழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தா னடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார் திருமா ளிகையை நேர்நோக்கி,
 

334

3489
றைவர் விரைவி னெழுந்தருள வெய்து மவர்கள் பின்றொடர
அறைகொ டிரைநீர் தொடர்சடையி லரவு தொடர, வரிய விளம்
பிறைகொ ளருகு நறையிதழிப் பிணையல் சுரும்பு தொடர,வுடன்
மறைக டொடர, வன்றொண்டர் மனமுந் தொடர வரும்பொழுது,
 

335

3490
பெருவீ ரையினு மிகமுழங்கிப் பிறங்கு மதகுஞ் சரமுரித்து
மருவீ ருரிவை புனைந்தவர்தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திருவீ தியினி லழகரவர் மகிழுஞ் செல்வத் திருவாரூர்
ஒருவீ தியிலே சிவலோக முழுதுங் காண வுளதாமால்.
 

336