[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்377

  3485. (இ-ள்) அண்டர்...அறிவரியார் - தேவர்கள் வாழும் பொருட்டு அருளினாலே ஆலால விடத்தினையே அமுதாக உண்டு அதனால் நீலகண்டராகிய ஒருவரும், இருவராகிய பிரம விட்டுணுக்களுக்கு அறிதற் கரியவரும் ஆகிய இறைவர்; வண்டு...நோக்கி - வண்டுகள் மொய்த்துள்ள மலர்களைச் சூடிய கூந்தலையுடைய பரவையாரது திருமாளிகையை நோக்கி; தொண்டனார்தம்...எழுந்தருள - தொண்டனாராகிய நம்பிகளது தூதராக எழுந்தருளிச் செல்ல,
 

331

  3486. (இ-ள்) தேவாசிரியன்...புறத்தொழிய - தேவாசிரியன் திருவாயிலில் வரங்கிடந்து காத்திருக்கும் தேவர்கள் எல்லாரும் சேவித்துப் போவார்களுள் வேண்டுபவர்கள் மட்டும் உடன்போக, ஒழிந்தவர்கள் புறத்திற் போக; ஓவா....முன்போத - நீங்காத திரு அணுக்கத் தொண்டில் உள்ளோர்களும் சிவபூத கணநாதர்களும் மூத்தலில்லாத முனிவர்கள் யோகிகளுள் முதன்மை பெற்றவர்களும் முன்பு செல்ல,
 

332

  3487. (இ-ள்) அருகு....ஏத்த - பக்கத்தில் நந்திபெருமானுடனே அணைந்து வரும் அந்த இருடிகளும் பொருந்திய நண்புடைய குபேரனும் முதலாக உள்ளவர்கள் மகிழ்ந்து துதிக்கவும்; தெருவும்...பொழிந்தலைய - திருவீதியும் வானமும் நிறைந்து மணமுடைய செழிய பூமழை பொழிந்து பரவ; பொருலில்...போது - ஒப்பற்ற அன்பராம் நம்பிகள் விட்ட தூதராகிய இறைவர் தூய திருவீதியிற் போத,
 

333

  3488. (இ-ள்) மாலும்...என்ன - திருமாலும் பிரமதேவரும் காண்பதற்கரிய இறைவரது தாமரைபோன்ற திருவடிகளைச் சிரமேற்றாங்கி வந்து வணங்குதற்குரிய காலம் இது என்று அவர்களை அழைத்தாற்போல; கடல்விளைத்த...சிலம்பு ஒலிப்ப - கடலில் வந்தெழுந்த விடம் தங்கியதனால் இருள்கொண்ட கண்டத்தினை உடைய இறைவரது திருவடித் தாமரையின்மேல் சிலம்பு சத்திக்க; நீல...நோக்கி - நீலமலர் போன்ற கண்களையுடைய பரவையாரது திருமாளிகையினைக் குறித்து நேர் நோக்கி,
 

334

  3489. (இ-ள்) இறைவர்...எழுந்தருள - இறைவர் விரைவாக எழுந்தருள; எய்து....பின்றொடர - முன் கூறியவாறு பொருந்த வருகின்ற அவர்களெல்லாம் அவர்பின் தொடர்ந்து வர; அறைகொள்.....அரவு தொடர - சத்தித்து வரும் அலைகளையுடைய கங்கைநீர் பொருந்திய சடையில் பாம்புகள் தொடர; அரிய....சுரும்பு தொடர - அருமையாகிய இளம்பிறையின் அருகே தேன் பொருந்திய கொன்றை மாலையில் வண்டுகள் தொடரவும்; உடன் மறைகள் தொடர - உடனே வேதங்கள் தொடரவும்; வன்றொண்டர் மனமும் தொடர - இவற்றோடும் வன்றொண்டரது மனமும் உடன் தொடரவும்; வரும்பொழுது - இவ்வாறாக வரும்பொழுது.
 

335

  3490. (இ-ள்) பெருவீரையினும்...நெருங்குதலால் - பெரிய கடலினும் மிக்க முழக்கம் செய்து விளங்கும் மதயானையினை உரித்து அத்தோலைப் போர்த்த அப்பெருமானது பக்கத்தே முன் கூறியபடி சூழ்ந்து வருவார்கள் நெருங்கி வருதலாலே; திருவீதியினில்....உளதாமால் - திருவீதியில் எழுந்தருளும் அழகராகிய இறைவர் மகிழும் அச் செல்வத் திருவாரூரின் ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாயிற்று.
 

336

  இந்த ஆறு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3485. (வி-ரை) ஆலகாலம் - ஆலால விடம்,