380திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  திருவீதியினில் அழகர் - வீதியில் எழுந்தருளிய அழகராகிய வீதிவிடங்கர்.
  திருவாருர் ஒரு வீதியிலே சிவலோக முழுதுங்காண - சிவலோகமுழுதும் என்றது சிவலோகத்துட் காணப்படுவோர் இத்திருவீதியிலும் காணப்படுதலால் ஒப்புமை கூறப்பட்டது. நெருங்குதலால் - காண உளதாமால் என்று கூட்டுக.
  வீதியிலே என்றார் இங்குச் சூழ்வோர் அனைவரும் வீதி அளவில் நின்றுவிட, இறைவர் மட்டும் தம்மைப் பூசிக்கும் அந்தணர் வடிவுடன் இம்முறையில் திருமாளிகையினுள் எழுந்தருளுதல் குறிப்பு. மேல் வரும் முறையில் இறைவர் தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு மருங்கு சூழும் கணத்தவர் முதலிய அனைவருடன் மாளிகையினுள் எழுந்தருளுதலால் ‘அத்திருமானிகை தென்பால் வெள்ளித் திருமலை போன்ற தன்றே" (3516) என்பது காண்க.
  அழகர் - இறைவர்; மகிழும் செல்வத் திருவாரூர் - திருத்தாண்டகப் பதிகங்களும் பிறவும் காண்க.
  ஒரு வீதியிலே முழுதும் காண - ஒரு - சுட்டுப் பொருள் தந்து நின்றது; ஏகாரம் பிரிநிலை; உம்மை - முற்றும்மை. காண - காண்பதுபோல.
  உளதாமால் - காலமயக்கம்; உரிமை - உரித்தலால் பெறப்படுவது.
 

336

3491
ஞால முய்ய வெழுந்தருளு நம்பி தூதர் பாவையார்
கோல மணிமா ளிகைவாயில் குறுகு வார்முன் கூடத்தம்
பாலங் கணைந்தார் புறநிற்பப் பண்டே தம்மையர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவ ராகித் தனியே சென்றணைந்தார்.
 

337

  (இ-ள்) ஞாலம்.....தூதர் - உலக முய்யும் பொருட்டு வந்தவதரித் தருளிய நம்பிகளது தூதராகிய இறைவர்; பரவையார்...குறுகுவார் - பரவையராது அழகிய மணிகள் அணிந்த திருமாளிகையின் வாயிலிற் சேர்வாராய்; முன்கூட....புறநிற்ப - முன்னரே தம்பாலின் அங்கு அணைந்தவர்கள் எல்லாரும் புறத்திலே நிற்கப்பணித்து; பண்டே....சென்றணைந்தார் - நீண்ட நாளாகத் தம்மை அருச்சனை புரியும் சீலம் உடைய சிவ வேதிய முனிவராகிய கோலத்துடன் தனியே சென்று சேர்ந்தனர்.
  (வி-ரை) ஞால முய்ய எழுந்தருளு நம்பி - "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப், போதுவார்" (35) என்று தொடக்கத்திற் கூறிய கருத்தை ஈண்டு நினைவு கூர்தற்பொருட்டு எடுத்துரைத்தவாறு; என்னை? ஞாலமுய்தற் பொருட்டுத் திருமலையில் நம்பிகளது காட்சி நிகழ, அதனால் "மாதர்மேன் மனம் வைத்தனை தென்புவி, மீது தோன்றியம் மெல்லியலாருடன், காத லின்பங் கலந்தணைவாய்" (37) என இறைவராணை நிகழ, அந்நியதியின்படி புவித்தோற்றம் நிகழ, அந்நிகழ்ச்சியினைக் கூட்டுவிக்கும் பொருட்டு இறைவர் தூதரா யெழுந்தருளினார் என்க. "செய்வினையும் செய்வானும் மதன் பயனும் சேர்ப்பானும்" (சாக் புரா.5) என்றபடி ஈண்டுச் செய்வினைப் பயன் கூட்டுவிப்பாராய் இரைவர் தூதரானார் என்பது குறிப்பு; இங்கு இத்தூதின் நிலை பற்றி உண்மையறிய லாற்றாது குறை கூறப் புகுவோர், நம்பிகளது சரிதம் பற்றிய இந்நிகழ்ச்சியேயன்றி உலகில் எல்லா உயிர்களின் எல்லா வினைப்பயன்களையும் இடை நின்று கூட்டுவிப்பவர் இறைவரேயாம் என்ற உண்மை நிலையைக் கருதித் தெளியக்கடவர்.
  முன்கூட....புறநிற்ப - கணங்கள் - தேவர் - முனிவர் முதலியோர்கள் திருமாளிகையின் புறத்தே திருவீதியளவில் நின்றுவிட; இதுபற்றியே முன் "ஒரு