| வீதியிலே சிவலோக முழுதும் காண" என்றார். முன்கூட - அணைந்தார் - முன்னே சென்றவர்கள். |
| பண்டே....தனியே சென்று அணைந்தார் - பண்டே - நீண்ட காலமாக; வயது முதிர்ந்த; சீலம் - தவவொழுக்கம்; தனியே - உடன் வந்தவர்களின்றி; "நீடிய பேதையா ளுடனின்றி’ (447) என்ற கருத்தும் ஈண்டு வைத்துக் கருதத்தக்கது; பின்னர்த்"தாமாந் தன்மை யறிவுறு கோலத் தோடும்"(3515) என்பதனை இங்கு வைத்து ஒப்பு நோக்குக. |
| தனியே - "மாதரார் தாமிருந்த, இடவகையிற் றனிபுகுதோம்" (3697) என்ற நிலையினையுடையராய்த் தம்மைக் காட்டி நடிக்கும் பிரானார் இங்குப் பரவையார் தனியிருந்த திருமாளிகையில், பாதியிரவில் அதற்கு மாறாகத் தனியே புகுந்தாரே? எனின், பண்டே தம்மை அர்ச்சிக்கும் மறை முனிவர் கோலமும் சீலமுடைமையும் அவ்வொழுக்கத்தினை இகவாமற் காத்தன என்பது குறிக்க இவற்றை முன் கூறிக் காட்டிய நயம் காண்க. |
| ஆகி - ஆக்கச் சொல் உருவமாறுதலை மேற்கொள்ளுதல் குறித்தது. ஆக்கிக் கொண்டு இவ்வாறு அருளினாலே நினைந்தவாறே நினைந்த மேனி கொள்ளுதல் இறைவரியல்பென்க. (சித்.1-45; சிவப்.15). |
| மறைமுனிவராகித் தனியே சென்று அணைந்தார் - இவ்வாறு ஒருமுறைக் கிருமுறை தூது செல்லுதலும், முதலில் மறை முனிவராகித் தனியே செல்லுதலும், பின்னர்த் தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு செல்லுதலும் முதலிய செயல்கள் இறைமைத் தன்மையோடு இயைவனவோ? இவற்றின் தன்மை என்னை? எனின், இவை, உயிர்கள் வினைப்பயன்களைத் துய்த்து ஈடேறச் செய்தற்கண் முன்னவன் செய்யும் அருள் விளையாட்டுக்களேயா மென்க; இவற்றின் காரணமும் நிகழ்ச்சி முறையும் நம்மாற் காண முடியாது; ஆதலிற் கேட்டலுமாகாது என்பது இறைவனாணையாம். உயிர்கள் வினைத்திறத்தாற் பலதிறப்படுவன; ஆதலின் அவ்வவர்க்குச் செய்யும் அருளின் வண்ணமும் பலபல ஆவன; "ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்புங், கேட்பான்புகி லளவில்லை கிளக்க வேண்டா" (திருப்பாசுரம்) என்ற ஆணையும், அதற்கு, "அருளும் திறம், நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால், ஓது மெல்லை யுலப்பில வாதலின், யாது மாராய்ச்சி யில்லையாம்" (2731) என்ற ஆசிரியரது விளக்கமும் கண்டு உளங்கொள்ளத் தக்கன. |
| 337 |
3492 | சென்று மணிவா யிற்கதவஞ் செறிய வடைத்த வதன்முன்பு நின்று "பாவாய்! திறவா"யென் றழைப்ப, நெறிமென் குழலாரும் ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வா "ருடைய நாதன் பூசனைசெய் துன்றும் புரி நூன் மணிமார்பர்போலு மழைத்தா" ரெனத்துணிந்து, | |
| 338 |
3493 | "பாதி மதிவாழ் முடியாரைப் பயில்பூ சனையின் பணிபுரிவார் பாதி யிரவி லிங்கணைந்த தென்னோ?" வென்று பயமெய்திப் பாதி யுமையா டிருவுருவிற் பரம ராவ தறியாதே பாதி மதிவா ணுதலாரும் பதைத்து வந்து கடைதிறந்தார். | |
| 339 |
| 3492. (இ-ள்) சென்று....அழைப்ப - முன்கூறியவாறு தனியே சென்றணைந்து நெருங்க அடைத்த அழகிய அவ்வாயிற் கதவத்தின் முன்பு நின்று, "பாவையே! கதவந்திறவாய்" என்று அழைத்திட; நெறிமென்........அயர்வார் - நெறித்த மெல்லிய கூந்தலையுடைய பரவையாரும் ஒரு சிறிதும் துயிலாமல் விழித் |