|
  |  | பாதி இரவில் இங்கு அணைந்தது என்னோ என்று பயம் எய்தி - பாதி இரவு - வரத்தகாத நேரம்;   (ழுபேயு முறங்கும் பிறங்கிருள் வாய்" (3476);) என்பதும் இங்கு - வரத்தகாத இவ்விடத்து   என்பதும் குறிப்பு. | 
  |  | பயம் எய்தி - தம்பாலுள்ள குறை காரணமாமோ என்ற நினைவினால் வந்த அச்சம். | 
  |  | பாதி யுமையாள்.....அறியாதே - வந்து அழைத்தவர் சிவபெருமான் என்பதைச் சிறிதும் தெரியலாற்றாது;   அக்குறிப்புக்கள் தானும் அறிந்த இடத்துப் பரவையார் கொண்ட மனமழிந்த நிலையினை மேல்   (3513-3514) உரைப்பது காண்க; அறியாதே - அறிந்திருப்பாராயின் இங்கு, மேல்   (3495 -3499) வருமாறு மறுத்து வலிந்துரைத்திருக்க மாட்டார் என்பது குறிக்க அறியாதே   என்று அமைதி வகுத்தமை காண்க. | 
  |  | பாதி மதிவாள் நுதலார் - பரவையார்; பாதிமதி - அரைப்பிளவாகிய சந்திரன்.   அர்த்த சந்திரன் என்பர். இது பெண்ணின் நெற்றிற்கு செய்யும் உருவும் பற்றி உவமிக்கப்படும்;  வாள் நுதல் என்ற குறிப்புமிது; பாதிமதி - மதி - புத்தி - ஆலோசனை என்ற   குறிப்புடன் - இந்நிலையில் புத்திக் குறைவுடனின்ற என்ற பொருளுந்தரநின்றது;" தேய் மதியன்"   (திருவா) என்பழிப்போல. | 
  |  | பதைத்து - பதைத்தல் பயத்தின் விளைவு; கடை - கதவம். | 
  |  | குறிப்பு:- இந்நிலையில் இறைவரது தூது பாதிப் பயனுடன் நின்று மீண்டும் வருதலுடன்முழுப்பயனும்   தந்து நிறைவாவது என்ற குறிப்புத்தர இப்பாட்டில் பாதி என்று நான்கடியிலும் எதுகை வைத்து   சொற் பொருட் பின்வரு நிலையில் அருளிய கவிநயமும் கண்டுகொள்க. | 
  |  | 339 | 
  | 3494 |                       | மன்னு முரிமை வன்றொண்டர் வாயிற் றூதர்         வாயிலிடை முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி"முழுது முறங்கும் பொழுதின்கண்
 என்னை யாளும் பெருமானிங் கெய்தி யருளி னாரென்ன
 மின்னு மணிநூ லணிமார்பீ! ரெய்த வேண்டிற் றென்?"னென்றார்.
 |  | 
  |  | 340 | 
  |  | (இ-ள்) மன்னு...இறைஞ்சி - நிலைபெற்ற தோழராகும் உரிமையுடைய வன்றொண்டரது காரணமாக   வரும் தூதராகிய இறைவர் வாயிலின் முன்னே நின்றாரைப் பரவையார் கண்டு வணங்கி;   முழுதும்......கண் - உலகத்துயிர்கள் யாவையும் துயிலும் இந்த நடு இரவிலே என்னை யாளுடைய   இறைவரே இங்கு எழுந்தருளி வந்தார் என்பதுபோல, விளங்கும் அழகிய நூலணிந்த மார்பினை யுடையவரே!   தேவரீர் இங்கு வரவேண்டிய காரணமென்ன? என்று வினவினார். | 
  |  | (வி-ரை) உரிமை....தூதர் - தோழராகும் உரிமையினாலே விடுக்கப்பட்டுப் போந்த அவரது   தூதர்; நம்பிதூது விடுத்தற்கும் இறைவர் இசைந்து தூதுசெல்வதற்கும் இருபாலும் ஒன்று போலவே தோழராந்தன்மையே   உரிமை தந்தது என்பதாம். | 
  |  | வாயில் - காரணம்; வாயில் தூதர் - வாயிலாக வரும் தூதர். வாயிற்றூதர்   - வாயிலிடை; சொற்பின் வருதலை; வாயில் - திருமாளிகை வாயில்; | 
  |  | தூதர் நின்றாரை - தூதராய் வந்து நின்றாரை. | 
  |  | முழுதும் உறங்கும் பொழுது - உலகத்துள்ள உயிர் வருக்கமெல்லாம் துயிலும் நள்ளிரவு. |