|
  |  | வும் ஒன்றுண்டோ?; நீர்....என்று - நீர் இந்த நடு இராத்திரியில் வந்து மேற்கொண்டு   சொன்ன இக்காரியம் மிக அழகியதாம்"என்று சொன்னார். | 
  |  | 343 | 
  |  | இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. | 
  |  | 3495. (வி-ரை) நீர் கரந்த வேணி கரந்தவர் - சொல்லணி; நீர் கரந்த -   பெருநீரினை வெளிப்படாது உள்ளே அடக்கிவைத்த; கரந்தவர் - மறைத்தவர்; அர்ச்சகர்   வேடமாய் வந்தாராதலின் சடையினையும் தாமாந்தன்மையினையும் கரந்தார். | 
  |  | நங்கை - பெண்களி லுயர்ந்தவரைக் குறிக்கும் மகடூஉச் சிறப்புப் பெயர்; "அவர் நங்கை   பரவையார் - (293). | 
  |  | செய்யின் - நான் வந்த காரியத்தை எடுத்து உரைக்கும்படி செய்வாயாகில்; உரைப்பது   - உரைக்கப்படுவதாம். | 
  |  | அதனை - வந்த காரணத்தினை; முன்னம் அருளிச் செய்தால் என்க; முன்னம் என்பது   குறிப்பெச்சம். | 
  |  | இங்கு எனக்கு இசையுமாகில் இசையலாம் - தேவரீர் வந்த காரியம் என்மனதிற் கிசையுமாகில்   செய்ய இசையலாம்; மனதிற் கிசைதல் - மனம் பொருந்துதல்; மனதிற்குப் பொருந்தினும் தம்மாற்   செய்தற் கியல்வது - செய்யக்கூடியதாதலும் வேண்டும்; அதனை மேல்வரும் பாட்டிற் "பின்னைய   தியலுமாகில்" (3496) என்று கூறுதல் காண்க; இயல்வதாயினும் மனமிசையாதாயின் செய்யக்கூடாமையாதலின்   அதனை முதற்கண் இங்குக் கூறினார். | 
  |  | 341 | 
  |  | 3496. (வி-ரை) என்னினைந்து என்பால்அணைந்தது அதனை இன்ன தென்று - என்க;   பின்னை - அதன்மேல்; அவ்வாறருளிச் செய்ததன்பின்; ஆம் - செய்யலாகும்;   இசையலாகும். | 
  |  | நம்பி இங்கு வரவேண்டும்; அதுவே நான் நினைந்து உன்பால் வேண்டி வந்தது என்ன என்க.   அதுவே நான் நினைந்து உன்பால் வேண்டி வந்தது என்பதுஇசையெச்சம். | 
  |  | வேண்டும் என்ன - வேண்டுதல் வேண்டாமையிலராயும், தம்பால் யாவரும் வேண்டுவன வேண்டுவதல்லது   தாம் ஒருவரை எதுவும் வேண்டும் நிலையில்லாராயும் உள்ள இறைவர் இவ்வாறு வேண்டுவது பரவையாரது   தவப்பெருமை! என்க. | 
  |  | சால நம்பெருமை - இகழ்ச்சிக் குறிப்புப்படக் கூறியது; அற்றாயினும் உண்மைக்   குறிப்பும் பட நிற்பதும் காண்க. | 
  |  | வரப்பெற வேண்டும் - என்பதும் பாடம். | 
  |  | 342 | 
  |  | 3497. (வி-ரை) பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவா ராகி; இது நம்பிகள்   முன்னை நாள்களில் எல்லாம் சென்று வந்த முறைமை, திருவாரூரினின்றும் பிரிந்து எங்குச் சென்றாலும்   அங்கங்கும் பொன்பெற்றுப் பண்டு போலத் திருவாரூருக்குப் பங்குனி விழாவுக்கு மீண்டுவரும் வழக்கு;   இம்முறை அவ்வாறு பிழைத்துத் திருவொற்றியூர் சென்று சங்கிலித் தொடக்குண்டார் என்ற கருத்து   மேல் உரைக்கப்படுதல் காண்க. | 
  |  | சங்கிலித் தொடக் குண்டாருக்கு - சங்கிலித் தொடக்கு - சங்கிலியாரை மணந்து கட்டுண்டு   - சங்கிலியாலே பிணைப்பட்டு என இருபொருள்படவந்த சிலேடை; சங்கிலி போன்று பிணைக்கும் சங்கிலியார்   என்ற உவமத்தினையும் உள்ளுறுத்தி நிற்பது காண்க; "என்னா ருயிரு மெழின்மலருங் கூடப் பிணைக்குமிவன்"   (3384), "சிந்தைநிறை காவா தவர்பாற் போய்வீழ" (3381), "என்னை யுள்ளந் திரிவித்தாள்" |