|
  |  | (3382) என்பன முதலியவை காண்க. திருவொற்றியூரினின்றும் பிரியாமைக்குச் சபதத்தாற் கட்டுண்ட   சரித நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்த பிறவும் குறிப்பு. | 
  |  | இங்கு ஒரு சார்வு உண்டோ? - சார்வு - சாரத்தக்க பற்று; சார்வு - சாரும்   பொருள். | 
  |  | அழகிது - இகழ்ச்சிக் குறிப்பு. நீர் - இதனை மேற்பூண்டு வரத்தகாத நீர் என்பதும்,  கங்குலின் - வரத்தகாத நேரம் என்பதும், வந்து சொன்ன - சொல்லவும் தகாததனைச்   சொன்ன என்பதும் குறிப்பு. 3499 பார்க்க. | 
  |  | 343 | 
  | 3498 |                       | நாதரு மதனைக் கேட்டு "நங்கைநீ நம்பி செய்த ஏதங்கண் மனத்துக் கொள்ளா தெய்திய வெகுளி நீங்கி
 நோதக வொழித்தற் கன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்ட
 தாதலின் மறுத்தல் செய்ய வடா" தென வருளிச் செய்தார்.
 |  | 
  |  | 344 | 
  |  | (இ-ள்) நாதரும் அதனைக் கேட்டு - இறைவரும் அம்மொழியைக் கேட்டு; நங்கை நீ.....நீங்கி   - நங்கையே! உன்பால் நம்பி செய்த குற்றங்களை மனத்துள் வையாது, பொருந்திய புலவியினை நீங்கி;   நோதகவு.....வேண்டிக் கொண்டது - துன்பஞ் செய்யும் தன்மையினை நீக்குதற் கல்லவோ உன்னை நான்   வேண்டிக் கொண்டேன்; ஆதலின்....அருளிச் செய்தார் - ஆதலாலே நீ என் சொல்லினை மாறுபாடு   செய்தல் தகாது என்று அருளிச் செய்தனர். | 
  |  | (வி-ரை) நங்கை நீ - செற்றந் தணிப்பதற்கு நங்கை - என உயர்ச்சிக்   குறிப்புப்பட விளித்தவாறு. நம்பி - என்று கூறியதும் அக்குறிப்பு. | 
  |  | ஏதங்கள் - அவை பலவாயினும் அவை எல்லாம் மனத்துக் கொள்ளாதொதுக்கற்பாலன என்பது   குறிப்பு. | 
  |  | நோதகவு - நோவுறுத்தலின் தன்மை; நோ - துன்பமுறுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.  தகவு - தன்மை; நோவுதக என்பர் அடியார்க்கு நல்லார். | 
  |  | "நான்.......அடாது" என - நான் வேண்டிக்கொண்டதன் பொருட்டாதல் மறுத்தல் செய்ய   அடாது. செய்ய - செய்தல். நோதக வொழிதற்கு - என்பதும் பாடம். | 
  |  | 344 | 
  | 3499 |                       | அருமறை முனிவ ரான ஐயரைத் தைய லார்தாம் "கருமமீ தாக நீரிக் கடைத்தலை வருகை மற்றும்
 பெருமைக்குத் தகுவ தன்றா; லொற்றியூ ருறுதி பெற்றார்
 வருவதற் கிசையே னீரும் போ"மென மறுத்துச் சொன்னார்.
 |  | 
  |  | 345 | 
  |  | (இ-ள்) அருமறை......தையலார்தாம் - அரிய மறைமுனிவராய் வந்த இறைவரை நோக்கிப்   பரவையாரும்; கருமமீதாக....தகுவதன்றால் - குறித்த செயலிதுவேயாக மேற்பூண்டு நீர் இந்த   வாயிலின்கண் வருவது மேலும் உமது பெருமைக்குத் தக்கதன்றாகும்; ஒற்றியூர்......போமென - ஒற்றியூரின்கண்   நிலைபேறு உடைய உறுதியினைப் பெற்ற அவர் இங்கு வருவதற்கு நான் இசையமாட்டேன்; நீவிரும்   போமின் என்று; மறுத்துச் சொன்னார் - எதிர்மறுத்துக் கூறினர். | 
  |  | (வி-ரை) மறை முனிவரான ஐயர் - ஆன - ஆக்கச்சொல் அவ்வேடம் பூண்டு வந்த என்ற   பொருடந்து நின்றது; ஐயர் - பெருமையுடையோர்; யாவர்க்கும் மேலாம் பெருமையுடைய   இறைவரைக் குறித்து நின்றது. |