388திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3501
தூதரைப் போக விட்டு வரவுபார்த் திருந்த தொண்டர்
"நாதரை யறிவி லாதே னன்னுதல் புலவி நீக்கிப்
போதரத் தொழுதே" னென்று புலம்புவார் பரவை யாரைக்
காதலி னிசைவு கொண்டு வருவதே கருத்துட் கொள்வார்,
 

347

3502
போயவண் மனையி னண்ணும் புண்ணிய ரென்செய் தாரோ
நாயனார் தம்மைக் கண்டா னன்னுதல் மறுக்கு மோதான்
"ஆயவென் னயர்வு தன்னை யறிந்தெழுந் தருளி னார்தாஞ்
சேயிழை துனிதீர்த் தன்றி மீள்வது செய்யா" ரென்று,
 

348

3503
ழியெதிர் கொள்ளத் செல்வர்; வரவுகா ணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்ப ரசைவுட னிருப்பர்; "நெற்றி
விழியவர் தாழ்த்தா" ரென்று மீளவு மெழுவர்; மாரன்
பொழிமலர் மாரி வீழ ஒதுங்குவர்; புன்க ணுற்றார்.
 

349

  3509. (இ-ள்) தூதரை.....தொண்டர் - தூதராக இறைவரைப் போகவிட்டபின் அவர் செய்கை முற்றி மீண்டு வருதலையே எதிர் நோக்கியிருந்த தொண்டராகிய நம்பிகள்; நாதரை...புலம்புவார் - எனது தலைவராகிய இறைவரை அறிவில்லாத நான் நன்னுதலாகிய பரவையினது புலவி தீர்த்து வரும்பொருட்டு வணங்கி வேண்டினேன் என்று புலம்பிடுவார்; பரவையாரை....கருட்துட் கொள்வார் - பரவையாரைக் காதல்பெருக இசைவித்துக்கொண்டே மீள்வார் என்றே கருத்தினுட் கொள்வாராகி,
 

347

  3502. (இ-ள்) போயவள்.....என்செய்தாரோ - இங்கு நின்றும் சென்று அவளது மனையினைச் சேரும் புண்ணியராகிய இறைவனார் என்ன செய்தனரோ?; நாயனார்....மறுக்குமோதான் - இறைவரைக் கண்டால் நன்னுதலாகிய பரவைதான் மறுப்பாளோ?; ஆய என்....என்று - பொருந்திய எனது வருத்தத்தினை அறிந்து எழுந்தருளிய இறைவனார் அவளது சிறு கலகத்தினைத் தீர்த்தாலன்றி மீளமாட்டார் என்றுட்கொண்டு,
 

348

  3503. (இ-ள்) வெளிப்படை - தூதர் மீண்டு வரும் வழி நோக்கி எதிர்கொள்ளும்படி சிறிது தூரம் செல்வார்; அவர் வரக்காணாமையால் மீண்டு வருவார்; மணம் வருந்த மயங்கி நிற்பார்; சோர்வுடனே ஓர் புறம் இருப்பார்; நெற்றிக்கண்ணினையுடைய இறையவர் தாமதித்தார் என்று மீண்டும் எழுவார்; மதனன் பொழியும் மலரம்புகள் மழைபோல வந்து வீழ ஒதுங்குவார்; இவ்வாறு துன்பமுற்றனர்.
 

349

  இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  இவை இறைவர் தூதுபோய் மீளுமளவும் உள்ள இடையில் கால நீட்டிப் பில் தரிக்கலாற்றாது நின்ற நம்பிகளின் மன அலைவும் மெய்ப்பாடுகளும் குறித்தன.
  3501. (வி-ரை) பரவையாரை.....கருத்துட் கொள்வார் - பரவையாரை இசைவுபடுத்தியே இறைவர் மீள்குவர் என்று துணிந்தனராதலின் நாதரைத் தூது விடுத்த அதற்கு இரங்கிப் புலம்புவாராயினர்.
  அறிவிலாதேன் - தகாத செயலாதலின் அறிவில்லேன் என்றார்; பின்னரும் "பிழையுடன் படுவாராகி" (3542) என்பது காண்க.