[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்389

  நன்னுதல் - பரவையார்பாற் கண்ட குணநலம் குறிப்பு; மேற்பாட்டிலும் "நன்னுதல்" (3502) என்பது காண்க.
  தொழுதேன் - தொழுது வேண்டினேன். புலம்புவார் - பலவாறும் வருந்துவார்.
  புலவிநீக்க - என்பதும் பாடம்.
 

347

  3502. (வி-ரை) இப்பாட்டுத், தூதின் முடிவுபற்றி நம்பிகள் மனத்துள் எண்ணிய ஐயங்களையும் அதற்குத்தாமே துணிவு பூண்ட நிலைகளையும் குறித்தது.
  போய் அவள் மனையில் நண்ணும் - இது போழ்தினுள் அவள் மனையில் இறைவர் சேர்ந்திருப்பர் என்று எண்ணிய குறிப்பு.
  என் செய்தாரோ? - ஐயம்; ஐயர் செயல் எவ்வாறு தொடங்கி எவ்வாறு முடிந்ததோ? என்றபடி.
  நாயனார்.....மறுக்குமோ தான் - ஐயத்தில் நீங்கி ஒருவழித் துணிதற்குரிய காரணம்.
  தான் மறுக்குமோ - என்க; மறுக்கமாட்டாள் என்று வினா எதிர்மறை குறித்தது.
  ஆய - மூண்ட; ஆகிய; அறிந்து எழுந்தருளினார்தாம் - தாமே அறிந்து எழுந்தருளினாராதலின் என்று காரணக் குறிப்புப்பட நின்றது;அறிந்து சென்றாராதலின் துனிதீர்த்தன்றி மீளார் - என்ற முடிபுக்குரிய ஏது; துனி - சிறுகலாம், சிறுஊடல்; "துனியும் புலவியும்" (குறள்).
  தீர்த்தன்றி மீள்வது செய்யார் - எதிர்மறைகள் தீர்த்தே மீள்குவர் என உறுதி குறித்தன.
  மீள்வதும் - என்பதும் பாடம்.
 

348

  3503. (வி-ரை) இப்பாட்டு முன் இரண்டு பாட்டுக்களில் கூறியவாறு நம்பிகள் மனத்தினுள் எண்ணமிட்டு இருக்கும் போழ்து, உடல் ஓரிடத்தில் அமைந்து இருக்கவும் தரிக்கவுமாற்றாது உழலும் மெய்ப்பாடுகளைக் குறித்தது. இம்மன நிலையினையும் இதன் மெய்ப்பாடுகளையும் பற்றிப் பரவையார் நிலையினை முன் (3469ல்) விரித்துரைத்தவாற்றாலும் கண்டுகொள்க. தன்மைநவிற்சியணி.
  வழி எதிர் கொள்ளச் செல்வர் - முன் பாட்டில் முடித்தவாறு தூதர் பரவையாரின் துனி தீர்த்த நற் செய்தி கூறுவதை விரைவில் கேட்கும்பொருட்டு எதிர் செல்வார் என்பது.
  அழிவுற - மன அழிந்து; வருந்தி நைந்து.
  அசைவு - சோர்வு; நடுக்கம் என்றலுமாம்.
  நிற்பர் இருப்பர் - மீளவும் எழுவர் - மனம் அழிந்து அலைதலின் உடலும் அவ்வாறே ஒருநிலையில் நிற்கலாற்றாது அலைதல் குறித்தது. நிற்கலாற்றாது, சிறிதுபோது இருப்பர்; இருக்கவுமாற்றாது சிறிது போதில் எழுவர் என்க.
  தாழ்த்தார் - தாமதிக்கமாட்டார் என்றுரைப்பினுமமையும்.
  மாரன்......ஒதுங்குவார் - மாரனது மலரம்புகள் நம்பிகள்பால் செயலற்று வீழ்ந்தன என்பது வீழ என்ற குறிப்பு. ஒதுங்குதல் - அவற்றின் இலக்கினுட்படாது விலகுதல்; புன்கண் - துன்பம்.
 

349

3504
ரவையார் தம்பா னம்பி தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே யறியுமா றணையும் போதில்