[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்41

இவையொன்றுங் காணமாட்டாத வீணர்கள் சுந்தரர், பரவையாருக்குத் தரப் பொன் இறைவரிடம் வேண்டுவதும் இறைவர் தருவதும் பற்றி மனம் போனவாறு பேசுதல் அறியாமை என்றொதுக்குக. "சுந்தரன் பொன்னைப் பாடுவான்" என்பதாதியாக இவ்வறியாமையே பற்றிப் பாட்டும் பாடிவிட்ட புலவனுமுண்டு. என்னே? இவர்கள் மதியீனமிருந்தவாறு? உலகம் உண்மை கண்டு பெரியோர்பால் அபசாரப்படாது உய்வதாக.
கொடைக்கு விழாவில் குறைவறுக்க - கொடைக்கும் விழாவிற்குறை வறுக்கவும். கொடை - பொன் முதலியவற்றைக் கொடுத்தல். இது யாவர்க்கும் செய்யப்படும்; குறைவறுத்தல் - அடியார்க்கு அமுது படைத்தல் முதலாகிய உபசரிப்பு வகை. கொடுப்பதற்குப் பொருளின்மையாகிய குறைவில்லாதிருக்க என்றனர் முன் உரைகாரர்கள். குறைவறுத்தல் - அடியார்க்கு அமுது உறையுள் முதலாக வேண்டிய உபசரிப்புக்கள் செய்தல் என்பது "கண்ணுதலான் திருத்தொண்டனார்க்கெல்லாம் கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க் குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல" (2787); "குறைவறுத்தார் பஞ்சவனார்" (கழிறிற். புரா - 95) "குறைவறுப்பேவி" முதலியவை காண்க. திருவிழாவில் இவ்வாறு செய்யும் நியமங்கள் மிகப் பெரிய சிவபுண்ணியங்களாம் என்பது சிவாகம நூற்றுணிபு. அமர்நீதி நாயனார் புராணம் முதலியவை பார்க்க.
பொன்கொண் டணைவதற்குத் திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய - நம்பிகள் திருவாரூரிலே தமது இறைவர்பாலே பொன் வேண்டிப் பெற்றிருக்கலாமே? எனில், அற்றன்று; தாம் ஆன்மார்த்த நாயகராகக் கொண்டு வழிபடும் உடைய நாதரிடத்துப் பொன் முதலிய எந்தக் காமியங்களையும் வேண்டலாகாது என்பது சிவாகம விதி. பூசாபலன் கன்மபலன் செபபலன் முதலிய எல்லாவற்றையும் உடைய நாதருடைய வாதத் திருக்கையில் அர்ப்பணம் செய்தல் வேண்டும் என்பது சிவாகமங்களில் விதித்த பூசாவிதி. ஆதலின் திருவாரூரில் புற்றிடங் கொண்டவராகிய தம் உடையவர்பால் ஆரூர் நம்பிகள் பொன் முதலியவற்றை வேண்டிற்றிலர். திருப்புகலூரிலும் திருப்பாச்சிலாச்சிராமத்திலும் திருமுது குன்றத்திலுமே சென்று வேண்டிப் பெற்று அதனைத் திருவாரூர் விழாவில் அடியார்க்குக் குறைவறுக்க உதவியருளினர்.
பரவையார் கொடைக்கு - நம்பிகள் தந்த பொருள்களை எல்லாம் திருவாரூரில் பரவையார், அவ்வவர் வேண்டியவாறு கொடுத்துவந்தார் என்பது முன்னர்க் குண்டையூர் நெல்லினை ஆரூரில் அவ்வவர் மனை எல்லைக்குட்பட்ட அளவு அவ்வவரே எடுத்துக் கொள்க எனப் பறை சாற்றுவித்துக் கொடுத்தவாற்றானுமறிக.

46

3201
சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்துவலங்கொண்டு முதல்வர் முன்புவீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி நிகழ்ந்த கருத்து நிகழ்விப்பார்.

47

3202
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்ன மங்கொழிய
வறிது புறம்போந் தருளியயன் மடத்தி லணையார் வன்றொண்டர்
அறிவு கூர்ந்த வன்பருட னணிமுன் றினிலோ ரருகிருப்ப
மறிவண் கையா ரருளாலோ மலர்க்கண் டுயில்வந் தெய்தியதால்.

48

3201. (இ-ள்) வெளிப்படை. சென்று விரும்பித் திருப்புகலூரிலே தேவதேவராகிய இறைவரது திருக்கோயிலில் மணிமுற்றத்தில் வணங்கி வலமாக