| வெம்மைதான் சொல்லி நாமே வேண்டவும் - வெம்மை - விருப்பம் என்று கொண்டு, அவள் விரும்பத் தக்கனவாகிய இதமாகிய நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்லி நாமே வேண்டவும் என்று கூட்டியுரைக்க. |
| வெம்மைதான் சொல்லி மறுத்தாள் - கடிய மொழிகள் கூறி மறுத்தனள் என்று கூட்டியுரைக்கவும் நின்றது; முன் "கரும மீதாக நீரிக் கடைத்தலை வருகை மற்றும் பெருமைக்குத் தகுவ தன்றால்....நீரும்போம்" (3499) என்றது. தான் - வெம்மை தானேயன்றி வேறில்லை. |
| நாமே வேண்டவும் - ஏகாரம் உயர்வு குறித்த பிரிநிலை; வேண்டவும் - உம்மை உயர்வு சிறப்பு; வேண்டிய தன்மை; "நுன்னையான் வேண்டிக் கொண்டதாதலின் மறுத்தல் செய்ய வடாது" (3498) என்று முன் கூறியது. |
| திறமெலாம் கூற - "நம்பி செய்த ஏதங்கள் மனத்துக் கொள்ளா தெய்திய வெகுளி நீங்கி, நோதக வொழித்தற்கு" (3498) என்றது. |
| 352 |
3507 | அண்ணலா ரருளிச் செய்யக் கேட்டவா ரூரர் தாமுந் துண்ணென நடுக்க முற்றே தொழுது"நீ ரருளிச் செய்த வண்ணமு மடியா ளான பரவையே மறுப்பாள்? நாங்கள் எண்ணலா ரடிமைக் கென்ப தின்றறி வித்தீ" ரென்று, | |
| 353 |
3508 | வானவ ருய்ய வேண்டி மறிகட னஞ்சை யுண்டீர் தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர் நான்மறைச் சிறுவர்க் காகக் காலனைக் காய்ந்து நட்டீர் யான்மிகை யுமக்கின் றானா லென்செய்வீர் போதா? தென்றார். | |
| 354 |
| 3507. (இ-ள்) அண்ணலார்......தொழுது - முன்கூறியவாறு இறைவனார் அருளிச் செய்ததனைக் கேட்ட நம்பியாரூரரும் துண்ணென்று நடுக்கமுற்று அவரை வணங்கி; நீர்.....மறுப்பாள் - தேவரீர் அருளிச் செய்த தன்மையினையும் உமது அடியாளாகிய பரவையே மறுக்கவல்லவள்?; நாங்கள்....என்று - நாங்கள் அடிமைத் திறத்தின் வைத்து எண்ணுதற்கு உரியரல்லோம் என்பதனை இன்று அறியச் செய்தீர் என்று கூறி, |
| 353 |
| 3508. (இ-ள்) வானவர்.....உண்டீர் - தேவர்கள் உய்யும் பொருட்டு அலைகடலில் எழுந்த பெருவிடத்தினை உண்டீர்; தானவர்....ஆட்கொண்டீர் - அசுரர்களது முப்புரங்களும் எரிந்து போக அவற்றுள் இருந்த அடியவர்களான மூவர்களை மட்டும் வேவாது தவிர்த்து ஆட்கொண்டீர்; நான்மறை...நட்டீர் - நான்மறை வல்ல சிறுவராகிய மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்து (அவ்வந்தணனை) அடிமை கொண்டீர்; யான்மிசை......என்றார் - இத்தன்மையுடைய பெருங்கருணையாளராகிய உமக்கு நான் இன்று மிகையானால் மீண்டு வாராது வேறென் செய்வீர்? என்றார். |
| 354 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3507. (வி-ரை) துண்ணென நடுக்க மெய்தி - உறுதி செய்தணைந்தாரென்றே கொண்டு எய்திய முன்கூறிய மகிழ்ச்சியெல்லாம் உடனே மாறி அதிவிரைவில் மெய்ந் நடுக்கமுற்று. |
| நீர்......மறுப்பாள் - தலைவராகிய நீர் சொன்ன கட்டளையை அடியாளாகிய பரவையோ மறுக்க வல்லவள்? ஏகார வினா வல்லளல்லள் என்று எதிர் மறை |