[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்393

  குறித்தது; வண்ணமும் - வண்ணத்தினையும்; "வண்ணமும் வடிவும்" (திருஞா. தேவா); வண்ணம் - கட்டளை; பொருள்; உம்மை உயர்வு சிறப்பு.
  நாங்கள்....என்பது - எண்ணலார் - எண்ணப்படாதவர்; எண்ணத்தில் வரத்தகாதவர்; அடிமைக்கு - அடிமைக்காக; அடிமையின் பொருட்டு; நாங்கள் - பரவையாரையும் உளப்படுத்திய பன்மை; பரவையாரை உளப்படுத்திய தென்னை? எனின், "என்னைத் தன்னடி யானென் றறிதலுந், தன்னை நானும் பிரானென்றறிந்தெனே" (குறுந்) என்றவாறு, பரவையார் மறுத்தற்குக் காரணம் பிரானென் றறியாமை என்பார் "எண்ணலார் அடிமைக்கு" என்றார்; அவளை அடிமை என்று எண்ணாமையால் இசைவித்தல் செய்யாமையாலும், தமது கருத்து முற்றுவித்தல் செய்யாமையின் தம்மையும் அடியானென்றறியாமை புலப்படுதலானும் நாங்கள் அடிமைக்கு எண்ணலார் என்று உளப்படுத்திக் கூறினார்; புலவி நீக்கிச் சேர்த்தல் இருபாலும் சாரும் செயலாதலின் "நாங்கள்" என்றார் என்றலுமாம். புலவியினால் பிரியினும் அன்பாற் பிரியாமையின் உளப்படுத்தியவாறுமாம்.
  என்பது - என்பதனை; இரண்டனுருபு தொக்கது.
  இன்று அறிவித்தீர் - இதுவரையும் நாங்கள் அடியோம் என்றெண்ணியிருந்தது தவறு என்பதனை இன்று அறியும்படி செய்தீர்; அன்புரிமை காரணமாகத் தலைவரிடம் பிணங்கிக் கூறும் மொழி; மேல் வரும் பாட்டில் "யான் மிகை உமக்கின்றானால்" (3508) என்றதும், அதன்மேல் "இன்று என் அடிமை நீர்வேண்டாவிட்டால்" (3509) என்றதும் இக்கருத்து.
  என்று - என்றார் என வரும்பாட்டுடன் முடிக்க.
  எண்ண ஆர் அடிமைக்கு என்பது பாடமாயின் அடிமையாக எண்ணுதற்கு நான் ஆர்? - என்ன பொருத்தமுடையேன்? - என்க; "யானா ரென்னுடை யடிமை தானியாதே" (திருவிசைப்பா).
 

353

  3508. (வி-ரை) நஞ்சையுண்டீர் ஆட்கொண்டீர் - காய்ந்து நட்டீர் - என்ற மூன்றுதாரணங்களும் இறைவரது கருணைப் பெருக்கினை விளக்கி அவர் அடியாரைக் காக்கும் தன்மையை எடுத்துக்காட்டின; இத்தன்மையுடைய நீர்என்னைக் காவா தொழியின் உமக்கு யான் மிகை என்றதே உமது துணிபு என்று கூறி நொந்துகொண்டவாறு. சிலரேயாயினும் பலரேயாயினும் செய்யும் கருணைப்பெருக் குடையீர்.
  மூவர் - திரிபுரங்களில் இருந்த அடியார்களான மூன்று அசுரர்கள்; பரமவிரதன், பரமயோகன், பரமகுணன் என்பவர்; வேறு பெயர்களு முரைப்பர். தவிர்த்து - வேவாமல் தடுத்து; "மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்" (தேவா - நம்பி); "மூவார் புரங்க ளெரித்த வன்று மூவர்க் கருள்செய்தார்" (ஞான. தேவா).
  நான் மறைச்சிறுவர் - மார்க்கண்டேயர்,.
  காய்ந்து நட்டீர் - காய்ந்து கருணை செய்தீர்.
  மிகை - வேண்டத் தகாதவன்; வெறுத்துத் தள்ளப்பட்டவன்.
  போதாது என் செய்வீர் - வாளா திரும்பி வராமல் வேறு என்ன செய்வீர்; போதாது - திரும்பிவராது; இன்று உமக்கு நான்மிகையானால் என்க; இன்று - முன்வலிந்தும் ஆட்கொள்ளவேண்டி நின்ற யானே இன்று உமக்கு மிகையானேன் என்ற குறிப்பு; மேல் "அன்று வலிய ஆட்கொண்ட பற்றென்?" (3509) என்பதும் காண்க.
  மூவரைத் தடுத்தாட் கொண்டீர் - என்பதும் பாடம்,
 

354