|
  |  | இன்னம் - மேலும் ஒருமுறை; குறுகுமா - குறுகும்படி; ஆறு என்பது ஈறுதொக்கு   ஆ என நின்றது. | 
  |  | வெம்புறு துயர் - உள் வெதும்புதலினால் உளதாகும் துன்பம். | 
  |  | வினை எலாம் விளைக்க வல்லார் - முன்னர் "வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி"   (3500) என்றதனுள் விளையாட்டாவது அவ்வவரும் தத்தம் வினைப்பயன்களை அவ்வவரே துய்க்கும்படி   செய்து பார்த்திருத்தல்; அரனது விளையாட்டாவது வினையை விளைவித்தலே - அனுபவிக்கச் செய்து   பார்த்திருத்தலே - யாம் என்பது. "வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரித, லெல்லா முடனே   யொருங்கிசைந்து - செல்காலை; முட்டாமற் செய்வினைக்கு முற்செய்வினைக்குஞ் செலவு, பட்டோலை   தீட்டும் படிபோற்றி....அல்ல லுறுத்து மருஈரகங் கண்டுநிற்க, வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்;   இன்ன வகையாலிருவினைக ணின்றருத்தி, முன்னைமுத லென்ன முதலில்லோ-னல்வினைக்கண்; எல்லா வுலகு   மெடுப்புண் டெடுப்புண்டு, செல்காலம் பின்னரகஞ் சோரமே, - நல்லநெறி, யெய்துவதோர் காலந்தன்   னன்பரைக்கண் டின்புறுதல், உய்வுநெறி சிறிதே யுண்டாக்கி...." (போற்றிப்பஃறொடை) என்றற்   றொடக்கத்த திருவாக்குக்கள் காண்க. இறைவர் வினையெலாம் விளைக்கும் தன்மைபற்றி மேலும் மெய்கண்ட   ஞானநூல்களுட் கண்டுகொள்க. | 
  |  | வினை வல்லார் - முன்முறை செயல் முற்றுப்பெறாமையின் காரணக் குறிப்பு. | 
  |  | கூடுமா கூறுகின்றோம் - என்பதும் பாடம். | 
  |  | 356 | 
  | 3511 |                       | மயங்கிய நண்ப ருய்ய வாக்கெனு மதுர வாய்மை நயங்கிள ரமுத நல்க நாவலூர் மன்னர் தாமும்
 "உயங்கிய கலக்க நீக்கி யும்மடித் தொழும்ப னேனைப்
 பயங்கெடுத் திவ்வா றன்றோ பணிகொள்வ"தென்றுபோற்ற,
 |  | 
  |  | 357 | 
  | 3512 |                       | அன்பர்மேற் கருணை கூர வாண்டவர் மீண்டுஞ்         செல்லப் பின்புசென் றிறைஞ்சி நம்பி பேதுற லோடு மீண்டார்;
 முன்புடன் போதா தாரு முறைமையிற் சேவித் தேகப்
 பொன்புரி சடையார் மாதர் புனிதமா ளிகையிற் சென்றார்.
 |  | 
  |  | 358 | 
  |  | 3511. (இ-ள்) மயங்கிய...நல்க - தெளிவுறாது மயக்கமுற்ற நண்பராகிய நம்பிகள் உய்யும்   பொருட்டுத் தமது திருவாக்காகிய இனிமையும் உண்மையும் இன்பமும் பொருந்திய அமுதத்தினை இவ்வாறு   அருளியிட; நாவலூர் மன்னர் தாமும் - திருநாவலூரர் பெருமானாகிய நம்பிகளும்; உயங்கிய....என்ற   போற்ற - வருத்தம் விளைத்த கலக்கத்தினை நீக்கி உமது திருவடித் தொண்டனாகிய என்னை அச்சம்   கெடுத்து இப்படி யன்றோ தொண்டு கொள்வது! என்று துதிக்க, | 
  |  | 357 | 
  |  | 3512 (இ-ள்) அன்பர்....செல்ல - அன்பர்பாற் கருணை பெருக இறைவனார் இவ்வாறு   மீளவும் செல்வாராக; பின்பு சென்று....மீண்டார் - அவர் பின்னே சிறிது தூரம் சென்று வணங்கி   நம்பிகள் மயக்கத்தோடு மீண்டனர்; முன்பு....ஏக - முன் முறையிலே உடன் செல்லாதவர்களும் முறைமைப்படி   சேவித்துப் பின்செல்ல; பொன்புரி....சென்றார் - பொன்போன்று ஒளிவிளங்குகின்ற புரித்த   சடையினையுடைய இறைவரும் பரவையாரது தூய திருமாளிகையிற் சென்றருளினர். | 
  |  | 358 | 
  |  | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |