42திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

வந்து முதல்வரது திருமுன்பு நிலமுறவிழுந்து வணங்கிப் பழைய மரபின் வரும் திருவடித் தொண்டிலே ஊறிய அன்பினாலே துதித்து எழுந்து நின்று திருப்பதிக இசையினைப் பாடித் தாம் எண்ணி வந்த கருத்தினை விண்ணப்பிப்பாராகி;

47

3202. (இ-ள்) சிறிது...ஒழிய - சிறிது நேரம் கும்பிட்டு நின்று பின்னர் மனம் அங்கு நிற்க; வறிது...அணையார் - (நினைந்த பொன் பெறாது) வறிதே புறத்துப் போந்து பக்கத்தில் எந்தத் திருமடத்திலும் சென்று அணையாமல்; வன்றொண்டர்...அருகிருப்ப - வன்றொண்டராகிய நம்பியாரூரர் அறிவு பெருகிய அன்பர்களுடனே அழகிய திருமுற்றத்தில் ஒரு பக்கமாக எழுந்தருளியிருப்ப; மறி...எய்தியதால் - மானேந்திய வண்மையினையுடைய இறைவரது திருவருளாலேயோ (அறியோம்) அவரது மலர்போன்ற திருக்கண்கள் துயில்வந்து பொருந்தப் பெற்றன.

48

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.
3201. (வி-ரை) சென்று...நிகழ்விப்பார் - நினைந்தபின் திருப்புகலூர் சேர்ந்தருளியதும், சேர்ந்தபின் வழிபட்டுப் பாடி நின்றதும் இவ்வாறு ஒரு பாட்டிற் சுருங்கக் கூறியருளியது செயலின் விரைவு குறித்தற்கு.
தொன்றுமரபின் அடித்தொண்டு தோய்ந்த - பழமையாக வரும் திருவடி வழிபாட்டு முறையில் உள்ளூறிய; மரபு - நெறி; குருமரபின் வந்த சிவ தவநெறி; இவ்வாறன்றி மரபு வழிவழி வந்த குலம் என்பாருமுண்டு; தொன்று - தொன்று தொட்டு வந்த.
நிகழ்வித்தல் - விண்ணப்பித்தல்; நிகழ்விப்பார் - முற்றெச்சம்; நிகழ்விப்பார் - கும்பிட்டு என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.
நினைந்த - முன்பாட்டில் நினைந்து என்ற எண்ணம்.
பதிகவிசை பாடி - இப்பதிகம் கிடைத்திலது!

47

3202. (வி-ரை) சிந்தை முன்னம் அங்கு ஒழியப் புறம்போந்து - மனம் அங்குத் தங்கி நிற்கத் திருமேனி மட்டில் புறமுற்றத்திற் போந்து. அயல் மடத்தில் அணையார் முன்றிலின் அருகிருப்ப என்க. வழிபாட்டு நேரங்களிலன்றி மற்றை நேரங்களில் திருக்கோயிலினும் திருமுற்றத்திலும் தங்குதல் பெரியோர் மரபன்று; விதியுமன்று. என்னை? அவ்வாறு தங்கின் உடம்பின் உபாதிவசத்தாலும் மற்றும் பலப் பல அபசாரங்களுக்கு இடமாகுமாதலானென்க; அருகு - ஒருபுடை - பக்கம்.
அருளாலோ - திருவருளாலேயோ? யாம் அறியோம் என்றபடி.
திருமுற்றத்தில் துயிலலாகாது என்பது விதியாதலின் அதற்கு மாறாக; வழிபாட்டுமுறையும் விதியுமறிந்து ஒழுக்கத்தினும் சிறந்த நம்பிகளுக்குத் துயில் வந்தது. அவரும் துயில் கொண்டனர் எனின், அஃது இறைவர் திருவருளினாலன்றி நேராது என்பார் அருளாலோ என்ற உடன்பாட்டு வினாவினாற் கூறினார்; "தம் மேலைச் சார்புணர்ந்தோ?" (1961) "தம்பெருமா னருளாலேயோ" (1891) என்பன முதலியவை பார்க்க. அருளாலே என்ற பாடமுமுண்டு.
அறிவு கூர்ந்த - நம்பிகளுடனிருக்கும்பேறு வாய்த்தவர்களின் பண்பு.

48

3203
துயில்வந் தெய்தத் தம்பிரான் றோழ ரங்குத் திருப்பணிக்குப்
பயிலுஞ் சுடுமட் பலகைபல கொணர்வித் துயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச்சிகழி முடிமே லணையா வுத்தரிய
வெயிலுந் தியவெண் பட்டதன்மேல் விரித்துப் பள்ளி மேவினார்.

49