| 3520. (இ-ள்) துளிவளர்.........விண்ணப்பஞ் செய்வார் - துளிகளாக வந்து பெருகும் கண்ணீர் வழியத் தொழுது விண்ணப்பஞ் செய்வாராகி; ஒளிவளர்....வருந்த - ஒளி வளர்தற் கேதுவாகிய செம்மை தருகின்ற திருவடிகள் நோவ; ஓர் இரவு - ஒர் இராத்திரி முழுதும்; மாறாது - மாறுதலில்லாது; அளிவரும் அன்பர்க்காக - நிலைபெற்ற அன்பினை உடைய அடியவர் பொருட்டு, அங்கொடிங்கு....எளிவருவீருமானால் - அங்கும் இங்குமாக அலைவீராகி எளிதாக எழுந்தருளுவீருமானால்; என்...என்றார் - இசைவுபடாது வேறென் செய்ய வல்லேன் என்று சொன்னார். |
| 366 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3519. (வி-ரை) பெருந்தடங் கண்ணினாரும் - முன்னர் "அங்கயல் விழியினாரும்" (3495) என்ற இடத்துப் பரம ராவ தறியாத நிலை; இங்கு அறிந்தபோது கண்ணோட்டம் பரந்து சிறந்ததென்று குறிப்பித்தது கவிநயம்; பெரும் - தடம் - ஒரு பொருட் பன்மொழி மிகுதி குறித்தது. குறுக்கும் நெடுக்குமாக நீண்டு அகன்ற எனினுமாம். |
| அஞ்சி - பிரானாரை முன்னர் மறுத்து எதிர்மொழி கூறி - வலிந்து - போக்கியதனை எண்ணியஅச்சம். "அருமறை....நீரோ? என்பது இதன் காரணம் குறித்தவாறு. |
| அடியேன் செய்த இருந்தவப் பயனாம் என்ன எய்திய செய்த - முன் செய்த; இருந்தவப் பயனாம் என்ன - பெருந் தவத்தினாலன்றி இறைவர் இவ்வாறு ஒரு முறைக் கிருமுறையும் வலிய எழுந்தருளி ஆட்கொள்ளும் பேறுகிட்டாதென்பது; எய்திய -இப்பொழுது எழுந்தருளிய. |
| நீரோ - மறையோராகி முன் அணைந்தீர் - என்று கூட்டுக. என்பார் - முற்றெச்சம். |
| எய்தினர் - என்பதும் பாடம். |
| 365 |
| 3520. (வி-ரை) துளிவளர் கண்ணீர் வார - துளிகளாக முன்னர்த் தோன்றிப் பின் ஊற்றுப் போலத் தொடர்ந்து பெருகிக் கண்ணீர் வழிய. |
| ஒளிவளர் செய்ய பாதம் - அடியார்கள்பால் சிவஞான ஒளி பெருகச் செம்மைதரும் திருவடி; "ஒளிவளர் விளக்கே" (திருவிசைப்பா). |
| ஓர் இரவு - இரவு முழுமையும் என முற்றும்மை தொக்கது; ஓர் - ஒப்பற்ற என்ற குறிப்பும் காண்க. |
| மாறாது அளிவரும் அன்பர் - நம்பிகள்; அளி - இறைவர்பால் வைத்த உள்ளூறிய அன்பு;" அளிவள ருள்ளத் தானந்தக் கனியே" (திருவிசைப்பா); மாறாது - இடையறாது; "ஆரூரானை மறக்கலுமாமே" "மாணிக்கத் தைமறந் தென்னினைக் கேனே" "எனக்கார் துணை நீயலதே" "உன்னையல்லா லினி யாரை நினைக்கேனே" "காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் கருதீ ராகிலும் கருதி, நானே லும்மடி பாடுத லொழியேன்" "எங்ஙனநான் பிரிந்திருக்கே னென்னாரு ரிறை வனையே" "எழுபிறப்பும் மெங்கணம்பி கண்டாயே" "எனையஞ்ச வென்றருளா யாருறவெனக்கு" "என்னை நான் மறக்குமா றெம்பெருமானை" என்றற்றொடக்கத்த எண்ணிறந்த திருவாக்குக்கள் நம்பிகளது திருவுள்ளத்தின் மாறாத அளிவரும் அன்புடைமையினை விளக்குதல் காண்க. இவ்வாறன்றி, மாறாது என்பதனை "ஓர் இரவும் மாறாது" என்று கூட்டி ஓர் இரவு முழுமையும் இடைவிடாது என்றுரைப்பினும் அமையும். "அங்கொடிங்கு உழல்வீராகி எளிவருவீருமானால் என்பது இக்கருத்துப்பட நின்றதும் காண்க. மாறாமை - மனம் மாறுபடாமையுமாம். |