| (வி-ரை) ஆவி அளிக்கும்படி - "அவள்பால் இன்று மேவுதல் செய்யீராகில் விடுமுயிர்" (3509) என்றபடி நீங்கும் "நிலையிலிருந்த உயிரினைத் தரும்படி; ஆவி - ஆவி போன்ற பரவையை என்ற குறிப்புப்பட உரைத்தலும் ஆம்; என்பால் - என்பாற் பொருந்த; "என்னின் னுயிரா மன்னமென" (297); "ஆவி நல்குவ ராரூரை யாண்டவர், பூவின் மங்கையைத் தந்தெனும்" (302) என்று முன் கூறிய கருத்துக்கள் காண்க; மேற்பாட்டிலும் "உயிர் நல்கும்" (3525) என்பதும் காண்க. |
| இன்னமும் என் செய்து மீள்வாரோ? என்க; இன்னமும் - முன்னர்ச் சென்ற காரியம் நிறைவு செய்யாது மீண்டமை போல இன்னமும் என உம்மை இறந்தது தழுவிற்று; என் செய்து - நிறைவு செய்வதும் அது செய்யாமையும் அவர் செயலே யன்றி மற்றும் உயிர்களின் செயலாவது ஒன்றுமில்லை என்பதும் குறிப்பு. |
| இடர் கூர - கூர்தல் - மிகுதல்; கூர - கூர்தலினால்; கூர - நேரும் கண்ணிணை-முகிழார்-எனக் காரணப் பொருளில் வந்தது. |
| வீதி முன்புற நேரும் கண்ணிணை - தானும் முகிழார் - வீதியினை எதிர் நோக்கிய வண்ணம் பார்த்த கண்கள் இமையாராயினர்; முன்புற நேரும் - இறைவரது வரவினை எதிர்நோக்கும். |
| தானும் - உம்மை முற்றும்மை; சிறப்பும்மையுமாம்; மனம் இடர்கூர வருந்துதலோடு கண் தானும் என்றலுமாம். முகிழ்த்தல் - இமைத்தல் - மூடுதல். |
| முகிழாதால் - என்பதும் பாடம். |
| 370 |
3525 | அந்நிலை மைக்கண் மன்மதன் வாளிக் கழிவார்தம் மன்னுயிர் நல்குந் தம்பெரு மானார் வந்தெய்த முன்னெதிர் சென்றே மூவுல குஞ்சென் றடையுந்தாள் சென்னியில் வைத்"தென் சொல்லுவ" ரென்றே தெளியாதார், | |
| 371 |
3526 | "எம்பெரு மானீ! ரென்னுயிர் காவா திடர்செய்யுங் கொம்பனை யாள்பா லென்கொடு வந்தீர் குறை?" யென்னத், தம்பெரு மானுந்"தாழ்குழல் செற்றந் தணிவித்தோம்; நம்பி யினிப்போய் மற்றவ டன்பா னணு" கென்ன, | |
| 372 |
3527 | நந்தி பிரானார் வந்தருள் செய்ய நலமெய்துஞ் சிந்தையு ளார்வங் கூர்களி யெய்தித் திகழ்கின்றார் "பந்தமும் வீடும நீரருள் செய்யும் படிசெய்தீர் எந்தை பிரானே! யென்னினி யென்பா லிடர்?"என்றார். | |
| 373 |
| 3525. (இ-ள்) அந்நிலைமைக் கண்....எய்த - (நம்பிகள்) அந்நிலையில் நின்ற போது மன்மதனது அம்புகள் வீழ இடைந்த நம்பிகளது நிலை பெற்ற உயிரினைத் தந்தருளும் தமது பெருமானார் வந்து சேர; முன் எதிர்....வைத்து - அவர் திரு முன்பு எதிர்கொண்டு சென்றே மூவுலகங்களும் சென்று அடையும் அவரது திருவடிகளைச் சிரத்தில் வைத்துப் பணிந்து; என்......தெளியாதார் - என்ன சொல்வார் என்றே தெளியாதாராகி, |
| 371 |