| வென்று உயர் சே - வெற்றியும் உயர்வும் பொருந்திய இடபம்; "சேவேந்து வெல்கொடியான்"; சே - இடபம். |
| வீதிவிடங்கப் பெருமாள் - வீதியில் எழுந்தருளும் சுயம்பு, தியாகேசர். |
| பொன் திகழ் வாயிற் கோயில் - பொன்னாற் பொலியச் செய்த திருவாயில்; பொன் - இலக்குமி என்று கொண்டு இலக்குமி வரங்கிடந்து விளக்கமுற்ற என்றலுமாம்; கோயில் - பூங்கோயில். |
| புவி வாழப் புகுந்தார் - புவிவாழ்தல் - அத்திருக்கோயிலில் விளங்க வீற்றிருப்பதனால் அங்கு வந்தடையும் உயிர்கள் எல்லாம் உய்தி பெறுதல். |
| 374 |
| வேறு |
3529 | தம்பிரா னார்பின் சென்று தாழ்ந்தெழுந் தருளான் மீள்வார் "எம்பிரான் வல்ல வா"றென் றெய்திய மகிழ்ச்சி யோடும் வம்பலர் குழலார் செம்பொன் மாளிகை வாயி னோக்கி நம்பியா ரூரர் காத னயந்தெழுந் தருளும் போது | |
| 375 |
3530 | முன்றுயி லுணர்ந்து சூழ்ந்த பரிசன மருங்கு மொய்ப்ப மின்றிகழ் பொலம்பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த மன்றல்செய் மதுர சீத சீகரங் கொண்டு மந்தத் தென்றலு மெதிர்கொண் டெய்துஞ் சேவக முன்பு காட்ட, | |
| 376 |
3531 | மாலைதண் கலவைச் சேறு மான்மதச் சாந்து பொங்குங் கோலநற் பசுங்கற் பூரங் குங்கும முதலா யுள்ள சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும்பூ ணாடை வர்க்கம் பாலள பிறவு மேந்தும் பரிசன முன்பு செல்ல, | |
| 377 |
3532 | இவ்வகை யிவர்வந்தெய்த, வெய்திய விருப்பி னோடு மைவளர் நெடுங்கண் ணாரு மாளிகை யடைய மன்னுஞ் செய்வினை யலங்கா ரத்துச் சிறப்பணி பலவுஞ் செய்து நெய்வளர் விளக்குத் தூப நிறைகுட நிரைத்துப் பின்னும், | |
| 378 |
3533 | பூமலி நறும்பொற் றாமம் புனைமணிக் கோவை நாற்றிக் காமர்பொற் சுண்ணம் வீசிக் கமழ்நறுஞ் சாந்து நீவித் தூமலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத் தாமும் மாமணி வாயின் முன்பு வந்தெதி ரேற்று நின்றார். | |
| 379 |
| 3529. (இ-ள்) தம்பிரானார்...மீள்வார் - தமது பெருமானாரின், பின்பு சிறிது தூரம் சென்று வழிவிட்டு வணங்கி எழுந்து அருள்விடை பெற்று மீள்வாராகி; எம்பிரான்...மகிழ்ச்சியோடும் - எமது பெருமானது "எல்லா வல்லவாறு தான் என்னே!" என்று, பொருந்திய மகிழ்ச்சியுடனே; வம்பலர்....எழுந்தருளும் போது - மணம் விரிகின்ற கூந்தலையுடைய பரவையாரது செம்பொன் விளங்கும் திருமாளிகையின் வாயிலை நோக்கி நம்பியாரூரர் காதலால் விரும்பி எழுந்தருளும்பொழுது, |
| 375 |
| 3530. (இ-ள்) முன்...மொய்ப்ப - முன்னரே துயில் நீங்கி விழித்து எழுந்து சூழ்ந்த பரிசனங்கள் பக்கத்தில் நெருங்கிச் சூழ; மின்திகழ்....வாழ்த்த - ஒளியுடைய அழகிய தெய்வ மலர்மழையினைத் தேவர்கள் பொழிந்து வாழ்த்த; |