[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்43

(இ-ள்) துயில் வந்தெய்த - அவ்வாறு கண்களில் துயில் வந்து பொருந்த; தம்பிரான் றோழர்....உயரம்பண்ணி - தம்பிரான் தோழராகிய நம்பி ஆரூரர் அங்கு இறைவர் கோயில் திருப்பணிக்குப் பயன்பட நின்ற சுட்ட மட்பலகைகளுட் பலவற்றைக் கொணரச் செய்து உயரமாக ஆக்கி; தேன்...மேவினார் - தேன் உண்ணும் வண்டுகள் பொருந்திய மலர் மாலை சூடிய குடுமியினையுடைய திருமுடிக்குத் தலையணையாக உத்தரியமாகிய ஒளியுடைய வெண்பட்டினை அதன்மேல் விரித்துப் பள்ளி கொண்டார்.
(வி-ரை) துயில்வந்தெய்த - இயல்பாக வரவேண்டாத நேரத்தில் வந்து எய்திற்று என்பது குறிப்பு.
தம்பிரான் தோழர் - தோழராதலின் இச்செயலுக்கு உரிமைப்பாடு உடையவர் என்பது குறிப்பு. முன்பாட்டிலும் இவ்வாறே அயல் மடத்தில் அணையாது முன்றிலினில் இருந்துகிடந்த செயல் வன்றொண்டராந் தன்மை என்ற குறிப்புப் பற்றியதும் காண்க.
சுடுமட்பலகை - செங்கல். அந்நாளில் சோழநாட்டில் உள்ள கோயில்கள் பெரும்பான்மையும் செங்கல்லினாலே திருப்பணி செய்யப்பட்டன என்பது சரித உண்மை. அவை மிக நன்றாகவும் செம்மையாகவும் செம்பொற்கட்டிகள் போல அமைந்தன என்பதும் பழைய கோயில்களிற் காணலாம். பலகை என்ற குறிப்புமது. மரப்பலகை இழைத்துச் செம்மை செய்தது போல என்பது. சுடும் - சுடப்பட்ட.
பலகொணர்ந்து உயரம் பண்ணி - உயரமுடைய தலையணையின் மேல் தலையைக் கிடத்தித் துயில வேண்டுமென்பது உடற்சுகத்துக்குரிய நூல் விதி; பல என்றதனால் இரண்டுக்கு மேற்பட்டதென்பது குறிப்பு. முன்னைநாட் செங்கல் அளவு கருத மூன்று அல்லது நான்கும் கொள்ளலாம். அணியா என்று பாடங்கொண்டு முடியிற்சூடிய மலர்மாலைகளைக் கற்றையாக்கி வைத்துக் கொண்டு என்றுரைப்பாருமுண்டு.
முடிமேல் அணையா - தலையை மேல் வைக்கும் தலையணையாக; - ஆக என்பது ஈறு கெட்டு ஆ என நின்றது.
தேன்....முடி - திருவருளாணையின்படி (273) நம்பிகள் மண வேள்வியில் அன்று கொண்ட கோலத்துடனே உலகில் சரித்தருளினாராதலின் முடியில் எப்பொழுதும் மலர்மாலை அணிந்தருளுவர்; தோழர் என்ற குறிப்பும் காண்க.
உத்தரிய...விரித்து - வலிந்த பரிசமுடைய மட்பலகைகளைத் தலையணையாக்கிக் கொள்ளத் தலையைச் சார்த்தற்குரியபடி மென்மை தருதற்கு உத்தரிய வெண்பட்டினை அதன்மேல் விரித்தருளினார். உத்தரியம் வெண்பட்டாலியன்றது. நம்பிகள் கொண்ட தோழர் கோலத்துக்குரியது. திருநாகைக்காரோணப் பதிகமும் பிறவும் பார்க்க.
முடிமேலணியா - என்பதும் பாடம்.

49

3204
சுற்று மிருந்த தொண்டர்களுந் துயிலு மளவிற் றுணைமலர்க்கண்
பற்றுந் துயினீங் கிடப்பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையா ரருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச்செம்
பொற்றிண் கல்லா யினகண்டு புகலூ ரிறைவ ரருள்போற்றி,

50

3205
தொண்டருணர மகிழ்ந்தெழுந்து துணைக்கைக் கமல முகைதலைமேற்
கொண்டு கோயி லுட்புக்குக் குறிப்பி லடங்காப் பேரன்பு