412திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  (கோவை) என்றபடி, அது மாறிக் கண்ணோட்டமுடன் நீண்டன என்பது குறிப்பு. "பெருந்தடங் கண்ணி னாரும்" (3519) என்றலும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; மைவளர் என்றது இப்பொழுது மையிட்டு அணி செய்யப்பட்டதென்ற குறிப்புமாம்.
  அடைய - முற்றும்.
  மன்னும்......சிறப்பணி - நிலைபெறச் செய்த கைபுனைந்த அலங்காரங்களைத் திருத்திச் சிறக்கச் செய்து; இவை நிலையான அலங்காரங்களைச் சிறப்புக் காணக் கவின் செய்தல்; இப்போது செய்யும் அலங்காரங்கள் மேற்பாட்டிற் கூறுவார்.
  நெய்வளர் விளக்கு - நெய்விளக்குக்கள் குணம் மிகுந்தன; தூபம் - வாசங்கமழ் புகை.
  நிரைத்தல் - வரிசைபட அமைத்தல்.
 

378

  3533. (வி-ரை) பூ....தாமம் - பூமாலைகள்; பொன் - அழகு; நறுமை - மணம்; தாமம் - பூமாலைகள்; மணமலர் மாலைகள்.
  மணிக்கோவை - மணிமாலைகள்; இவை வேறு.
  நாற்றுதல் - அங்கங்கும் அளவு பெறத் தொங்க வைத்தல்.
  பொற்சுண்ணம் - வாசனைப் பொடி; வீசுதல் - பலவிடமும் பரவத் தூவுதல்; நீவுதல் - மெழுகுதல்; காமர் - விரும்பத்தக்க; காமம் மருவும் என்பர் நச்சினார்க்கினியர்.
  சூழ்ந்த தோகையர் - தோழியர்; வாழ்த்தல் - பாராட்டுதல்.
  தூமலர் வீதி வாயில் முன்பு - என்க; வீதிவாயில் என்றது முன்வாயில்; வீதி தோகையர் - அத்தெருவிலுள்ள பெண்கள் என்றுரைத்தனர் முன் உரைகாரர்; தூமலர் வீதி - இப்பொழுது மலர்மாலைகளால் அணி செய்த வீதி; தேவர்கள் பொழிந்த தெய்வ மலர்கள் (3530) நிறைந்த வீதி என்ற குறிப்புமாம்.
  வாயில் முன்பு - வாயிலின் வெளிப்புறத்து; முதலில் இறைவர் வந்து அழைத்ததும், (மணிவாயில் - 3492) அப்போது மீண்டு அவர் போயினபின் தாம் வாயிலே பார்த்து அழிந்ததற் கிடமாகியதும் ஆகிய அத்திருவாயிலே இப்போது வரவேற்க நின்றது என்பது குறிப்பார் தூ மணி - என்ற இரண்டு அடைமொழிகளாற் சிறப்பித்தார்.
  தாமும் - தோழியர்களுடனே தாமும் என எச்சவும்மை. புலந்திருந்த தாமும் எனச் சிறப்பும்மையுமாம்.
  எதிர் ஏற்று நின்றார் - எதிர் வரவு ஏற்கும் நிலையில் நின்றனர். இருதிறமும் ஒரே காலத்தில் அன்பினா னிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பிரிப்பின்றி ஒரு முடிபாகத் தொடர்ந்து இவ்வைந்து பாட்டுக்களாற் கூறிய நயமும், நான்காவது பாட்டில் இருவர் செய்கையும் சேரவைத்துக் கூறிய நயமும், புலவி தீர்ந்த பின்பு இருபாலும் அன்பு நிறைந்த நிலையின் நிகழ்ச்சிகளை இழுமென்னும் ஓசையின் வேறு யாப்பாற் றொடங்கிக் கூறிய நயமும், முன் கூறிய ஐஞ்சீர்க் கலிநிலைத்துறை விருத்தத்தினின்று இங்கு அறுசீர்க் கழிநெடில் விருத்தமாகத் தொடங்கிய நயமும் கவிநலங்களாம்.
 

379

3534
ண்டுலாங் குழலார் முன்பு வன்றொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளக் காதல் வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநா ணச்சங் கூர வணங்கவக் குரிசி லாருந்
தண்டளிர்ச் செங்கை பற்றிக் கொண்டுமா ளிகையுட் சேர்ந்தார்.
 

380